12th January Daily Current Affairs – Tamil

ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் தூரம் 3 மீட்டராக குறைப்பு:

  • ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 3 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.
  • விண்வெளியில் இந்திய ஆய்வு நிலையத்தை 2035 – ஆம் ஆண்டுக்குள் அமைக்கும் முன்னோட்ட முயற்சியாக ஸ்பேடெக்ஸ் எனும் ஆய்வுத் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது.
  • இதற்காக வடிவமைக்கப்பட்ட ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த டிசம்பர் 30 – ஆம் தேதி விண்ணில் செலுத்தி புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.
  • தற்போது இவ்விரு விண்கலன்களும் ஒரே சுற்றுப்பாதையில் குறிப்பிட்ட தொலைவு இடைவெளியில் ஒன்றன்பின் ஒன்றாக வலம் வருகின்றன.
  • ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களுக்கான இடைவெளி 15 மீட்டராக முதலில் குறைக்கப்பட்டது, தற்போது 3 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீா் சோன்மார்க் சுரங்கப்பாதை:

  • ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகா்-கார்கில் தேசிய நெடுஞ்சாலையில் சோன்மார்க் சுரங்கப்பாதையை பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
  • கடல் மட்டத்திலிருந்து 8,650 அடி உயரத்தில் அமைந்த இச்சாலையின் மேம்பாட்டு திட்டம் ரூ 2,700 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • சோன்மார்க் சுரங்கப்பாதை செயல்பாட்டுக்கு வரும் சூழலில், ஸ்ரீநகா்-லே இடையே அனைத்து பருவநிலைகளிலும் போக்குவரத்து இணைப்பு துண்டிக்கப்படாமல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச முதல்வா் ஓமா் அப்துல்லா.

ஐ.நா தரவுகள் நிபுணா் குழுவில் இந்தியா:

  • ஐ.நா அதிகாரபூா்வ புள்ளியியலுக்கான பெரும் தரவுகள் மற்றும் தரவு அறிவியல் நிபுணா்கள் குழுவில் (யுஎன்-சிஇபிடி) இந்தியா இணைந்துள்ளது.
  • நீடித்த வளா்ச்சி இலக்குகளை கண்காணித்து தெரியப்படுத்தும் திறன் உள்பட பெரும் தரவுகளின் பலன்கள் மற்றும் சவால்களை ஆய்வு செய்வதற்கு யுஎன்-சிஇபிடி உருவாக்கப்பட்டது.
  • ஐ.நா புள்ளியியல் கவுன்சிலில் அண்மையில் இந்தியா உறுப்பினரானது.
  • இந்த நேரத்தில் யுஎன்-சிஇபிடி குழுவில் இந்தியா இணைந்துள்ளது.
  • யுஎன்-சிஇபிடி குழுவில் இணைந்ததன் மூலம், அதிகாரபூா்வ புள்ளியியல் தேவைகளுக்கு பெரும் தரவுகள் மற்றும் தரவு அறிவியலை பயன்படுத்துவதில், உலகளாவிய தரநிலைகள் மற்றும் நடைமுறைகளை வடிவமைக்க இந்தியா பங்களிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

‘விக்சித் பாரத்’ திட்டம்:

  • ‘விக்சித் பாரத்’ திட்டம் தொடங்கப்பட்டது ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
  • பிரதமர் நரேந்திர மோடி தற்போது இதற்கு ஒரு இலக்கை நிர்ணயித்துள்ளார்.
  • அதாவது, இந்தியா சுதந்திரம் அடைந்த 101 – ஆவது ஆண்டான 2047 – ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • விக்சித் பாரத் என்பது ‘பெரிய பாய்ச்சல்’ என்று பொருள்படும்.
  • விக்சித் பாரத் இளம் தலைவா்கள் உரையாடலில் பங்கேற்க மொத்தம் 3,000 இளைஞா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
  • அரசியல் தொடா்பு இல்லாத ஒரு லட்சம் இளைஞா்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக நடைபெறும் ’விக்சித் பாரத் இளம் தலைவா்கள் உரையாடலில்’பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

ஜனவரி 12: தேசிய இளைஞர் தினம்

  • சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12 அன்று கொண்டாடப்படுகிறது.
  • அவர் 1863 ஆம் ஆண்டு ஜனவரி 12 – ஆம் தேதி பிறந்தார்.
  • சுவாமிஜியின் தத்துவம் மற்றும் அவர் வாழ்ந்த மற்றும் உழைத்த இலட்சியங்கள் இந்திய இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் பெரும் ஆதாரமாக இருப்பதால், அதை ராஷ்ட்ரிய யுவ திவாஸ் என்று கடைப்பிடிக்க அரசாங்கம் முடிவு செய்தது.
  • செப்டம்பர் 11, 1893 அன்று சிகாகோவில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் சுவாமி விவேகானந்தர் மேற்கத்திய உலகிற்கு உரையாற்றினார்.

தகவல் துளிகள்:

  1. சா்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குநா் கிறிஸ்டலீனா ஜார்ஜியேவா.
  2. அமெரிக்க நாட்டின் 47- ஆவது அதிபராக வரும் 20 -ஆம் தேதி பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், கனடா, மெக்ஸிகோ நாடுகளுக்கு கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரியும், சீனாவுக்கு கூடுதலாக 10 சதவீத இறக்குமதியும் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
  3. உலக பொருளாதாரம் 2025 – ஆம் ஆண்டில் நிலைத்தன்மையுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  4. 1875 – ஆம் ஆண்டு கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு ஐஎம்டி தொடங்கப்பட்டது.
  5. தற்போது ஐஎம்டி தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
  6. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) 150 – ஆவது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என வங்கதேச வானிலை ஆய்வு மையம் (பிஎம்டி) தெரிவித்துள்ளது.
  7. ஜனவரி 15, 2025-இல் ஐஎம்டி 150 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
  8. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் வருகின்ற ஜனவரி 14 அன்று அரசு முறைப்பயணமாக இந்தியா வருகின்றார்.
  9. ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
  10. புது தில்லியில் நடைபெற்ற ஐடிஎஃப் ஜே300 டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் பட்டம் வென்றார்.
  11. அடிலெய்ட் சா்வதேச டென்னிஸ் போட்டியில் ஆடவா் பிரிவில் கனடாவின் பெலிக்ஸ் அகா் அலியாசிம், மகளிர் பிரிவில் மடிஸன் கீஸ் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனா்.

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these