14th November Daily Current Affairs – Tamil

நாடு தழுவிய கடலோர கண்காணிப்பு பயிற்சி:

  • இந்திய கடற்படையின் தலைமையில், “கடலோர கண்காணிப்பு-24′ (சீ விஜில் 24) பயிற்சி நவம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் நடத்தப்படுவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
  • 2008 – இல் மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தப் பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • நாட்டின் சுமார் 11,098 கி.மீ கடற்கரையும், 24 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பிரத்யேக பொருளாதார மண்டலமும் கடலோரப் பகுதியில் உள்ளன.
  • இந்த விரிவான பயிற்சி, மீனவ சமுதாயத்தினர் கடலோர மக்கள், பல்வேறு கடலோரப் பாதுகாப்பு உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட அனைத்து கடல்சார் பங்குதாரர்களையும் ஒரே நேரத்தில் ஈடுபடுத்தி அவர்களுக்கு கடல் வழியாக வரும் ஆபத்துகளை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
  • இந்த நடவடிக்கைகளை மேம்படுத்தக் கூடிய வகையில் இந்த “சீ விஜில்’ பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் 107 – ஆவது கூட்டம்:

  • காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் 107 – ஆவது கூட்டம் தில்லியில் அதன் தலைவா் வினீத் குப்தா தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
  • தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிடையே காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பான பிரச்சனைகளை களைவதற்காக மத்திய அரசானது காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை (Cauvery Water Management Authority -CMA) அமைத்துள்ளது.
  • மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்னைகள் சட்டம், 1956, பிரிவு 6A-ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, காவிரி நீர் மேலாண்மைத் திட்டத்தை மத்திய அரசு ஜூன் 1, 2018 அன்று, ‘காவிரி நீர் மேலாண்மை ஆணையம்’ அமைத்தது.
  • ‘காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு’ காவிரி நதிநீர்ப் பிரச்னை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • இதன் ​​தலைவர் – மத்திய அரசால் நியமிக்கப்பட வேண்டும், அவர் ஐந்து ஆண்டுகள் அல்லது அறுபத்தைந்து வயது வரை பதவியில் இருப்பார்.
  • இந்த காவிரி நதிநீர் ஆணையமானது ஓர் தலைவர், எட்டு உறுப்பினர்கள் மற்றும் ஓர் செயலாளரைக் கொண்டதாகும்.

ஜி20 உச்சி மாநாடு:

  • பிரேஸிலில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடி நவம்பர் 18 – ஆம் தேதி செல்கிறார்.
  • ஜி20 என்பது இருபது உலக நாடுகள் மற்றும் நிதி வளங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டமைப்பாகும்.
  • இவ்வமைப்பில் உலகின் 19 வளர்ச்சியடைந்த நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்புரிமை பெற்றுள்ளன.
  • இந்த அமைப்பில் இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, பிரேசில், சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், ரஷ்யா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, தென்கொரியா, இத்தாலி, மெக்சிகோ, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
  • ஜி 20 நாடுகளின் அமைப்பின் தலைமை பொறுப்பை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு சுழற்சி முறையில் வகித்து வருகிறது.

விண்வெளிசார் நூலுக்கு முதல்முறையாக புக்கர் பரிசு: சமந்தா ஹார்வே

  • சமந்தா ஹார்வேக்கு 2024 – ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  • தனது படைப்பான ‘ஆர்பிட்டல்’என்ற நாவலுக்காக சமந்தா ஹார்வே கௌரவிக்கப்பட்டுள்ளார்.
  • விண்வெளித்துறை சார்ந்ததொரு நூலுக்கு இத்தகைய கௌரவம் கிடைப்பது இதுவே முதல்முறையாகும்.
  • லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமந்தா ஹார்வேக்கு புக்கர் பரிசளித்து கௌரவிக்கப்பட்டுள்ளது.
  • சமந்தா ஹார்வே விருதுடன் ரொக்கமாக 50,000 யூரோ தொகையையும் பெற்றுள்ளார்.

நவம்பர் 14: குழந்தைகள் தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 – ஆம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
  • இந்நாளில் குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பு, கல்வி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
  • ஜவஹர்லால் நேரு நவம்பர் 14, 1889 அன்று உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் பிறந்தார்.
  • ஜவஹர்லால் நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரானார்.
  • இந்தியாவில், ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

நவம்பர் 14: உலக சர்க்கரை நோய் தினம்

  • நவம்பர் 14 – ஆம் தேதி உலக சர்க்கரை நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த நாளின் முதன்மை நோக்கம் நீரிழிவு நோயின் தாக்கம், அதன் தடுப்பு மற்றும் நீரிழிவு கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

தகவல் துளிகள்:

  1. நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினம் கிராமத்தில் ரூ 18.95 கோடியில் ஔவையார் மணிமண்டபத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.
  2. மெத்தனால் மற்றும் கரைப்பான்களை சட்ட விரோதமாகப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
  3. ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில் நவம்பர் 15 – ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.
  4. குமமோட்டோ மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டி ஜப்பானில் நடைபெறுகிறது.

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these