இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை (ஐஆர்டிஏ):
- காப்பீடு ஆவணத்தில் காப்பீடு தொடா்பான விதிகள் மற்றும் நிபந்தனைகளை அனைவருக்கும் எளிதில் புரியும்படி எளிமையான மொழி நடையில் குறிப்பிட வேண்டும் என்று காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (ஐஆா்டிஏ) அறிவுரைக் குழு வலியுறுத்தியுள்ளது.
- இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை (ஐஆர்டிஏ) (Insurance Regulatory and Development Authority of India (IRDA), சட்டபூர்வமான தலைமை அமைப்பாகும்.
- இந்தியாவில் காப்பீட்டுத் தொழிலை ஒழுங்குபடுத்தல் மற்றும் மேம்படுத்தலே இதன் முக்கிய பணியாகும்.
- இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் மேம்படுத்தும் சட்டம், 1999இன் படி இவ்வமைப்பு செயல்படுகிறது.
- ஐஏர்டிஏ அமைப்பின் தலைமயகம் ஹைதராபாத்தில் அமைந்துள்ளது.
- காப்பீட்டு நிறுவனங்களில் காப்புறுதி கட்டணம் செலுத்திய பாலிசிதாரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், காப்பீட்டு தொழில் நிறுவனங்களுக்குத் தொழில் தொடங்கும் உரிமைகள் வழங்கவும், கண்காணிக்கவும் ஐஆர்டிஏ செயல்படுகிறது.
- தலைவர் மற்றும் ஐந்து முழு நேர உறுப்பினர்கள், நான்கு பகுதி நேர உறுப்பினர்கள் என அனைத்து உறுப்பினர்களும் இந்திய நடுவண் அரசால் நியமிக்கப்படுகின்றனர்.
உலக வா்த்தக அமைப்பு: உலக வேளாண் ஒப்பந்த விதிகள்
- உலக வேளாண் ஒப்பந்த விதிகளின் கீழ், இந்தியா உலக வா்த்தகத்தை சிதைப்பதாக உள்ளது என உலக வரத்தக அமைப்பின் உறுப்பு நாடுகளான ஆா்ஜெண்டீனா, ஆஸ்திரேலியா, கனடா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
- 1986 முதல் 1988 ஆம் ஆண்டு வரையிலான விலையின் அடிப்படையில் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு உணவு உற்பத்தி மதிப்பில் 10 சதவீதம் மானியமாக வழங்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 2022-23 ஆம் நிதியாண்டிற்கான அரிசி விவசாயிகளுக்கு கூடுதல் மானியங்களை வழங்குவதற்காக உலக வா்த்தக அமைப்பின் ‘அமைதி விதியை’இந்தியா செயல்படுத்தியது.
- WTO – என்பது உலகின் மிகப்பெரிய சர்வதேச பொருளாதார அமைப்பாகும்.
- உலக வர்த்தக அமைப்பு ( WTO ) என்பது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
- இது சர்வதேச வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் எளிதாக்குகிறது.
- ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒத்துழைப்புடன் சர்வதேச வர்த்தகத்தை நிர்வகிக்கும் விதிகளை நிறுவவும், திருத்தவும் மற்றும் செயல்படுத்தவும் அரசாங்கங்கள் நிறுவனத்தைப் பயன்படுத்துகின்றன.
- இது 1994 ஆம் ஆண்டு மராகேஷ் ஒப்பந்தத்தின்படி 1 ஜனவரி 1995 இல் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கியது.
- இதனால் 1948 இல் நிறுவப்பட்ட கட்டணங்கள் மற்றும் வர்த்தகம் (GATT) மீதான பொது ஒப்பந்தத்தை மாற்றியது.
பள்ளி மாணவிகளுக்கான சுகாதார கொள்கை:
- பள்ளி மாணவிகளுக்கான தேசிய மாதவிடாய் சுகாதார கொள்கை வகுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
- ஆறு முதல் 12 – ஆம் வகுப்பு பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் நாப்கின்கள் வழங்க வேண்டும்.
- அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் உறைவிட பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
- தமிழ்நாட்டில் 99.7 சதவீத பள்ளிகளிலும், கேரளத்தில் 99.6 சதவீத பள்ளிகளிலும் மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதிகள் உள்ளன.
நவம்பர் 12: உலக நிமோனியா தினம்
- நிமோனியா மற்றும் அதன் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நவம்பர் 12 – ஆம் தேதி உலக நிமோனியா தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இது ஒரு தீவிரமான, உயிருக்கு ஆபத்தான நுரையீரல் தொற்று ஆகும்.
- நிமோனியா முதன்மையாக வைரஸ்கள், பாக்டீரியாக்கள் அல்லது பூஞ்சைகளால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.
- பாக்டீரியா நிமோனியாவின் மிகவும் பொதுவான வகை – நிமோகோகல் நிமோனியா ஆகும்.
தகவல் துளிகள்:
- மாநிலங்களுக்கிடையே ஆயுத விநியோகத்தில் ஈடுபட்டு வந்த கும்பலை தில்லி காவல் துறையினா்,ஒரு மாதமாக நடைபெற்ற ‘ஆபரேஷன் ஈகிள்’ மூலம் கைது செய்தனர்.
- உச்சநீதிமன்றத்தின் 51 – ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார்.
- சென்னையை தலைமை இடமாகக் கொண்ட பாதுகாப்பு அமைச்சக முப்படைகளின் படைக்கலப் பிரிவு தலைவராக கமடோர் ஜே .சுரேஷ் பொறுப்பேற்றார்.
- செயற்கைக்கோள், ராக்கெட் வெப்பநிலை ஆராய்ச்சி மையம் அமைப்பது தொடர்பாக இஸ்ரோவுடன் சென்னை ஐஐடி புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
- இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) உதவியுடன் சென்னை ஐஐடியில் திரவ மற்றும் வெப்பவியல் சிறப்பு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது.
- ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக, எலீஸ் ஸ்டெஃபானிக்கை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
- ஜப்பான் நாட்டின் பிரதமராக ஷிகெரு இஷிபா மீண்டும் தோ்வு செய்யப்பட்டார்.
- மொரீஷியஸ் நாட்டின் பிரதமராகிறார் நவீன் ராம்கூலம்.
- சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் போட்டியில் அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளார், சேலஞ்சா்ஸ் பிரிவில் கிராண்ட் மாஸ்டா் பிரணவ் வெற்றிப் பெற்றார்.
- இத்தாலியில் தொடங்கியிருக்கும் ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியில் உலகின் நம்பா் 1 இடத்திலிருக்கும் உள்நாட்டு வீரரான யானிக் சின்னா் வெற்றி பெற்றார்.