ஷாங்காய் ஒத்துழைப்பு (எஸ்சிஓ) மாநாடு:
- பாகிஸ்தானில் எஸ்சிஓ அமைப்பில் உறுப்பினா்களாக இருக்கும் நாடுகளின் தலைவா்கள் மாநாடு வரும் அக்டோபர் 15,16 தேதிகளில் நடைபெற உள்ளது.
- இதில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தலைமையிலான குழு பங்கேற்க உள்ளது.
- எஸ்சிஓ அமைப்பில் இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன.
- எஸ்சிஓ உச்சிமாநாட்டுக்கு அடுத்தபடியாக, இந்த அமைப்பின் இரண்டாவது முக்கியமான ஆலோசனைக் கூட்டமாக அதன் உறுப்பு நாடுகளின் தலைவா்கள் மாநாடு இருக்கும்.
- சீனாவின் பெய்ஜிங்-ஐ தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது யூரேஸியப் பிராந்தியத்தின் ஓர் அரசியல் பொருளாதார, பாதுகாப்பு அமைப்பாகும்.
- 2001 – ஆம் ஆண்டு இது நிறுவப்பட்டது.
- ஷாங்காய் ஐந்து எனும் பெயரில் 1996 – ஆம் ஆண்டு இரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளை கொண்டு சீனா-வால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.
- 2005 – ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அஸ்தானா பிரகடனத்தின் மூலம் SCO ஓர் பிராந்தியப் பாதுகாப்பு அமைப்பாக உருவானது.
பிஎம்-கிஸான் திட்டம்:
- பிஎம் – கிஸான் திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு 18 – ஆவது தவணையாக ரூ 20,000 கோடியை பிரதமா் மோடி விடுவிக்கவுள்ளார்.
- இரண்டு ஹெக்டோ் வரையிலான நிலமுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ரூ 6,000 நிதியுதவி வழங்கும் பிஎம்-கிஸான் திட்டம் கடந்த 2019 – இல் தொடங்கப்பட்டது.
- 18 – ஆவது தவணையின் மூலம் பிஎம்-கிஸான் திட்டத்தில் இதுவரை வழங்கப்பட்ட நிதியுதவி ரூ 3.45 லட்சம் கோடியாக அதிகரிக்கவுள்ளது.
- பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் (PM-Kisan) என்பது நாட்டில் உள்ள பொருளாதார ரீதியாக நலிவடைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுவதற்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டமாகும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்:
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் செயல்படுத்துவதில் அரசு அலுவலா்கள் தங்களது கடமைகளைச் சரிவர செய்வதில்லை என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.
- இந்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005, வேலை உறுதித் திட்டத்தை செப்டம்பர் 2005 இல் நிறைவேற்றியது.
- இந்தச் சட்டம், வேலை கோரும் மற்றும் விருப்பமுள்ள கிராமப்புற குடும்பத்தில் உள்ள வயது வந்தோருக்கு ஒரு நிதியாண்டில் நூறு நாள் கூலி வேலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்குகிறது.
- கிராமப்புறங்களில் உள்ள ஏழை குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு உத்தரவாதமான சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை 100 நாள் வேலை திட்டம் தொடங்கப்பட்டது.
அக்டோபர் 4: உலக விலங்குகள் நல தினம்
- விலங்குகளின் உரிமைகளுக்காகவும் அவற்றின் நலனுக்காகவும் உலகெங்கிலும் உள்ள நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அக்டோபர் 4 – ஆம் தேதி உலக விலங்குகள் நல தினம் கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் 5: உலக ஆசிரியர் தினம்
- ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5 – ஆம் தேதி உலக ஆசிரியர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
தகவல் துளிகள்:
- டெல்லியில் கவுடில்யா 3 – வது பொருளாதார மாநாடு நடைபெற்றது.
- கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அரசமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ இந்தியா ரத்து செய்து, மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
- 2023 – ஆம் ஆண்டிற்கான ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் கவிஞர் மு. மேத்தா, மற்றும் பின்னணிப் பாடகி பி. சுசீலாவுக்கு வழங்கப்பட்டது.
- உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு மெட்டா நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் முன்னேறினார்.