‘தூய்மை இந்தியா’இயக்கம்:
- நாட்டில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதோடு, திறந்தவெளி கழிப்பிடங்களே இல்லாத நிலையை உருவாக்கும் நோக்கில், மத்திய அரசால் கடந்த 2014 – ஆம் ஆண்டில் காந்தி ஜெயந்தி அக்டோபா் 2 இல் ‘தூய்மை இந்தியா’இயக்கம் தொடங்கப்பட்டது.
- இந்த இயக்கத்தின் 10 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சி, தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது.
- இதில் பிரதமா் மோடி, ‘தூய்மை இந்தியா’ மற்றும் ‘அடல் மறுசீரமைப்பு, நகா்ப்புற மேம்பாட்டு இயக்கத்தின்கீழ்’ நாடு முழுவதும் ரூ 10,000 கோடி மதிப்பில் கழிவுநீா், குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்பட பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்தார்.
- தூய்மை இந்தியா பிரசாரத்தின்கீழ் 12 கோடிக்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
- இந்த இயக்கத்தால் இந்தியாவில் ஆண்டுக்கு 60,000 முதல் 70,000 வரை குழந்தைகளின் உயிர் காக்கப்படுவதாக சா்வதேச ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
இந்திய தயாரிப்புகளில் ‘மேட் இன் இந்தியா’ முத்திரை:
- இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களை உலகளவில் பிரபலப்படுத்தும் விதமாக ‘மேட் இன் இந்தியா’முத்திரை திட்டத்தை தொடங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
- மேக் இன் இந்தியா செப்டம்பர் 25, 2014 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
- மேக் இன் இந்தியா என்பது முதலீட்டை ஊக்குவிக்கவும், புதுமைகளை வளர்க்கவும், திறன் மேம்பாட்டை மேம்படுத்தவும், அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாக்கவும், இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி உள்கட்டமைப்பை ஏற்படுத்தவும் இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு முக்கிய தேசியத் திட்டமாகும்.
- ‘புதிய இந்தியா’வின் வளர்ச்சிப் பாதையில் பங்கேற்க உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் நம்மோடு இணைந்து செயல்படுபவர்களுக்கு ஒரு திறந்த அழைப்பாகும்.
- இந்த திட்டம் 27 துறைகளில் அதிக அளவில் சாதனைகளை செய்துள்ளது. இதில் உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளும் அடங்கும்.
- முதலீட்டாளர்களுக்கு ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளுக்காக ஒற்றை டிஜிட்டல் தளத்தை வழங்கி அதன் மூலம் வணிகத்தை எளிதாக்குவதை மேம்படுத்த தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு (NSWS) செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்:
- பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PM Awas Yojana) என்னும் ஏழைகளுக்கான வீடு திட்டம், 25 ஜூன் 2015 அன்று நாட்டின் ஒவ்வொரு ஏழைக்கும் வீடு வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
- இத்திட்டத்தின் கீழ், வீடு கட்ட பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
- கடந்த 9 ஆண்டுகளில் இதுவரை 3.04 கோடிக்கும் அதிகமான உறுதியான வீடுகள் கிராமப்புற பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன.
- இத்திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூ 50 ஆயிரமும், இரண்டாவது தவணையாக ரூ 1.5 லட்சமும், கடைசியாக அதாவது மூன்றாவது தவணையாக ரூ 50 ஆயிரமும் பெறப்படுகிறது.
- இந்தியாவின் சில மாநிலங்கள் இந்தத் திட்டத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்தியுள்ளன.
- இதில் தமிழ்நாடு, ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை அடங்கும்.
ஜி7 நாடுகள்:
- ஜி7 முன்னேறிய நாடுகள் எனக்கருதப்படும் வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகள் இருக்கும் அமைப்பாகும்.
- இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளது.
- 1975 – ல் உலக பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளை தேடும் முயற்சியில் தங்களின் யோசனைகளை பரிமாற்றிக் கொள்வதற்காக ஆறு நாடுகள் கூடி சந்தித்தன.
- அதற்கு அடுத்த ஆண்டு கனடா இந்த அமைப்பில் உறுப்பினரானது.
- 1998 – இல் உறுப்பினரான ரஷ்யா உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமியாவை தன்னுடன் 2014 – இல் இணைத்துக் கொண்டதால் நீக்கப்பட்டது, அதன்பின் ஜி8 மீண்டும் ஜி7 ஆக மாறியது.
- 50 வது G7 உச்சிமாநாடு 2024 ஜூன் 13 முதல் 15 வரை இத்தாலியின் அபுலியாவில் உள்ள ஃபசானோ நகரில் நடைபெற்றது.
தகவல் துளிகள்:
- ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஊழல் வழக்கில் சிக்கி பதவி விலகியதையடுத்து, ஷிகேரு இஷிபா ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.
- ராணுவ தலைமைத் தளபதி – உபேந்திர துவிவேதி.
- மகளிருக்கான 9 – ஆவது ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது.
- சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.