30th September Daily Current Affairs – Tamil

ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம்:

  • ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம் தொடா்பாக 3 மசோதாக்களை மத்திய அரசு கொண்டுவர உள்ளது.
  • மக்களவை, சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் உயா்நிலைக் குழுவின் பரிந்துரைகளை, மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.
  • ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, “ஒரே நாடு, ஒரே தேர்தல்” குறித்து அறிக்கை அனுப்பியது.
  • நாட்டில் ஒரே நேரத்தில் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் நடத்த வேண்டும் என இந்த திட்டம் வலியுறுத்துகிறது, தேர்தல் செலவுகளை குறைக்கவும், நிர்வாகத்தை மேம்படுத்தவும் அரசு இதை ஆதரிக்கிறது.

ஆயுஷ்மான் பாரத் திட்டம்:

  • ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு’ திட்டத்தில் 70 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் இணைவதை ஊக்குவிக்க வேண்டும் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
  • PMJAY திட்டம் செப்டம்பர் 23, 2018 அன்று பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் இந்தியாவில் உள்ள சுமார் ஐம்பது கோடி குடிமக்களை உள்ளடக்கியது.
  • உலகின் மிகப் பெரிய சுகாதாரத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஆயுஷ்மான் பாரத் யோஜனா, 50 கோடிக்கும் அதிகமான இந்தியக் குடிமக்களுக்கு, குறிப்பாகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்குப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஆயுஷ்மான் பாரத் யோஜனா – தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் இப்போது பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
  • சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதாரத்தை முற்றிலும் பணமில்லாமல் செய்ய இது திட்டமிட்டுள்ளது.

செப்டம்பர் 30: சர்வதேச மொழிப்பெயர்ப்பாளர் தினம்

  • சர்வதேச மொழிபெயர்ப்பாளர் தினமானது ஐக்கிய நாடுகள் சபையினால் அனுசரிக்கப்பட்டது.

செப்டம்பர் 30: உலக நதிகள் தினம்

  • உலக நதிகள் தினம் என்பது உலகின் நீர்வழிகளை பெருமைப்படுத்துவதற்காக அனுசரிப்பதாகும்.
  • இது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது.

தேசிய ஊட்டச்சத்து மாதம்

  • ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்த்து போராடுவதற்காக நாடெங்கிலும் தேசிய ஊட்டச்சத்து மாதம் செப்டம்பர் மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. அரசியலில் பெண்களின் குரலை வலுப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டது ‘இந்திரா தோழமை’ முன்னெடுப்பு ஆகும்.
  2. சமத்துவம் மற்றும் நீதியை நிலைநாட்ட அதிகமான பெண்கள் அரசியலில் ஈடுபட செய்ய தொடங்கப்பட்டது ‘சக்தி அபியான்’அமைப்பாகும்.
  3. விமானப் படை புதிய தலைமைத் தளபதியாக அமர் பிரீத் சிங் பொறுப்பேற்கவுள்ளார்.
  4. இந்திய கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்திய ஐஜியாக தத்விந்தா் சிங் சைனி பதவியேற்றார்.
  5. தமிழக அரசின் தலைமைக் கொறடாவாக குன்னூா் சட்டப்பேரவை உறுப்பினா் கா.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  6. சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வின் போது ‘பூ வடிவம்’ போன்ற தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டது.
  7. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சார்பில் பெங்களூரில் புதிய தேசிய பயிற்சி அகாதெமி திறக்கப்பட்டது.
  8. அகில இந்திய 95 – ஆவது எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ரயில்வே விளையாட்டு வாரிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these