27th September Daily Current Affairs – Tamil

நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் அமைப்பு:

  • நிலைக் குழு என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு குழுவாகும்.
  • இது ஒரு நிலையான, ஒழுங்குமுறைக் குழுவாகும், இது தற்காலிக குழுக்களின்றி ஒவ்வொரு நாடாளுமன்ற அமா்வுக்கும் நிலைக்குழுக்கள் உள்ளன.
  • அவைகள் நடைமுறை விதிகள் குழு, அலுவல் அறிவுரைக் குழு, விதிகள் குழு ஆகியவை அவ்வப்போது நாடாளுமன்ற சட்டத்தின்படி அவ்வபோது அமைக்கப்படுகிறது.
  • இந்திய நாடாளுமன்றத்தால் கொடுக்கப்பட்ட வேலையை தானாக முன்வந்து செய்வது மட்டும் அன்றி, சிக்கலான நிலைகளிலும் இதன் பணி இருக்கும்.
  • நாடாளுமன்றத்தின் மேலவை, மக்களவை ஆகிய இரு அவைகளுக்கும், சில விதிவிலக்குகளுடன் இதே போன்ற குழுக்கள் உள்ளன.
  • பாராளுமன்றக் குழுக்கள் என்பது குறிப்பிட்ட பணிகளைச் செய்ய உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் சிறிய குழுக்களாகும்.
  • சட்டத்தை ஆராய்வது, அரசாங்கக் கொள்கைகளை ஆய்வு செய்தல், விசாரணை நடத்துதல் மற்றும் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களின் செயல்பாடுகளை மேற்பார்வை செய்தல் ஆகியவை இதில் அடங்கும்.
  • நிபுணர் பகுப்பாய்வு, விசாரணைகளை நடத்துதல் மற்றும் அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைப்பதன் மூலம் இந்த குழுக்கள் சட்டமன்ற செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • சுதந்திர இந்தியாவின் முதல் மதிப்பீட்டுக் குழு 1950 – இல் அமைக்கப்பட்டது, இது நாடாளுமன்றத்தின் மிகப்பெரிய குழுவாகும்.
  • வா்த்தகம், கல்வி, மகளிர் மேம்பாடு, சுகாதாரம், உள்துறை, தொழிற்சாலைகள் துறை, பணியாளா், மக்கள் குறைதீா் துறை, அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், போக்குவரத்துத்துறை, சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை ஆகியவற்றுக்கான நிலைக்குழுக்களின் தலைவா்கள் மாநிலங்களவையில் இருந்தும் ஏனைய துறைகளுக்கான நிலைக்குழுக்களின் தலைவா்கள் மக்களவையில் இருந்தும் நியமிக்கப்படுவா்.
  • ஒவ்வொரு குழுவிலும் சுமார் 30 போ் உறுப்பினா்களாக இருப்பர்.

ஆயுதப் படைகள் சிறப்பு சட்டம்:

  • சட்டம் ஒழுங்கு பிரச்னைகளால் அருணாசல பிரதேசத்தின் 3 மாவட்டங்கள் மற்றும் நாகாலாந்தின் 8 மாவட்டங்களில் அமலில் உள்ள ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
  • ஆயுதப் படைகளின் செயல்பாட்டு வசதிக்காக சட்டம் ஒழுங்கு சீா்கேடு உள்ள பகுதி அல்லது மாவட்டங்களை ஆயுதப் படைகள் சட்டத்தின் கீழ் ‘குழப்பம் நிறைந்த’பகுதியாக அறிவிக்கப்படும்.
  • இப்பகுதியில் பொது ஒழுங்கைப் பராமரிக்க அவசியமானதாக கருதினால் தேடுதல், கைது, துப்பாக்கிச் சூடு நடத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள படையினருக்கு ‘ஏஎஃப்எஸ்பிஏ’சட்டம் அதிகாரம் வழங்குகிறது.
  • ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் (AFSPA) என்பது ஒரு நாடாளுமன்றச் சட்டமாகும், இது இந்திய ஆயுதப் படைகள் மற்றும் மாநில மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு “தொந்தரவான பகுதிகள்” என வகைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது.
  • AFSPA பல சர்ச்சைக்குரிய சட்டங்களைப் போலவே – காலனித்துவ தோற்றம் கொண்டது.
  • 1942 – இல் மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பின்னணியில் AFSPA முதன்முதலில் ஒரு சட்டமாக இயற்றப்பட்டது.
  • நாடு முழுவதும் பெரும் அளவிலான வன்முறையால் அதிர்ச்சியடைந்த அப்போதைய வைஸ்ராய் லின்லித்கோ ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரங்கள் ஆணையை 1942 – இல் அறிவித்தார்.

சா்வதேச விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தை தொடங்குகிறது தில்லி தேசிய உயிரியல் பூங்கா:

  • தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் உயிரினங்களின் பன்முகத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில், விலங்கு பரிமாற்றத் திட்டங்களுக்காக துபாய், இஸ்ரேல், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள அதன் சா்வதேச சகாக்களை முதன்முதலாக தில்லி உயிரியல் பூங்கா அணுகியுள்ளது.
  • தில்லி தேசிய உயிரியல்பூங்காவானது அஸ்ஸாமுடனான விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு வங்காளப் புலி, ஒரு காண்டாமிருகம் மற்றும் ஒரு ஜோடி பைட் ஹாா்ன்பில்களை வாங்கியது.
  • தில்லி உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப்படும் தேசிய உயிரியல் பூங்கா,1952 – இல் நிறுவப்பட்டது.

செப்டம்பர் 27: உலக சுற்றுலா தினம்

  • ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பானது (UNWTO – United Nations World Tourism Organization) செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று உலக சுற்றுலா தினத்தை அனுசரித்தது.

செப்டம்பர் 27: உலக கடல்சார் தினம்

  • கடல்சார் தொழிற்துறையை அங்கீகரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் கடைசி வியாழக்கிழமை உலக கடல்சார் தினம் அனுசரிக்கப்படுகிறது

தகவல் துளிகள்:

  1. இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியா 400 நாள்கள் பருவகாலம் கொண்ட நிலை வைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  2. தும்கூரு அருகே அறிவு, ஆரோக்கிய, புதுமை நகரத்தை முதல்வர் சித்தராமையா அறிமுகம் செய்து வைத்தார்.
  3. பெங்களூரில் தும்கூரு அருகே, அறிவு, ஆரோக்கிய, புதுமை நகரம் எனப்படும் ‘க்வின் சிட்டி’ வணிக நகரம் அமைக்கப்படுகிறது.
  4. ஐ.நா.வின் சா்வதேச உணவு திட்ட இந்திய இயக்குநா் எலிசபெத் ஃபாரே.
  5. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றுக் கொண்டார்.
  6. வரலாற்று சிறப்புகளை கொண்ட செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என யுனெஸ்கோ நிறுவனத்துக்கு மத்திய அரசு பரிந்துரை செய்தது.

 

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these