நேரடி வரி பிரச்னைகள் தீா்வு திட்டம் 2.0’ :
- நேரடி வரி பிரச்னைகள் தீா்வு திட்டம்0’ அக்டோபா் 1 – ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- 2024 – 25 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ள ரூ 35 லட்சம் கோடி மதிப்பிலான7 கோடி நேரடி வரி பிரச்னைகளுக்கு தீா்வு காண வழிவகுக்கும் என தெரிவித்துள்ளது.
- உச்ச நீதிமன்றம், உயா் நீதிமன்றம், வருமான வரி தீா்ப்பாயங்கள் உள்ளிட்டவையில் 2024, ஜூலை 22- அன்றிலிருந்து நிலுவையில் உள்ள நேரடி வரி சார்ந்த வழக்குகளுக்கு தீா்வு காண இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
- கடந்த 2020 – ஆம் ஆண்டு நேரடி வரி பிரச்னைகள் தீா்வு திட்டம்0 அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1991 – நேரடி மற்றும் மறைமுக வரி விதிகளை சீர்திருத்த டாக்டர் ராஜா செல்லையாவின் கீழ் வரி சீர்திருத்தக் குழு அமைக்கப்பட்டது.
லோக்பால் அமைப்பு:
- லோக்பால் என்பது லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தாச் சட்டம், 2013 இன் 3வது பிரிவின் கீழ் நிறுவப்பட்ட ஒரு சுதந்திரமான சட்ட அமைப்பு ஆகும்.
- லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013′ நமது நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது, இச்சட்டம்01.2014 முதல் நடைமுறைக்கு வந்தது.
- லோக்பால் மசோதா, பிரதமர் , மற்ற அமைச்சர்கள் , எம்.பி. க்கள் மற்றும் மத்திய அரசின் குரூப் ஏ, பி, சி மற்றும் டி அதிகாரிகள் மீது ஊழல் புகார்களை குறைதீர்ப்பாளரிடம் தாக்கல் செய்ய வழிவகை செய்கிறது.
- 1971 – ஆம் ஆண்டு லோக் ஆயுக்தா மற்றும் உபா-லோகாயுக்தாச் சட்டம் மூலம் லோக் ஆயுக்தா நிறுவனத்தை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் மகாராஷ்டிரா ஆகும்.
- மாநில முதல்வர் , சட்டப் பேரவைத் தலைவர் , எதிர்க்கட்சித் தலைவர் , சட்டப் பேரவைத் தலைவர் மற்றும் சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட குழுவின் ஆலோசனைக்குப் பிறகு மாநில ஆளுநரால் மாநிலத்தின் லோக் ஆயுக்தா நியமிக்கப்படுகிறார்.
- தமிழ்நாடு சட்டமன்றம் தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம், 2018 ஐ நிறைவேற்றியுள்ளது.
செப்டம்பர் 21: சர்வதேச அமைதி தினம் (UN)
- சர்வதேச அமைதி தினம் (UN) உலகம் முழுவதும் செப்டம்பர் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது, முதல் முறையாக இது செப்டம்பர் 1982 இல் அனுசரிக்கப்பட்டது.
செப்டம்பர் 21: உலக அல்சைமர் தினம்
- மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த செப்டம்பர் 21 – ஆம் தேதி உலக அல்சைமர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
செப்டம்பர் 21: சர்வதேச ரெட் பாண்டா தினம்
- இது செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது, இந்த ஆண்டு செப்டம்பர் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- தில்லியின் புதிய முதல்வராக புதிய முதல்வராக கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்துவந்த அதிஷி தேர்வு செய்யப்பட்டார்.
- ’ஸ்பேஸ் எக்ஸ்போ 2024’- கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நடைபெற்றது.
- காவிரி ஆறு தென்னிந்தியாவின் கங்கை என்று அழைக்கப்படுகிறது, யமுனை என்பது கங்கை நதியின் முக்கிய மற்றும் மிக நீளமான துணை நதியாகும்.
- திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் தனிப்படை போலீஸார் மேற்கொண்ட அதிரடி சோதனையின் பெயர் -‘ஆபரேஷன் அகழி’.