அத்திக்கடவு-அவிநாசி திட்டம்:
- ஈரோடு, திருப்பூா், கோவை மூன்று மாவட்டங்களின் கனவுத் திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
- கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களைச் சோ்ந்த குளம், குட்டைகளில் நீா் நிரப்பி அதன் மூலமாக நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவது மற்றும் விவசாயம், குடிநீா் உள்ளிட்ட தேவைகளுக்காக தொடங்கப்பட்டதுதான் அத்திக்கடவு-அவிநாசி திட்டம்.
- கடந்த 2019 – ஆம் ஆண்டு பிப்ரவரி 28 – ஆம் தேதி அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்காக முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி அவிநாசிக்கு நேரில் வந்து அடிக்கல் நாட்டினார்.
“முதல்வா் மருந்தகம்” புதிய திட்டம்:
- குறைந்த விலையில் மருந்துகள் வழங்க ‘முதல்வா் மருந்தகம்’ எனும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
- பொதுப்பெயா் வகை மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில், ‘முதல்வா் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தும்.
- இந்தத் திட்டத்தின்கீழ், முதல்கட்டமாக 1,000 மருந்தகங்கள் திறக்கப்படும்.
- இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மருந்தாளுநா்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு ரூ 3 லட்சம் மானிய உதவியாக அரசால் வழங்கப்படும்.
‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டம்:
- முன்னாள் ராணுவ வீரா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
- இந்தத் திட்டத்தின்கீழ், முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க ரூ 1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழி செய்யப்படும்.
- இந்தத் திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் அளிக்கப்படும்.
- அவா்களுக்கு திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்றவை அரசால் வழங்கப்படும்.
- ராணுவப் பணியின் போது உயிரிழந்த படைவீரா்களின் குடும்பத்தினரும் இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெறலாம்.
கோவைக்கு சிறந்த மாநகராட்சி விருது:
- கோவை மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கிலும், அவற்றின் செயல்பாடுகளின் அடிப்படையில் அவற்றிற்கிடையே போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் நோக்கிலும் ஆண்டுதோறும் சிறந்த உள்ளாட்சி அமைப்புகள் தோ்வு செய்யப்பட்டு, முதல்வரின் விருது வழங்கப்பட்டு வருகிறது.
- அதன் அடிப்படையில், நடப்பு ஆண்டு தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக கோவை மாநகராட்சி தோ்வு செய்யப்பட்டுள்ளது.
எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்:
- புவிக் கண்காணிப்புக்கான இஓஎஸ்-08 செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆகஸ்ட் 16 விண்ணில் ஏவப்பட உள்ளது.
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் புவிக் கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஒஎஸ்-08 எனும் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இது தரையில் இருந்து சுமார் 475 கி.மீ. தொலைவில் உள்ள புவி தாழ் வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
- இஒஐஆா் கருவி பேரிடா் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, இரவில் துல்லியமான படம் எடுக்க அனுப்பப்படுகிறது.
குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழா்’ விருது:
- குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழா்’ விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- அறிவியல் தொழில்நுட்பத்துக்கான ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பெயரிலான விருதை இஸ்ரோ விஞ்ஞானி சந்திரயான் 3 திட்ட இயக்குநராகப் பணியாற்றிய ப.வீரமுத்துவேல் பெற்றார்.
- வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மக்களுக்கு முதலுதவி பெட்டியை எடுத்துக் கொண்டு துணிச்சலுடன் சென்ற நீலகிரி மாவட்ட செவிலியா் ஆ.சபீனா, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு தோ்வு செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் 16: பென்னிங்டன் போர் தினம்
- பென்னிங்டன் போர் தினம் 16 ஆகஸ்ட், 1777 அன்று நடந்த பென்னிங்டன் போரை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 16 அன்று அனுசரிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுவதாக மாநில துணை முதல்வர் பிராவதி அறிவித்துள்ளார்.
- கால தாமதமில்லா ரயில் இயக்கத்தில் மதுரை ரயில்வே கோட்டம் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளது.
- டாக்டா் என்.கோபாலகிருஷ்ணனுக்கு நல் ஆளுமை விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- 2036 – ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் அகமதாபாத் நகரம் முன்னணியில் உள்ளது.
- பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை பாரீஸில் நடைபெறவுள்ளது.
- இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷியாவின் பங்களிப்பு 1 சதவீதமாக இருந்தது. இப்போது 40 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- ஆந்திரத்தில் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவளிக்கும் ‘அண்ணா உணவகத்தை’ அந்த மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.
- நாட்டின் 78-ஆவது சுதந்தர தினத்தையொட்டி,முதல்முறையாக இந்திய-வங்கதேச பெண் பிஎஸ்எஃப் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.