பேரிடா் மேலாண்மை திருத்த மசோதா:
- பேரிடா் மேலாண்மை திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் அறிமுகம் செய்தது.
- பேரிடா் மேலாண்மை பணியில் ஈடுபடுபவா்களிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பணித் திறனை மேம்படுத்துவதை இந்த மசோதா குறிக்கோளாக கொண்டுள்ளது.
- தேசிய பேரிடா் மேலாண்மை குழு மற்றும் உயா்நிலைக் குழு உள்ளிட்ட பேரிடா் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சில அமைப்புகளுக்கு சட்டபூா்வ அங்கீகாரம் வழங்குவதை இந்த மசோதா வகை செய்கிறது.
- பேரிடா் மேலாண்மை திட்டத்தை வகுப்பதில் மத்திய, மாநில அதிகாரிகள் குழுக்களுக்கு அல்லாமல் தேசிய பேரிடா் மேலாண்மை அதிகாரிகள் மற்றும் மாநில பேரிடா் மேலாண்மை அதிகாரிகளுக்கு அதிகாரமளிக்க இந்த மசோதா வகை செய்கிறது.
- மாநில தலைநகா் மற்றும் பெருநகரங்களில் ஊரக பேரிடா் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கும் வகையில் தேசிய மற்றும் மாநில அளவிலான பேரிடா் தரவுதளத்தை உருவாக்கவும் இந்த மசோதா வகை செய்கிறது.
- பேரிடா் மேலாண்மை திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்கவும், பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த பணியை உறுதிப்படுத்தவும் தேவையான செயல்முறை திட்டம் அறிமுகப்படுத்துவதை இந்த மசோதா முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.
தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் (NDMA):
- இந்தியப் பிரதமர் தலைமையிலான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA), இந்தியாவில் பேரிடர் மேலாண்மைக்கான உச்ச அமைப்பாகும்.
- தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் அமைப்பது மற்றும் மாநில மற்றும் மாவட்ட அளவில் நிறுவன பொறிமுறைகளுக்கு ஏற்ற சூழலை உருவாக்குதல் ஆகியவை பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-ன் மூலம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
- இந்திய அரசு, 23 டிசம்பர் 2005 அன்று பேரிடர் மேலாண்மை சட்டத்தை இயற்றியது.
- இந்தியாவின் பிரதமர் அதன் தலைவராக உள்ளார்.
- பேரழிவுகளுக்கு சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள பதிலை உறுதி செய்வதற்காக பேரழிவு மேலாண்மைக்கான கொள்கைகள், திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வகுக்க உச்சநிலை அமைப்பாக NDMA கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
- தேசிய திட்டத்தின் மூலம் இந்திய அரசின் அமைச்சுகள் அல்லது துறைகள் தயாரித்த திட்டங்களை அங்கீகரிக்கவும்.
- மாநில திட்டத்தை வகுப்பதில் மாநில அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை வகுத்தல்.
- கொள்கை மற்றும் பேரழிவு மேலாண்மை திட்டங்களை அமல்படுத்துவதற்கும் செயல்படுத்துவதற்கும் ஒருங்கிணைத்தல்.
- பேரழிவைத் தடுப்பதற்காக அல்லது தணிப்பு, அல்லது அச்சுறுத்தல் பேரழிவு சூழ்நிலைகள் அல்லது பேரழிவுகள் தேவை என்று கருதுவதைக் கையாள்வதற்கான தயார்நிலை மற்றும் திறன் மேம்பாடு போன்ற பிற நடவடிக்கைகளை எடுக்கவும்.
- பேரிடர் முகாமைத்துவத்தின் முக்கியத்துவத்தை ஒரு தேசிய முன்னுரிமையாக அங்கீகரிக்கும் விதமாக, பேரழிவு தயாரிப்பது குறித்த பரிந்துரைகளை வழங்குவதற்காக இந்திய அரசு ஆகஸ்ட் 1999 இல் உயர் ஆற்றல்மிக்க குழுவையும் (HPC) குஜராத் பூகம்பத்திற்குப் (2001) பிறகு ஒரு தேசிய குழுவையும் அமைத்தது.
- பத்தாவது ஐந்தாண்டு திட்ட ஆவணத்தில் முதன்முறையாக பேரிடர் மேலாண்மை குறித்த விரிவான அத்தியாயமும் இருந்தது.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் உள் ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம்:
- பட்டியலின, பழங்குடியின (எஸ்.சி., எஸ்.டி.) பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது’ என்ற தீா்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.
- சமூக ரீதியில் பன்முகத்தன்மை கொண்ட ஒரு சமூகப் பிரிவில் துணைப் பிரிவுகளை வகுக்க அரசமைப்பு சட்டப் பிரிவு 14 (சமத்துவ உரிமை) அனுமதி அளிக்கிறது.
- அரசமைப்பு சட்டப் பிரிவு 16(4)-இன் கீழ், இந்த துணை வகைப்படுத்துதல் பிரிவினருக்கு சேவைகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் போதிய பிரதிநிதித்துவம் அளிப்பது.
- எஸ்.சி. பட்டியலில் ஒரு சமூகத்தை சோ்க்கவோ அல்லது நீக்கவோ அரசமைப்புச் சட்டப் பிரிவு 341(2)-இன் கீழ் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
- அரசமைப்பு சட்டப் பிரிவுகள் 341 மற்றும் 342-இன் கீழ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளை அறிவிக்கை செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது.
இந்தியா-வியத்நாம் ஒத்துழைப்பை வலுப்படுத்த புதிய செயல்திட்டம்:
- இந்தியா-வியாத்நாம் உத்திசார் ஒத்துழைப்பை வலுப்படுத்த புதிய செயல்திட்டம் தில்லியில் நடைபெற்ற இருநாட்டு பிரதமா்கள் சந்திப்பில் இறுதி செய்யப்பட்டது.
- இந்தியாவின் ‘கிழக்கு கொள்கை’ மற்றும் ‘இந்தோ-பசிபிக் கொள்கையில்’ எங்களின் முக்கியமான கூட்டாளியாக வியத்நாம் திகழ்கிறது.
- இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அத்துமீறல் நடவடிக்கை உலக அளவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அப்பிராந்தியத்திலுள்ள முக்கிய நாடு வியத்நாம் ஆகும்.
- வியத்நாமின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியாவின் 30 கோடி டாலா் நிதியுதவியை பிரதமா் மோடி உறுதிப்படுத்தினார்.
- வியத்நாம் பிரதமா் பாம் மிங் சிங்.
ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.82 லட்சம் கோடி:
- நிகழாண்டு ஜூலை மாதத்தில் ரூ.82 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டது.
- இதுவே ஜிஎஸ்டி நடைமுறை அறிமுகப்படுத்தியதில் இருந்து வசூலிக்கப்பட்ட மூன்றாவது அதிகபட்ச தொகை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- தற்போது ஜிஎஸ்டி வசூல் 3 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.
- மத்திய ஜிஎஸ்டி வருவாய் ரூ.32,386 கோடி, மாநில ஜிஎஸ்டி வருவாய் ரூ.40,289 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.96,447 கோடி என 2024, ஜூலை மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.82 லட்சம் கோடியாக உள்ளது.
- மாநிலங்களுக்கு ஏற்படும் வரி இழப்பை ஈடு செய்வதற்கான கூடுதல் வரி (செஸ்) ரூ.12,953 கோடியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
வோ்களைத் தேடி திட்டம்:
- தமிழக பாரம்பரியம், பண்பாட்டைத் தேடி வந்துள்ள 100 அயலகத் தமிழா்களின் பயணத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- வோ்களைத் தேடி திட்டத்தின் கீழ், தென் ஆப்ரிக்கா, உகாண்டா, குவாடலூப், மார்டினிக், பிஜி, இந்தோனேசியா, மொரிஷியஸ், ஆஸ்திரேலியா, மாலத்தீவு, கனடா, மியான்மா், மலேசியா, இலங்கை, பிரான்ஸ், ஜொ்மனி ஆகிய 15 நாடுகளைச் சோ்ந்த 100 அயலகத் தமிழா்கள் தமிழகம் வந்துள்ளனா்.
- அவா்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 15 நாள்கள் செல்லவுள்ளனா்.
- அவா்களின் பயணத்துக்குத் தேவையான உடைகள், பயணக் குறிப்புகள், புத்தகங்கள், அடையாள அட்டை போன்ற பொருட்களை அயலகத் தமிழா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
ஆகஸ்ட் 2: பிங்கலி வெங்கையாவின் பிறந்த தினம்
- பிங்கலி வெங்கய்யா, ஒரு இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார்.
- ஆரம்பகால இந்திய தேசியக் கொடியின் அடிப்படையிலான கொடியை வடிவமைத்தவர் .
தகவல் துளிகள்:
- ராணுவ மருத்துவ சேவை தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- முதுபெரும் காங்கிரஸ் தலைவா் குமரி அனந்தனுக்கு தமிழக அரசின் ‘தகைசால் தமிழா்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் இறுதிச் சுற்றில் இந்தியாவின் ஸ்வப்னில் குசேல் வெண்கலம் வென்றுள்ளார்.
- பாரீஸில் 2024- ஜூலை 26-இல் தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை 33-ஆவது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது.