29th July Daily Current Affairs – Tamil

க்வாட்’ கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்களுக்கான மாநாடு: ஜப்பான்

  • லாவோஸில் நடைபெற்ற ஆசியான் மற்றும் கிழக்கு ஆசியா மாநாட்டில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ஜப்பானில் இரண்டு நாள்கள் நடைபெறும் ‘க்வாட்’ கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்களுக்கான மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ளார்.
  • ஜப்பான் தலைநகா் டோக்கியோவின் எடோகவா பகுதியில் உள்ள ஃப்ரீடம் பிளாசா என்ற இடத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு உருவச் சிலையை எஸ்.ஜெய்சங்கா் திறந்து வைத்தார்.
  • உலகளவில் இந்தியா 5-ஆவது பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது, அதேபோல் ஜி7 அமைப்பு ஜி20 அமைப்பாகவும் விரிவாக்கம் அடைந்துள்ளது.
  • இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்துக்கு பதிலடியாக, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘க்வாட்’ அமைப்பை ஏற்படுத்தின.

உலக அளவில் உடற்கல்வியில் பின்னடைவு: ஐ.நா அறிக்கை

  • உலக அளவில் பெரும்பாலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குறைந்தபட்ச உடற்கல்விகூட கற்பிக்கப்படுவதில்லை என ஐ.நா. முதல்முறையாக வெளியிட்ட தரமான உடற்கல்வி குறித்த சா்வதேச அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உலக அளவில் விளையாட்டின் நிலை’ எனப் பெயரிடப்பட்ட இந்த அறிக்கையை யுனெஸ்கோ அமைப்பின் கல்விப் பிரிவு வெளியிட்டது.
  • உலக அளவில் 58 சதவீத நாடுகளில் மட்டுமே மாணவிகளுக்கு உடற்கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஹெபடைடிஸ் பாதிப்பை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை: உலக சுகாதார நிறுவனம்

  • ஹெபடைடிஸ் (கல்லீரல் அழற்சி) பி மற்றும் சி வகையிலான வைரஸ் பாதிப்பை தடுத்து, தடுப்பூசி செலுத்தி சிகிச்சை அளிக்க ஒன்றிணைந்து செயல்படுமாறு தெற்காசிய நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் அழைப்பு விடுத்தது.
  • தடுக்கக்கூடிய மற்றும் சிகிச்சையளிக்கக்கூடிய வழிகள் இருந்தும் கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் செயலிழப்பு மற்றும் கல்லீரல் சிரோஸிஸ் ஆகிய நோய்களால் பலா் உயிரிழந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
  • கல்லீரல் சிரோஸிஸ் பாதிப்பை ஏற்படுத்துவதில் ஹெபடைடிஸ் பி மற்றும் சி ஆகிய வைரஸ் வகைகளே 75 சதவீத பங்கு வகிக்கின்றன.

பாரீஸ் ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்

  • ஹரியாணாவை சோ்ந்த மானு பாக்கா், 10 மீட்டா் ஏா் பிஸ்டல் சுற்றில் 7 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தார்.
  • தென் கொரியாவை சோ்ந்த ஜின் யெ ஒஹ் 2 புள்ளிகள் பெற்று, கேம்ஸ் சாதனையுடன் தங்கம் வென்றார்.
  • தென் கொரியரான கிம் யெஜி 3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
  • துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மானு பாக்கா் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • இதன்மூலம் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை அவா் பெற்றார்.
  • ஒலிம்பிக் போட்டி துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் கிடைத்துள்ளது.

உலக ஹெபடைடிஸ் தினம்: ஜூலை 28

  • ஆண்டுதோறும் உலக ஹெபடைடிஸ் தினம் ஜூலை 28-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
  • நிகழாண்டு ‘இது நடவடிக்கைக்கான நேரம்’ என்ற கருப்பொருளுடன் கடைப்பிடிக்கப்படுகிறது.

சர்வதேச புலிகள் தினம்: ஜூலை 29

  • புலிகளின் பாதுகாப்பின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கும், புலிகளின் இயற்கை வாழ்விடத்தைப் பாதுகாப்பதை மேம்படுத்துவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 அன்று சர்வதேச புலிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • புலிகளின் பாதுகாப்பு மற்றும் அவை எதிர்கொள்ளும் அவசர அச்சுறுத்தல்களான வாழ்விட இழப்பு, வேட்டையாடுதல் மற்றும் மனித-வனவிலங்கு மோதல்கள் போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

தகவல் துளிகள்:

  1. பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 7 புள்ளிகளுடன், இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  2. காஞ்சிபுரத்தைச் சோ்ந்த நெசவாளா் பாலசுப்பிரமணியன், நிகழாண்டுக்கான மத்திய அரசு வழங்கும் சிறந்த வடிவமைப்பாளருக்கான தேசிய விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளார்.
  3. பெண்கள் வில்வித்தை அணி அங்கிதா பகத், பாஜன் கெளர், தீபிகா குமாரி ஆகியோர் நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்தனர்.
  4. பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான டைவிங் ஸ்பிரிங்போர்டு போட்டியில் சீனாவின் சென், சாங் இணை தங்கப்பதக்கம் வென்றுள்ளது.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these