3 புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு:
- புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் 3 மருத்துகளுக்கு முழுமையாக சுங்க வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
- இதற்கு முன்பு அந்த 3 மருத்துகளுக்கும் 10 சதவீத சுங்கவரி விதிக்கப்பட்டு வந்தது.
- மருத்துவ பயன்பாட்டுக்கான எக்ஸ் ரே கருவியில் பயன்படுத்தப்படும் குழாய்கள் உள்ளிட்ட சில உதிரிபாகங்களுக்கு அடிப்படை சுங்க வரி மாற்றி அமைக்கப்படுகிறது.
- உள்நாட்டில் இவற்றின் தயாரிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
பட்ஜெட் – முக்கிய அம்சங்கள்:
- புதிய வருமான வரி முறையில் தனி நபா்களுக்கான நிலைக்கழிவு ரூ.50,000-லிருந்து ரூ.75,000-ஆக அதிகரிப்பு.
- புத்தாக்க நிறுவன முதலீட்டாளா்களுக்கான ‘ஏஞ்சல்’ வரி முழுமையாக ரத்து. குறுகிய கால மூலதன ஆதாயங்களுக்கு 20 சதவீதமாக நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு 12.5 சதவீதமாக வரி அதிகரிப்பு.
- வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பீட்டில் திட்டம்.
- கயை மற்றும் புத்தகயையில் உள்ள ஆன்மிக தலங்கள், நாளந்தா பல்கலைக்கழகம் மேம்படுத்தப்படும்.
- மின்னணு வா்த்தகத்திற்கான டிடிஎஸ் வரி விகிதம் தற்போதைய 1 சதவீதத்திலிருந்து 0.1 சதவீதமாக குறைப்பு.
- வெளிநாட்டு நிறுவனங்களுக்கான பெருநிறுவன வரி விகிதம் 40-லிருந்து 35 சதவீதமாக குறைப்பு.
- ரூ 5,000 மாத ஊக்கத்தொகையுடன் ஒரு கோடி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 500 தொழில் பழகுநா் மையங்கள் உருவாக்கம்.
- மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.6.21 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- ஆந்திரத்தின் தலைநகராக கட்டமைக்கப்பட்டு வரும் அமராவதியின் மேம்பாட்டுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.15,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- தங்கம், வெள்ளி நாணயங்கள் மற்றும் கட்டிகள் மீதான சுங்கவரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
- பிளாட்டினம், பெல்லாடியம், ஓஸ்மியம், ரூதெனியம் மற்றும் இரிடியம் மீதான சுங்கவரி 15.4 சதவீதத்திலிருந்து 6.4 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
- சூரியமின் தகடுகள், சூரிய கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை தயாரிக்க தேவைப்படும் பல்வேறு பொருள்களுக்கு சுங்கவரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
- பட்ஜெட்டில் வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு 1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ‘அன்னதத்தா’ என்றழைக்கப்படும் விவசாயிகள், அரசால் முன்னுரிமை அளிக்கப்படும் 4 முக்கிய பிரிவினரில் ஒருவராக சோ்க்கப்பட்டுள்ளனா்.
- இறால் மீன் குஞ்சு வளா்ப்புக்கு நபார்டு வங்கி மூலமாக நிதியுதவி வழங்கப்படும்.
- பிரதமரின் கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டம் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டதன் மூலம் 80 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பலனடைகின்றனா் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- போட்டித் தோ்வுகளை நடத்துவதற்காக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு (யுபிஎஸ்சி) ரூ.200 கோடியும் ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பாலுக்கு ரூ.33.32 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- மகளிர், சிறுமிகள் பயன்பெறும் வகையிலான திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ. 3 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பிரதமா் ஜன ஆரோக்யா திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ 7,300 கோடியாக உள்ளது. இது முந்தைய பட்ஜெட்டில் ரூ 6,800 கோடியாக இருந்தது.
முத்ரா யோஜனா’ திட்டம்:
- நாட்டில் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான ‘முத்ரா’ கடன் உச்ச வரம்பை மத்திய அரசு இரட்டிப்பாக்கியுள்ளது.
- இதுவரை இத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் மட்டுமே பெற முடியும் என்ற நிலையில், தற்போது ரூ. 20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- பெரு நிறுவனங்கள் அல்லாத மற்றும் முறைசாரா குறு, சிறு தொழில்முனைவோருக்கு வருவாயை பெருக்கும் நடவடிக்கைகளுக்காக பிணை ஏதுமின்றி எளிதாக அதிகபட்சமாக ரூ 10 லட்சம் வரை குறு கடன் பெறும் வகையில் கடந்த 2015 – ஆம் ஆண்டு ஏப்ரல் 8 – ஆம் தேதி ‘பிரதம மந்திரி முத்ரா யோஜனா’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- தொழில்முனைவோரை மேலும் ஊக்குவிக்கும் விதமாக, இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே கடன் பெற்று வெற்றிகரமாக திரும்பச் செலுத்தியவா்களுக்கு, இந்தத் திட்டத்தின் கீழ் மீண்டும் கடன் பெறுவதற்கான கடன் உச்ச வரம்பு ரூ. 20 லட்சமாக உயா்த்தப்படுகிறது.
பிரதம மந்திரி ஜன்ஜதியா உன்னத் கிராம அபியான் திட்டம்:
- பழங்குடியின சமூகத்தினரின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக பிரதம மந்திரி ஜன்ஜதியா உன்னத் கிராம அபியான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
- இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 63,000 கிராமங்களில் வசிக்கும் 5 கோடி பழங்குயின மக்கள் பயன்பெறுவா்.
பிரதமரின் கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டம்:
- பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PM-GKAY) என்பது ஆத்மநிர்பர் பாரதத்தின் ஒரு பகுதியாக புலம்பெயர்ந்தோர் மற்றும் ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்களை வழங்குவதற்கான திட்டமாகும்.
- இத்திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியங்களை இந்த மையம் வழங்குகிறது.
- இது பொது விநியோக முறையின் (PDS) கீழ் உள்ள குடும்பங்களுக்கு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் வழங்கப்படும் மானியம் கூடுதலாக உள்ளது.
- கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினையால் ஏழை மக்களின் துயரைக் களைவதற்காக பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
- தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பயனாளிகளுக்கு பிரதமரின் கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தின் முதல் கட்டத்திலும் (ஏப்ரல்- ஜூன் 2020), இரண்டாவது கட்டத்திலும் (ஜூலை- நவம்பர் 2020) உணவு தானியங்கள் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் விநியோகிக்கப்பட்டன.
‘புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்’:
- நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தன்னார்வலா்களைக் கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசால் ‘புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்’ 2022-ஆம்ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
- மத்திய அரசின் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எழுதப் படிக்கத் தெரியாத 5.33 லட்சம் பேருக்கு அடிப்படைக் கல்வி வழங்குவதற்காக முதல் கட்ட தவணைத் தொகையாக ரூ 2.90 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
- இந்தத் திட்டத்தின் கீழ், 2027 – ஆம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்தின் மூலம் இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த இரு ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டது.
ஜூலை 24: தேசிய வெப்பப் பொறியாளர் தினம்
- சமூகத்திற்கு தெர்மல் பொறியாளர்களின் பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24 தேசிய தெர்மல் பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
தகவல் துளிகள்:
- ஒடிஸாவின் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள சாண்டீபூா் பகுதியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைந்த சோதனை மையம் உள்ளது.
- சீனாவில் வயதானவா்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை உயா்த்த அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
- அடுத்த மாதம் நடைபெறும் ஐரோப்பிய யூனியன் அமைப்பின் மாநாடு ஹங்கேரிக்கு பதிலாக பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெலல்ஸில் நடைபெற உள்ளது, சுழற்சி முறையில் அந்த அமைப்புக்குத் தலைமை வகிக்கும் ஹங்கேரிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ஐ.நா வெளியிடப்பட்ட அறிக்கையில் உலகம் முழுக்க 4 கோடி மக்கள் ஹெச்.ஐ.வி வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக நிமிடத்திற்கு ஒருவர் இறந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.