புதிய தேசிய கல்விக் கொள்கை:
- கல்விக் கொள்கையானது (Education policy) கல்வித் துறையில் செல்வாக்கு செலுத்தும் கொள்கைகள் மற்றும் கொள்கை முடிவுகள், கல்வி அமைப்புகளின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் மற்றும் விதிகளின் சேகரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
- முதல் தேசிய கல்வி கொள்கை 1986 இல் கொண்டுவரப்பட்டது.
- தேசிய கல்விக் கொள்கை என்பது இந்தியாவில் கல்வியை மேம்படுத்துவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட கொள்கையாகும்.
- தேசிய கல்விக் கொள்கை, 2020 (NEP) கல்வியில் பாரிய மாற்றத்தை முன்வைக்கிறது.
- இந்திய நெறிமுறையில் வேரூன்றிய கல்வி முறை இந்தியாவை நிலையான, சமமான மற்றும் துடிப்பான அறிவுச் சமூகமாக மாற்றுவதற்கு, உயர்தர கல்வியை வழங்குவதன் மூலம், இந்தியாவை உலகளாவிய அறிவுசார் வல்லரசாக மாற்றுகிறது.
- புதிய கல்விக் கொள்கை 2023 (NEP) – இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கை NEP என குறிப்பிடப்படுகிறது. இது 1986 இல் உருவாக்கப்பட்ட பின்னர் 1992 இல் மாற்றப்பட்டது.
- புதிய கல்விக் கொள்கையை மோடி அரசு ஏற்றுக்கொண்டது. புதிய கல்விக் கொள்கையில் 10 + 2 அமைப்பு முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
- முன்னாள் இஸ்ரோ தலைவர் கே கஸ்தூரிரங்கன் தலைமையிலான நிபுணர்கள் குழு, பள்ளி முதல் கல்லூரி வரை ஆட்சேர்ப்பு வரை அனைத்தையும் உள்ளடக்கிய இந்தியக் கல்வி அமைப்பில் உள்ள சிரமங்கள் மற்றும் சரிசெய்தல் குறித்து விவாதித்தது.
- புதிய கல்விக் கொள்கையானது கட்டாயப் பள்ளிப் படிப்பை 6-14 வயது முதல் 3-18 வயது வரை நீட்டிக்கிறது.
- 6 – 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் ஆண்டுக்கு 10 நாள்கள் புத்தகப் பைகள் இன்றி பள்ளிக்கு வர தேசிய கல்விக் கொள்கையில் அறிவுறுத்தப்படுகிறது.
இருதரப்பு வா்த்தகத்தை உயா்த்த உடன்பாடு: இந்தியா-ரஷியா
- முதலீடுகளை ஊக்குவிப்பது, வா்த்தகத்துக்கு அந்தந்த நாட்டு ரூபாய்களை பயன்படுத்துவது, எரிசக்தி முதல் வேளாண் துறைகள் வரையிலும் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா – ரஷியா இடையேயான வா்த்தகத்தை ரூ.35 லட்சம் கோடியாக உயா்த்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
- ரஷியா சென்ற பிரதமா் நரேந்திர மோடி, 22-ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார், அப்போது இரு நாடுகளிடையே 9 ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.
- ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் போன்ற பொருள்களுக்கு இந்திய ரூபாயில் பணம் செலுத்தவும், அதுபோல, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு ரஷியாவின் ரூபெல்லில் பணம் செலுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
கீழடி அகழாய்வில் மூங்கில் கம்புகள், பானைகளின் விளிம்புகள்:
- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடி அகழாய்வில் மூங்கில் கம்புகள் ஊன்றுவதற்கான குழிகள், இரு பானைகளின் விளிம்புகள் கண்டறியப்பட்டன.
- தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும்.
- இங்கு 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.
- பிப்ரவரி 2017 இல் கீழடி தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கரியின் கார்பன் டேட்டிங் அங்குள்ள குடியிருப்பு கிமு 200 க்கு சொந்தமானது என்பதை நிறுவியது.
- சங்க காலத்திலிருந்தே தமிழகத்தில் நகர்ப்புற நாகரிகம் இருந்ததை அகழ்வாராய்ச்சிகள் நிரூபித்தன.
- கீழடியின் பள்ளிச்சந்தை திடலில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் ASI யால் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள் வைகைக் கரையில் செழித்து வளர்ந்த பழங்கால நாகரிகத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.
- இதுவரை கண்டெடுக்கப்பட்ட 5,300 தொல்பொருட்களைக் காட்சிப்படுத்த கீழடியில் ஒரு தள அருங்காட்சியகம் அமைப்பதில் மாநில அரசு ஆர்வம் காட்டியதுடன், அதற்கு 72 சென்ட் நிலத்தையும் ஒதுக்க முன்வந்துள்ளது.
கடலூர் அகழாய்வில் வட்டச்சில்லுகள் கண்டெடுப்பு:
- கடலூர் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில் வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- மருங்கூரில் வாழ்விடப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் கடந்த வாரம் இராசராசன் காலச் செம்புக் காசு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
- தற்போது, பல்வேறு அளவுகளில் சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- வட்டச்சில்லுகள் கண்டறியப்பட்டுள்ளதன் வாயிலாகத் தற்போது அகழாய்வு செய்யப்படும் இடம் மக்கள் கூடி வாழ்ந்த ஒரு வாழ்விடப்பகுதிதான் என்பது உறுதியாகின்றது.
ஜூலை 10: உலகளாவிய ஆற்றல் சுதந்திர தினம்
- உலகளாவிய ஆற்றல் சுதந்திர தினம் ஆண்டுதோறும் ஜூலை 10 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
- நோக்கம்: ஆற்றல் மாற்று வடிவங்களுக்கான விழிப்புணர்வை ஊக்குவித்தல். சூரிய, காற்று மற்றும் புவிவெப்பம் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வடிவங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகளையும் இந்த நாள் வழங்குகிறது.
தகவல் துளிகள்:
- பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷிய நாட்டின் உயரிய விருதான புனித ஆன்ட்ரூ அப்போஸ்தலர் என்ற விருதை வழங்கி ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் கெளரவித்தார்.
- மகாராஷ்டிரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு இலவச உயர்கல்வி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
- தேசவிரோத நடவடிக்கைகளுக்காக காலிஸ்தான் ஆதரவு ‘நீதிக்கான சீக்கியா்கள் அமைப்பு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்தது.
- திருச்சி என்.ஐ.டி. கல்லுாரியில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார், சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த மலைவாழ் பழங்குடியின மாணவி சுகன்யா.
- உத்தர பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தில் உயிரிழந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநா் அனுபம் குல்ஷிரேஸ்தா, வி.சைத்ரா கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை மாநில அரசு அமைத்தது.
- இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.