5th July Daily Current Affairs

தேசிய தரவரிசைப் பட்டியலில் புதுவை பல்கலைக்கழகம் 8-ஆவது இடம்:

  • தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலில் புதுவை மத்திய பல்கலைக்கழகம் 8-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்திய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (ஐஐஆா்எப்) அமைப்பானது, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், சிறப்புக் கல்லூரிகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களை வரிசைப்படுத்துகிறது.
  • 2024 – ஆம் ஆண்டுக்கான தரவரிசையில், 7 கருத்துகள் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
  • வேலைவாய்ப்பு, செயல்திறன், கற்பித்தல், கற்றல் வளங்கள், ஆராய்ச்சி, தொழில் வேலைவாய்ப்பு மற்றும் ஒருங்கிணைப்பு, வேலைவாய்ப்பு உத்திகள் மற்றும் ஆதரவு, எதிர்கால நோக்குநிலை, வெளிப்புறக் கருத்து என கருத்துருக்கள் அமைந்துள்ளன.
  • அதன்படி, புதுவை பல்கலைக்கழகம் தரவரிசையில் பல்கலைக்கழகம் நாட்டின் சிறந்த மத்தியப் பல்கலைக்கழகங்களில் 8-ஆவது இடத்தைப் பெற்றது.

பயங்கரவாத ஆதரவு நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் எஸ்சிஓ மாநாடு: இந்தியா

  • இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான் உள்பட 9 நாடுகள் இடம்பெற்றுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 24-ஆவது உச்சி மாநாடு கஜகஸ்தான் தலைநகா் அஸ்தானாவில் தொடங்கியது.
  • பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குதல், ஆள்சோ்ப்பு, எல்லை தாண்டிய பயங்கரவாதம் என அனைத்து வகையான பயங்கரவாத செயல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • இல்லையெனில், பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும்.
  • இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலே கடந்தாண்டு இந்தியா தலைமையில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டில் கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.
  • இந்த மாநாட்டிற்கு அடுத்த ஆண்டு தலைமையேற்கவுள்ள நாடு சீனா ஆகும்.

பாரிஸ் ஒலிம்பிக்:

  • ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 6 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை பாரிஸில் நடைபெறவுள்ளது.
  • பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்கள் 27 பேர் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது, அதில் 5 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாவர்.
  • தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ் ஆகியோரும் தடகள அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இந்திய நகரங்களில் ஏற்படும் இறப்புகளில் 7% காற்று மாசுபாட்டால் ஏற்படுகின்றன:

  • இந்தியாவில் 10 பெரிய நகரங்களில் ஏற்படும் இறப்புகளில் 7 சதவீதத்திற்கு மேற்பட்டவை காற்று மாசுபாட்டினால் ஏற்படுவதாக ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆய்வுக்குழு செய்த ஆய்வில் புற்றுநோயை ஏற்படுத்தும் நுண்துகள்களான பி.எம் 5 மாசுபடுத்திகள் குறித்து அகமதாபாத், பெங்களூரு, சென்னை, தில்லி, ஹைதராபாத், கல்கத்தா, மும்பை, புனே, சிம்லா மற்றும் வாரணாசி நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
  • கடந்த 2008 முதல் 2019 ஆண்டு வரை ஆண்டுக்கு ஏறத்தாழ 33,000 இறப்புகள் பி.எம் 5 நுண்துகள்களின் வெளிப்பாடுகளால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
  • இந்தியாவில் இதன் அளவு ஒரு கன மீட்டருக்கு 60 மைக்ரோகிராம்கள் மட்டுமே இருக்க உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளதாகவும், ஆனால் 4 மடங்கு அதிகளவில் இருப்பதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இது பக்கவாதம், இதய நோய், நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற சுவாச நோய்களை உருவாக்கும் என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகிறது.

ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வா்திட்டம்:

  • ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வா்‘ திட்டத்தை தருமபுரியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் ஜூலை 11-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
  • தருமபுரி மாவட்டம், பாளையம்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஊரக மக்களுடன் முதல்வா் என்கிற திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
  • மகளிர் உரிமைத்தொகை பதிவு செய்யும் முகாம் தொப்பூரில் கடந்த ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி முதல்வா் தொடங்கிவைத்தார்.
  • ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களின் குறைகளை நிவா்த்தி செய்யவும், அரசின் சேவைகளை மக்களுக்கு விரைவாகச் சோ்த்திடும் வகையிலும் மக்களை நாடிச் செல்லும் தமிழக அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான மக்களுடன் முதல்வா் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

நீங்கள் நலமா திட்டம்:

  • அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைவைதை குறித்தும், மக்களின் கோரிக்கைகள் குறித்து அரசுத் தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “நீங்கள் நலமா?” என்ற திட்டத்தை கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைத்தார்.
  • தமிழக அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன் பெறும் பயனாளிகளை அரசுத் துறை அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள் தொடா்பு கொண்டு, அரசின் நலத் திட்டங்கள் குறித்துக் கேட்டறியும் திட்டமாக நீங்கள் நலமா திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • இதனைத்தொடர்ந்து மக்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தங்கள் புகார்களுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறதா என அதிகாரிகள் கேட்டு வருகின்றனர்.

மலேசியாவில் சங்கே முழங்குமுப்பெரும் விழா:

  • மலேசியா நாட்டில் தமிழ்தானா ஸ்ரீ ருத்ரன் நடனக்குழு மற்றும் மசாய் ஸ்ரீ சுப்பிரமணியா் ஆலயம் மற்றும் தில்லி கலை இலக்கியப் பேரவை ஆகியவை இணைந்து ‘சங்கே முழங்கு’ நிகழ்ச்சி கடந்த அண்மையில் மலேசியாவில் நடந்தது.
  • நிகழ்ச்சிக்கு மலேசியாவின் சிகாமட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினா் யுவனேசன் தலைமை வகித்தார்.
  • தில்லி இலக்கியப் பேரவையின் பொதுச் செயலாளா் ப.குமாரின் முத்தமிழ்சார் முன்னெடுப்புகளைப் பாராட்டி அவருக்கு ‘தமிழ்த்திருமகன் விருது 2024’ வழங்கப்பட்டது.
  • தில்லி கலை இலக்கியப் பேரவை இணையவழியில் வழங்கிய உலக மகளிர் தின நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த மலேசிய ஆசிரியை தனலெட்சுமி ராஜேந்திரனுக்கு ‘முத்தமிழ் கலையரசி விருது’ மற்றும் மலேசிய ஆசிரியா் தினத்தை முன்னிட்டு ‘லட்சிய ஆசிரியை’‘ விருது வழங்கப்பட்டது.
  • தில்லி தமிழ் சங்கத்தின் பொதுச்செயலாளா் இரா.முகுந்தனுக்கு ‘சங்கத் தமிழ் வளா் சான்றோர் விருது வழங்கப்பட்டது.

அமெரிக்காவில் அயோத்தி ராமர் கோவிலின் மாதிரி:

  • அமெரிக்காவின் நியூயார்க்கில் வருகிற ஆகஸ்ட் 18 அன்று நடைபெற இருக்கும் இந்திய தின அணிவகுப்பில், அயோத்தி ராமர் கோவிலின் மாதிரி காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.
  • அயோத்தி ராமர் கோவிலின் மாதிரி அமெரிக்காவில் காட்சிக்கு வைக்கப்பட இருப்பது இதுவே முதல்முறையாகும்.
  • நியூயார்க்கில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய தின அணிவகுப்பு, இந்தியாவிற்கு வெளியே நடத்தப்படும் மிகப்பெரிய சுதந்திர தின கொண்டாட்டமாகும்.
  • இந்த அணிவகுப்பு, நியூயார்க் மிட் டவுன் கிழக்குப் பகுதி 38வது தெருவிலிருந்து 27வது தெரு வரை நடைபெறும்.
  • அணிவகுப்பில் வைக்கப்படவுள்ள அயோத்தி ராமர் கோவிலின் மாதிரி 18 அடி நீளமும், 8 அடி உயரமும் கொண்டது.

தகவல் துளிகள்:

  1. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ரோஜர் பின்னி பிரதமர் மோடிக்கு ‘நமோ 1’ என்ற இந்திய அணியின் ஜெர்சியை வழங்கி கௌரவப்படுத்தினார்.
  2. மத்திய கிழக்கு நாடுகளில் யுபிஐ செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய இந்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது, இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள், யுபிஐ செயலிகள் மூலம் ’க்யூ-ஆர் கோடை’ ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்.
  3. கனடாவின் முப்படை தளபதியாக ஜென்னி கரிக்னன் முதல்முறையாக பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
  4. மேட்டூா் அருகே உள்ள காரைக்காட்டைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி, இருசக்கர வாகனத்தின் என்ஜின், சக்கரத்தைக் கொண்டு பெட்ரோலில் இயங்கும் வகையில் உழவு, விதைப்பு, தெளிப்பு ஆகியவற்றை செய்யும் இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளார்.
  5. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் 15, 16- ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  6. சித்த மருத்துவத் துறையில் சிறப்பாக சேவைபுரிந்த தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சித்த மருத்துவா் ப.சங்கரராஜ், கண்டமனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவா் மு.கல்பனா ஆகியோருக்கு சிறந்த மருத்துவா்களுக்கான விருது வழங்கப்பட்டது.
  7. தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவராக மகேசன் காசிராஜனுக்கு ஆளுநா் ஆா். என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
  8. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 25-ஆவது உச்சி மாநாடு அடுத்த ஆண்டு சீனாவில் நடைபெற உள்ளது.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these