17th April Daily Current Affairs – Tamil

புதிய சட்டத்தின்படி தோ்தல் ஆணையர்கள் நியமனம்:

  • இந்திய தேர்தல் ஆணையத்தில் ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்கள் இடம்பெற்றிருப்பர்.
  • தேர்தல் ஆணையர்களை மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நியமனம் செய்து வந்தார்.
  • இரு தோ்தல் ஆணையர்களில் பணி மூப்பு பெற்றவர், தலைமைத் தோ்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு வந்தார்.
  • இந்த நடைமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த 2023 -ஆம் ஆண்டு மார்ச் 2 – ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தலைமைத் தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையா்கள் நியமனம் தொடர்பாக பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது.
  • பிரதமா் தலைமையிலான தேர்தல் ஆணையா்கள் தோ்வுக் குழுவில் ஒரு மத்திய அமைச்சா் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெறும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்றி, காலியாக இருந்த 2 தேர்தல் ஆணையர் பணியிடங்களையும் நிரப்பியது.
  • மத்திய அரசு கொண்டுவந்த 2023 புதிய சட்டத்தின் கீழ், முதல் தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை கடந்த பிப்ரவரி 17 – ஆம் தேதி மத்திய அரசு நியமித்தது.

ஏப்ரல் 17: உலக ஹீமோபிலியா தினம்

  • ஹீமோபிலியா நோய் மற்றும் பிற மரபுவழி இரத்தப்போக்கு கோளாறுகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 17 அன்று உலக ஹீமோபிலியா தினம் அனுசரிக்கப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. உச்சநீதிமன்றத்தின் 52 – ஆவது தலைமை நீதிபதியாக மே 14 – ஆம் தேதி பி.ஆர்.கவாய் பதவியேற்க உள்ளார்.
  2. உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா.
  3. சாலைப் பாதுகாப்பு பிரசாரம் தொடா்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெற்றது. ‘மற்றவர்களையும் கவனிங்கள், நீங்களும் பாதுகாப்பாக இருங்கள்’ என்கிற கருப்பொருளில் நிகழாண்டு இப்பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
  4. நிகழாண்டு எழுத்தாளர் தமிழவன் மற்றும் பன்முகப்படைப்பாளரான ப.திருநாவுக்கரசுக்கும் மா.அரங்கநாதன் இலக்கிய விருது 2025 வழங்கப்பட்டது.
  5. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 2028 – ஆம் ஆண்டு  ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற உள்ளது.
  6. புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளது.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these