கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு:
- தமிழகத்தின் பெருமைமிகு வேளாண் உற்பத்திப் பொருள்களில் முக்கியமானதாக விளங்கும் கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
- ஒரு குறிப்பிட்ட பகுதியில் விளைவிக்கப்படும் அல்லது குறிப்பிட்ட தனித்துவத்தோடு உருவாக்கப்படும் சிறப்பு வாய்ந்த, தனித்தன்மைகொண்ட பொருள்களை சிறப்பிக்கும் வகையில் மத்திய அரசால் இந்த புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.
- இந்த வரிசையில் புவிசார் பெற்ற பொருள்களை, எந்த நிலையிலும், வியாபார லாபத்துக்காகவோ, போலியாக வேறு யாரேனுமோ இந்தப் பெயரை பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.
- முதல்முறையாக, விவசாய பொருளான கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
- ஏற்கனவே, தமிழகத்தில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடிச் சேலை, காஞ்சிபுரம் பட்டுச்சேலை, மதுரை மல்லிகை, தஞ்சை கலைத்தட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலைமிட்டாய், பழநி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு உள்ளிட்ட பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1:ஏப்ரல் முட்டாள்கள் தினம்.
- ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் அனைத்து முட்டாள்கள் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஏப்ரல் 1: ஒடிசா தினம்.
- இது உத்கல் திவாஸ் என்றும் அழைக்கப்படும். ஒடிசா தினம், ஏப்ரல் 1, 1936 அன்று ஒடிசா மாநிலம் உருவானதைக் குறிக்கிறது.
ஏப்ரல் 1: பார்வையின்மை தடுப்பு வாரம்.
- பார்வையின்மைக்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழிகள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 7 வரை இது அனுசரிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- நீதி ஆயோக் அமைப்பு, தேசிய பொருளியல் ஆராய்ச்சிக் கவுன்சிலுடன் (என்சிஏஇஆர்) இணைந்து உருவாக்கியுள்ள மாநில பொருளாதார தகவல் மைய வலைபக்கத்தை மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்யவுள்ளார்.
- நாய்க்கடி (ரேபிஸ்), மற்றும் பாம்புக்கடிக்கான தடுப்பூசிகளின் நாடு தழுவிய இருப்பைக் கண்காணிக்க ‘ஜூவின்’ என்ற வலைதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
- பிரதமா் நரேந்திர மோடியின் தனிச் செயலராக நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருச்சியில் புதிதாக அமையவுள்ள நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
- முனைவா் வ.சு.யசோதா நல்லாளுக்கு 2024- ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தூய தமிழ் பற்றாளா் விருது கிடைத்துள்ளது.