27th March Daily Current Affairs – Tamil

பாதுகாப்பான நாடுகளின் பட்டியல்:

  • உலகளவில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை நம்பியோ வெளியிட்டுள்ளது.
  • நம்பியோ 2025 ஆய்வின்படி, அன்டோரா நாடுதான் உலகளவில் பாதுகாப்பான நாடுகளின் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • ஐக்கிய அரபு அமீரகம் இரண்டாவது இடத்தையும், கத்தார் மூன்றாவது இடத்தையும் கைப்பற்றியுள்ளன.
  • 7 மதிப்பெண்களுடன் 66 – ஆவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது.

மார்ச் 27: உலக நாடக அரங்க நாள் (World Theatre Day).

  • உலக நாடக அரங்க நாள் (World Theatre Day) ஆண்டுதோறும் மார்ச் 27 – ஆம் நாளன்று பன்னாட்டு அரங்க நிறுவனத்தினால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
  • உலக நாடக அரங்க நாள் உலக நாடக அரங்க நிறுவனத்தினால் 1961 – ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு இந்நிறுவனத்தின் மையங்களிலும், பன்னாட்டு நாடக அரங்க சமூகங்களினாலும் கொண்டாடப்படுகின்றது.

தகவல் துளிகள்:

  1. ரூ 6,900 கோடியில் பீரங்கிகள், ராணுவ வாகனங்கள் வாங்க பாரத் ஃபோர்ஜ், டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் நிறுவனங்களுடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  2. உலகளவில் குளிரூட்டிகள் பயன்பாட்டில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.
  3. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜப்பானைவிட அதிகரிப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
  4. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியா, கடந்த பத்தாண்டுகால பொருளாதாரத்தில் 105 சதவிகித வளர்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தரவறிக்கையில் கூறியுள்ளது.
  5. மதுரையில் ஆதரவற்ற முதியோரை மீட்க ‘காவல் கரங்கள்’திட்டத்தை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் தொடங்கி வைத்தார்.
  6. 2025 – ஆம் ஆண்டு பாட்னாவில் நடந்த செபக் தக்ரா உலகக் கோப்பையில், ஆண்கள் ரெகு அணி, நாட்டின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these