பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டம்:
- பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் 68 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
- ஆயுஸ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்யத் திட்டம் (AB PM-JAY) என்பது இந்திய அரசின் தேசிய ஆரோக்கியக் கொள்கை யின் ஒரு பகுதி ஆக இருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆகும்.
- இதன் நோக்கம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சையை இலவசமாக, பொருளாதார வசதியில் கீழடுக்கில் இருக்கும் 40% மக்களுக்கு, பலவீனமானவர்களுக்கு அளிப்பதாகும்.
- இத்திட்டம் உலகிலேயே மிகப்பெரிய, அரசால் முழுவதுமாக மருத்துவக் காப்பீடு அளிக்கும் திட்டம் ஆகும்.
- இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மூலம் ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவச் சேவைகளுக்கான காப்பீடு வழங்கப்படுகிறது.
இந்தியா – பிரான்ஸ் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி: வருணா
- இந்தியா – பிரான்ஸ் இடையேயான நீடித்த கடல்சார் நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் இரு நாட்டுக் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி மார்ச் 19 முதல் 22 வரை நடைபெறுகிறது.
- இந்தக் கூட்டுப் பயிற்சி கடந்த 2001 – ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடற்படையின் செயல்பாடுகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- இந்த ஆண்டு நடைபெறும் பயிற்சியில் கடற்பகுதிகள், வான் பகுதிகள் ஆகியவற்றில் உத்திசார் பயிற்சிகளை மேற்கொள்கிறது.
- விமானம் தாங்கி போர்க் கப்பல்களான விக்ராந்த் மற்றும் சார்லஸ் டி கோல் ஆகிய இரு கப்பல்கள் இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றன.
- இந்தப் பயிற்சியில் பிரான்சின் நவீன ரக ரஃபேல்-எம் போர் விமானங்களும் இந்தியாவின் மிக் – 29 கே போர் விமானங்களும் இடம் பெற்றுள்ளது.
விக்யான் தாரா: இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் திட்டம்:
- இந்தியாவின் அறிவியல் துறைக்கான எதிர்காலத்தை வலுப்படுத்தும் வகையில் விக்யான் தாரா திட்டத்திற்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
- விக்யான் தாரா திட்டம் என்பது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) கீழ் இயங்கும் பல அறிவியல் மேம்பாட்டுத் திட்டங்களை ஒருங்கிணைத்து, அறிவியல் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மத்தியத் துறைத் திட்டமாகும்.
தகவல் துளிகள்:
- நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபர் லக்ஸன்.
- இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்த இந்தியா-நியூஸிலாந்து பொருளாதார உச்சி மாநாட்டில் பிரதமா் கிறிஸ்டோபர் லக்ஸன் பங்கேற்றார்.
- இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையொப்பம் ஆக உள்ளது.
- நான்கு வெவ்வேறு விண்கலங்களில் பயணம் செய்த முதல் நபர் சுனிதா வில்லியம்ஸ்.
- சென்னை போரூரில், 16.6 ஏக்கர் பரப்பளவில், எம்.எஸ்.சுவாமிநாதன் சதுப்புநில பூங்கா அமைக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.