இந்தியா-மலேசியா இணைந்து நடத்தும் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு:
- ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) மற்றும் அதன் 8 பார்வையாளா் உறுப்பு நாடுகளின் கீழ் இயங்கும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிபுணா் பணிக் குழுவின் மாநாடு தில்லியில் தொடங்க உள்ளது.
- மலேசியாவுடன் இணைந்து இந்தியா சார்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் ஆசியான் உறுப்பு நாடுகளான புரூனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் பங்கேற்க உள்ளன.
- அந்த அமைப்பின் பார்வையாளர் உறுப்பினர்களான இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூஸிலாந்து, தென் கொரியா, ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
- பயங்கரவாத எதிர்ப்புக்கான நிபுணா் பணிக் குழுவின் மாநாட்டை இந்தியா இணை தலைமையேற்று நடத்துவது இதுவே முதல் முறை ஆகும்.
தகவல் துளிகள்:
- ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த காற்றின் தரக் குறியீடு தொழில்நுட்ப நிறுவனமான ஐக்யூஏஐஆர் நிறுவனம், 2024-ஆம் ஆண்டின் தரவுகளின் அடிப்படையில் காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் மற்றும் நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
- உலக அளவில் காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 5 – ஆவது இடத்தில் உள்ளது.
- ஆசியாவில் கப்பல்களுக்கு எதிரான கொள்ளை சம்பவங்கள் மற்றும் கடற்கொள்ளையா்கள் தடுப்புக்கான பிராந்திய ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ரிகாப் ) அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு தகவல்கள் அளிக்கும் தகவல் பகிர்வு மையத்தின் செயல் இயக்குநராக வி.டி.சஃபேகா் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே தடையற்ற வணிக ஒப்பந்தம் தொடங்கப்பட்டுள்ளது.
- ரிசர்வ் வங்கிக்கு டிஜிட்டல் மாற்றத்துக்காக இந்த ஆண்டுக்கான (2025) விருது, இங்கிலாந்தின் லண்டனில் உள்ள மத்திய வங்கியால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
- இது ரிசர்வ் வங்கியின் வல்லுநர் குழுவால் உருவாக்கப்பட்ட அதன் புதுமையான டிஜிட்டல் முயற்சிகளான பிரவா, சார்த்தி ஆகியவற்றை அங்கீகரிப்பதாக அமைந்துள்ளது.
- வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.