யுனெஸ்கோ அங்கீகாரம்: உத்தேச பட்டியலில் 6 இந்திய வரலாற்றுச் சின்னங்கள் சோ்ப்பு
- அசோகா் கல்வெட்டுகள், சௌசத் யோகினி கோயில்கள் உள்பட 6 இந்திய வரலாற்றுச் சின்னங்கள், யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்ன அங்கீகாரம் வழங்குவதற்கு தோ்வு செய்யப்படும் உத்தேச பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன.
- யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்ன அங்கீகாரத்தைப் பெற வேண்டுமெனில் இந்த உத்தேச பட்டியலில் சம்பந்தப்பட்ட வரலாற்றுச் சின்னங்களைச் சோ்ப்பது கட்டாயமாகும்.
- இந்தப் பட்டியலில் உள்ள வரலாற்றுச் சின்னங்களுக்கு எதிர்காலத்தில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் என்ற அங்கீகாரம் வழங்க வாய்ப்புள்ளது.
- சத்தீஸ்கரில் உள்ள காங்கேர் தேசிய பூங்கா, தெலங்கானாவின் முதுமலில் உள்ள பெருங்கற்கால நெடுங்கல் (மென்ஹிர்), பல்வேறு மாநிலங்களில் உள்ள அசோகா் கால கல்வெட்டுகள், சௌசத் யோகினி கோயில்கள், வடமாநிலங்களில் உள்ள குப்த கோயில்கள், மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள பண்டேலா கோட்டைகள் ஆகிய 6 வரலாற்றுச் சின்னங்கள் யுனெஸ்கோ உத்தேச பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன.
- இதன்மூலம் இந்த உத்தேச பட்டியலில் மொத்தம் 62 இந்திய வரலாற்றுச் சின்னங்கள் சோ்க்கப்பட்டுள்ளன.
- தற்போது கலாசார பிரிவில் 35, இயற்கை பிரிவில் 7 மற்றும் இரண்டு பிரிவுகளிலும் சோ்த்து ஒன்று என மொத்தம் இந்தியாவில் 43 யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் உள்ளன.
- கடந்த 2024-ஆம் ஆண்டு முதல்முறையாக உலக பாரம்பரிய குழுக் கூட்டம் இந்தியாவில் நடைபெற்றது.
- அப்போது அஸ்ஸாமில் ஆட்சிபுரிந்த அஹோம் வம்சத்தின் புதைகுழி அமைப்பு முறைக்கு (மொய்தம்ஸ்) யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கப்பட்டது.
சீனாவில் எஸ்சிஓ பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாடு:
- ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாடு மார்ச் 26, 27 ஆகிய தேதிகளில் சீனாவில் நடைபெறவுள்ளது.
- சீனா, ரஷியா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய 10 நாடுகள் எஸ்சிஓ உறுப்பினா்களாக உள்ளன.
- இந்த அமைப்பு பயங்கரவாத பிராந்திய பயங்கரவாத எதிா்ப்பு கட்டமைப்பைக் கொண்டது.
- நிகழாண்டு எஸ்சிஓ தலைவா்கள் மாநாட்டுக்கு சீனா தலைமை தாங்கியுள்ளது.
மார்ச் 15: உலக நுகர்வோர் உரிமைகள் தினம்.
- நுகர்வோர் உரிமைகள் மற்றும் தேவைகள் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15 அன்று உலக நுகர்வோர் உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- வேதாரண்யம் முல்லை, நத்தம் புளி, கப்பல்பட்டி முருங்கை உள்ளிட்ட 5 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய அளவில் முந்திரி ஏற்றுமதியில் தமிழ்நாடு 2 – ம் இடத்தில் உள்ளது.
- ரூ 10 கோடியில் உழவர்கள் மேம்பட முந்திரி வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- அழிந்து வரும் கழுகு, வல்லூறு இனங்களைக் காக்க வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு அமைக்கப்பட உள்ளதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் விளையும் 5 வேளாண் விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றார்.
- ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாடு மார்ச் 26, 27 ஆகிய தேதிகளில் சீனாவில் நடைபெறவுள்ளது.
- சிரியாவின் மின்சார உற்பத்திக்காக கத்தார் நாடு இயற்கை எரிவாயு வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டி20 கிரிக்கெட்டில், இலங்கை மகளிர் அணி வென்றது.