8th March Daily Current Affairs – Tamil

சௌர்ய வேதனம் உத்சவ்:

  • பீகாரில், கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள மோதிஹரியில், முப்படைகளும் சௌர்ய வேதனம் உத்சவ்வை நடத்துகின்றன .
  • மோதிஹரியில் உள்ள காந்தி மைதானத்தில் “உங்கள் படையை அறிந்து கொள்ளுங்கள்” பிரச்சாரத்தின் கீழ் இரண்டு நாள் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
  • பீகார் ஆளுநர் ஆரிஃப் முகமது கான்நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
  • இளைஞர்களிடையே தேசபக்தி உணர்வை ஏற்படுத்துவதற்காக, இந்த நிகழ்வு இந்திய-நேபாள எல்லைக்கு அருகிலுள்ள ஒரு எல்லைப் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்திய ஆயுதப் படைகளின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் வலிமையை வெளிப்படுத்துவதன் மூலம் குடிமக்களுக்கு கல்வி கற்பிப்பதையும் ஊக்குவிப்பதையும் இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.

மார்ச் 8: சர்வதேச மகளிர் தினம்.

  • பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளைக் கொண்டாடுவதற்காக இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 அன்று உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.
  • 2025 ஆம் ஆண்டின் கருப்பொருள்: “அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான உரிமைகள். சமத்துவம். அதிகாரமளித்தல்” .

தகவல் துளிகள்:

  1. மோரீஷஸ் தேசிய தினம் மார்ச் 12 – ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது, இதில் சிறப்பு விருந்தினராகக் பிரதமா் மோடி கலந்துகொள்ள உள்ளார்.
  2. மோரீஷஸ் நாட்டு பிரதமா் நவீன் ராம்கூலம்.
  3. 2014 – ஆம் ஆண்டு வரை நாட்டின் முதல் சீக்கிய பிரதமராகவும், பொருளாதார சீா்திருத்தங்களின் சிற்பியாகவும் இருந்த மன்மோகன் சிங்குக்கு தில்லியில் உள்ள ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தலத்தில் நினைவிடம் அமைக்கப்படவுள்ளது.
  4. இருதரப்பு வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் கூட்டு பொருளாதார ஆணையத்தை அமைக்க இந்தியாவும் அயர்லாந்தும் ஒப்புக்கொண்டுள்ளன.
  5. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான பிரத்யேக மையத்தை சென்னை சோழிங்கநல்லூரில் அமைப்பதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
  6. ‘என்டே ஆண்கள்’என்ற நளினி ஜமீலாவின் மலையாள மொழி சுயசரிதை புத்தகத்தை ‘எனது ஆண்கள்’என்ற பெயரில் தமிழில் மொழிபெயா்த்த ப. விமலாவின் படைப்பு சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பு நூலாக தோ்வு செய்யப்பட்டது.
  7. ப. விமலாவின் படைப்புக்கு 2024 – ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
  8. பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு மறைந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயர் வைக்கப்பட உள்ளது.
  9. பெங்களூரு சிட்டி பல்கலைக்கழகத்தை டாக்டர் மன்மோகன் சிங் பெங்களூரு சிட்டி பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these