19th February Daily Current Affairs – Tamil

இந்தியாகத்தார் 7 ஒப்பந்தங்கள்:

  • இந்தியா-கத்தார் இடையிலான நல்லுறவை உயா்த்துவதற்கான ஒப்பந்தம் உள்பட ஏழு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.
  • இரட்டை வரி விதிப்பு தவிா்ப்பு மற்றும் நிதி முறைகேடுகள் தடுப்பு தொடா்பாக திருத்தப்பட்ட ஒப்பந்தமும் கையொப்பமானது.
  • இவை தவிர, பொருளாதார கூட்டுறவு, ஆவணக் காப்பகத் துறை ஒத்துழைப்பு, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பு உள்பட மேலும் ஐந்து புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
  • திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் எரிவாயு ஆகியவை கத்தாரில் இருந்து இந்தியாவின் முக்கிய இறக்குமதிகளாகும். எத்திலீன், புரோபலீன், அமோனியா, யூரியா போன்ற பல்வேறு ரசாயனங்கள், பிளாஸ்டிக் உள்ளிட்டவையும் இறக்குமதி செய்யப்படுகின்றன.
  • கத்தார் அரசர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி.

பிஎம்ஸ்ரீ பள்ளிதிட்டம்:

  • தேசிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள ‘பிஎம்ஸ்ரீ பள்ளி’ திட்டத்தில் கையொப்பமிடாததால் நிகழ் கல்வியாண்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு தரவேண்டிய ரூ  2,152 கோடி நிதி இதுவரை வழங்கப்படவில்லை.
  • பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டம் என்பது, மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும்.
  • இத்திட்டத்தின் மூலம், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
  • இந்தத் திட்டத்தில், பள்ளிகள் முன்மாதிரியான பள்ளிகளாக ஆவதற்கு ஆதரவாக போட்டியிடுகின்றன.
  • இந்தத் திட்டத்தின் கீழ், பள்ளிகளில் கலைத் திருவிழாக்கள், மாணவர் நலன் சார்ந்த உதவி திட்டங்கள், பள்ளி வளர்ச்சி காண திட்டங்கள் நடத்தப்படுகின்றன.
  • இத்திட்டம், வளரும் இந்தியாவிற்கான, பிரதமரின் பள்ளிகள் (PM SHRI) என்றும் அழைக்கப்படுகிறது.

 தகவல் துளிகள்:

  1. திருச்சி, மதுரையில் ரூ  717 கோடியில் புதிதாக டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
  2. சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியத்துடன் ‘பிங்க்’ ஆட்டோக்களை இயக்கும் திட்டம் சமூகநலத் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  3. ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில் ‘மேட் இன் ரஷியா’ திருவிழா வருகின்ற பிப்ரவரி 21 ல் நடத்தப்படவுள்ளது.
  4. முக்கியமான மற்றும் மூலோபாய தாதுக்கள், மேம்பட்ட பொருட்கள் மற்றும் மருந்துகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, இந்தியாவும் அமெரிக்காவும் மூலோபாய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மாற்றும் உறவு (TRUST) முயற்சியைத் தொடங்கியுள்ளது.
  5. சீனாவின் ஆழ்கடல் ‘விண்வெளி நிலையம்’ 2030-ல் அமைக்கப்பட உள்ளது.
  6. வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை 9 சிறந்த கைவினைஞர்களுக்கும், பூம்புகார் மாநில விருதுகளை  9 சிறந்த கைவினைஞர்களுக்கும் முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கினார்.
  7. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 9-ஆவது சீசன், பாகிஸ்தானில்  தொடங்குகிறது.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these