54.58 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடக்கம்:
- வங்கிக் கணக்கு வைத்திருக்காத குடும்பங்களுக்கு உலகளாவிய வங்கி சேவைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கில், 2014 – ஆம் ஆண்டு பிரதமரின் ஜன்தன் திட்டம் தொடங்கப்பட்டது.
- இதில் பின்னர் மாற்றம் ஏற்பட்டு வங்கிக் கணக்கு இல்லாத ஒவ்வொரு தனிநபருக்கும் வங்கி சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்பட்டது.
- நாட்டில் 54.58 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா ஆயுள் காப்பீட்டுட் திட்டம்:
- பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா ஆயுள் காப்பீட்டுட் திட்டம் (PMJJBY) இந்திய அரசு உறுதுணையாக இருக்கும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் ஆகும்.
- இத்திட்டம் முதன்முதலில் 2015 – ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் பட்ஜெட் உரையின் போது அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியால் பிப்ரவரி 2015 – இல் அறிவிக்கப்பட்டது.
- பிரதமர் நரேந்திர மோதியால் 9 மே மாதம் கொல்கத்தாவில் முறைப்படி துவக்கிவைக்கப் பட்டது.
- பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா ஆயுள் காப்பீட்டுட் திட்டம் வங்கிக் கணக்கு வைத்துள்ள, 18 முதல் 50 வரை நிரம்பியுள்ளவர்கள் சேரலாம்.
- இந்தக் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப் படுகிறது.
- இத்திட்டம் பிரதமரின் ஜன் தன் திட்டதுடன் இணைக்கப்படும்.
‘பிஎம் – ஸ்ரீ’ திட்டம்:
- பிரதமரின் எழுச்சி பெறும் இந்தியா பள்ளிகள் என்ற ‘பிஎம் – ஸ்ரீ’ திட்டம் 14,500 பள்ளிகளை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டதாகும்.
- இதன் மூலம் 10 கோடியே 80 லட்சம் மாணவா்கள் பயனடைவார்கள் என்று மத்திய அரசு எதிா்பாா்க்கிறது.
- இந்தப் பள்ளிகள் மாதிரி கல்வி நிலையங்களாக செயல்படுவதையும், தேசிய கல்விக் கொள்கையின் உணா்வை உள்ளடக்கியிருப்பதை உறுதி செய்வதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், தில்லி ஆகியவை மட்டுமே கல்வி அமைச்சகத்துடன் பிஎம் – ஸ்ரீ புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2027-ஆம் ஆண்டிற்குள் யானைக்கால் நோய் இல்லாத இந்தியா:
- வருகின்ற 2027-ஆம் ஆண்டிற்குள் லிப்ம்பாட்டிக் பைலேரியாசிசு(எல்.எஃப்) என்கிற யானைக்கால் நோய் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க மத்திய அரசு உறுதிபூண்டு இருப்பதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் ஜெபி நட்டா தெரிவித்தார்.
- நிணநீா் யானைக்கால் நோய், ஃபைலேரியா நுண்புழுவால் ஏற்படுவதாகும்.
- இந்த நுண்ணிய ஒட்டுண்ணிப் புழுக்கள் கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது.
பிப்ரவரி 11: உலக நோயாளிகள் தினம்.
- உலக நோயாளிகள் தினம் பிப்ரவரி 11 அன்று அனுசரிக்கப்படுகிறது.
பிப்ரவரி 11: அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம்.
- அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பங்கை அங்கீகரிக்கும் விதமாகவும், பயனாளிகளாக மட்டுமல்லாமல் மாற்றத்தின் முகவர்களாகவும் பிப்ரவரி 11 அன்று அனுசரிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நடவடிக்கைகள் சார்ந்த சர்வதேச மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தொடங்கவுள்ளது, இதற்கு இமானுவல் மேக்ரானும் பிரதமர் மோடியும் தலைமை வகிக்கின்றனர்.
- பெங்களூருவில் ஏரோ இந்தியா – 2025 விமான சாகச நிகழ்ச்சி மற்றும் கண்காட்சியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தார்.
- உலகின் தலைசிறந்த கல்லூரிகள் பட்டியலில், 60-ஆவது இடத்துக்கு சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) தோ்வாகியுள்ளது.
- இந்த பட்டியலில் அமெரிக்காவின் ஹாவர்டு மருத்துவக் கல்வி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.