புதிய வருமான வரி மசோதா:
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதிய வருமான வரி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- 1961 – ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்திற்கு மாற்றாக முன்மொழியப்பட்ட புதிய வருமான வரி மசோதா, நேரடி வரிச் சட்டத்தை எளிமைப்படுத்துதல், நிச்சயமற்ற தன்மைகளை நீக்குதல் மற்றும் சட்ட மோதல்களைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- தற்போதைய வருமான வரிச் சட்டம் 1961, தனிப்பட்ட ஐடி, கார்ப்பரேட் வரி, பத்திர பரிவர்த்தனை வரி உள்ளிட்ட நேரடி வரிகளை நிர்வகிக்கிறது.
- மேலும் முன்னர் பரிசு மற்றும் செல்வ வரி ஆகியவை இதில் அடங்கும்.
- தற்போது இது 23 அத்தியாயங்களில் 298 பிரிவுகளைக் கொண்டுள்ளது.
- செல்வ வரி, பரிசு வரி, விளிம்பு நன்மை வரி மற்றும் வங்கி பண பரிவர்த்தனை வரி உள்ளிட்ட பல வரிகள் காலப்போக்கில் நீக்கப்பட்டுள்ளன.
- 2022 – ஆம் ஆண்டு புதிய வருமான வரி ஆட்சி அறிமுகப்படுத்தப்பட்டதற்கு கூடுதல் திருத்தங்கள் தேவைப்பட்டன, சட்டத்தை மேலும் விரிவுபடுத்தின.
புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள்:
- மாணவ, மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ 1,000 ஊக்கத் தொகை வழங்கும் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களால் உயா்கல்வியில் மாணவா் சோ்க்கை தொடா்ந்து அதிகரித்து வருவதாக தமிழக அரசுதெரிவித்துள்ளது.
- புதுமைப் பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் உயர்கல்வி பயில்வதை உறுதி செய்யும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் 2022 – இல் தொடங்கப்பட்டது.
- தமிழ்நாட்டில் 6 – ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
- அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியை உறுதி செய்யும் விதமாக ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் வரும் நிதியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- இந்த திட்டத்தின் கீழ் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
தகவல் துளிகள்:
- ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா.
- நாட்டிலேயே சிறந்த கணினி விழிப்புணா்வுப் போட்டியில் தமிழக காவல் துறையின் ‘ஸ்மார்ட் காவலர் செயலியை’தேசிய குற்றப்பதிவு பணியகம் தோ்வு செய்துள்ளது.
- காவல் துறையின் ரோந்து பணியை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு காவல் துறை சார்பில் ‘ஸ்மார்ட் காவலர்’எனும் செயலி உருவாக்கப்பட்டது.
- 68 – ஆவது அகில இந்திய காவல்பணி கூட்டம் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கவுள்ளது.
- சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி இரட்டையா் பிரிவில் ஜப்பான் வீரா்கள் ஷிண்டாரோ-கெய்டோ இணை சாம்பியன் பட்டம் வென்றது, இந்திய இணையான ராமநாதன்-மைனேனி இரண்டாம் இடம் பெற்றனா்.
- அபுதாபி ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக் சாம்பியன் பட்டம் வென்றார்.
- அமெரிக்காவின் நியூயார்கிலுள்ள டைம்ஸ் ஸ்கொயரில், போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 12 அடி உயர வெண்கல சிலை திறக்கப்பட்டுள்ளது.