8th February Daily Current Affairs – Tamil

ஸ்கில் இந்தியாதிட்டம்:

  • தேசிய திறன் மேம்பாட்டு திட்டமான ‘திறன்மிகு இந்தியா (ஸ்கில் இந்தியா)’ திட்டம் அடுத்த ஆண்டு இறுதிவரை தொடருவதற்காக ரூ 8,800 கோடியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • பிரதமரின் திறன் வளா்ச்சி திட்டம், பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் திட்டம், வாழ்க்கைக் கல்வி நிறுவனம் திட்டம் ஆகிய 3 முக்கியத் திட்டங்கள் திறன்மிகு இந்தியா திட்டத்தின்கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
  • நாடு மக்களின் தொழில் திறன்களை சா்வதேச தரத்துக்கு உயா்த்தும் நோக்கில் கடந்த 2022-ம் ஆண்டுக்குள் சுமார்  40 கோடி பேருக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் இலக்குடன் திறன்மிகு இந்தியா திட்டம் மத்திய அரசால் கடந்த 2015-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • தேசிய தூய்மைப் பணியாளா்கள் ஆணையத்தின் பதவிக் காலத்தை 2028-ஆம் ஆண்டுவரை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த ஆணையம் தலைவா், துணைத் தலைவா், 5 உறுப்பினா்கள், செயலா், இணைச் செயலா் ஆகியோர் அடங்கியது.

சா்வதேச நீதிமன்றம் மீது பொருளாதாரத் தடை:

  • ஐ.நா.வின் நீதிப் பிரிவான சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளார்.
  • சர்வதேச நீதிமன்றம் (ICJ) ஐக்கிய நாடுகள் சபையின் (UN) முதன்மை நீதித்துறை அமைப்பாகும்.
  • இது ஜூன் 1945 – இல் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தால் நிறுவப்பட்டது மற்றும் ஏப்ரல் 1946 – இல் பணியைத் தொடங்கியது.
  • நீதிமன்றத்தின் இருக்கை ஹேக்கில் (நெதர்லாந்து) உள்ள அமைதி அரண்மனையில் உள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு முக்கிய உறுப்புகளில், இது நியூயார்க்கில் (அமெரிக்கா) இல்லாத ஒரே அமைப்பாகும்.
  • சர்வதேச சட்டத்தின்படி, மாநிலங்களால் சமர்ப்பிக்கப்படும் சட்ட மோதல்களைத் தீர்ப்பதும், அங்கீகரிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை அமைப்புகள் மற்றும் சிறப்பு நிறுவனங்களால் குறிப்பிடப்படும் சட்ட கேள்விகள் குறித்து ஆலோசனைக் கருத்துக்களை வழங்குவதும் நீதிமன்றத்தின் பங்கு.
  • இந்த நீதிமன்றம் 15 நீதிபதிகளைக் கொண்டுள்ளது.
  • அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை மற்றும் பாதுகாப்பு கவுன்சிலால் ஒன்பது ஆண்டு பதவிக்காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
  • இது அதன் நிர்வாக அமைப்பான பதிவேட்டின் உதவியுடன் செயல்படுகிறது.
  • இதன் அதிகாரப்பூர்வ மொழிகள் ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு.

பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் திட்டம்:

  • பிரதமரின் தொழில் பழகுநர் திட்டம்  2024-25 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஐந்து ஆண்டுகளில் முதல் 500 நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு தொழில் பழகுநர் வாய்ப்புகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2024-25 நிதியாண்டில் 1.25 லட்சம் தொழில் பழகுநர் வாய்ப்புகள் வழங்குவதை இலக்காகக் கொண்ட இந்த லட்சிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னோடித் திட்டம் 2024, அக்டோபர் 3 அன்று தொடங்கப்பட்டது.

தகவல் துளிகள்:

  • நாசா ஒய்ஆர்4 என்ற விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு 2.3 சதவீதம் உள்ளதாக தெரிவித்துள்ளது.
  • அமெரிக்காவில் இருந்து 104 இந்தியா்கள் கால், கைகள் விலங்கிடப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர், இவா்கள் அனைவரும் பல நாடுகளின் எல்லைகளை, காடு, மலைகளை நடைப்பயணமாக கடந்து செல்லும் அபாயகர பாதைதான் ‘டாங்கி ரூட்’ எனப்படுகிறது.
  • கழுதைபோன்று பல நாள்கள் நடந்து செல்வதால் இதற்கு ‘டாங்கி’பாதை எனப் பெயரிட்டுள்ளனா்.
  • ஆந்திரத்தின் விசாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு தெற்கு கடலோர ரயில்வே எனும் புதிய மண்டலத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • கிழக்கு கடலோர ரயில்வேயின் வால்டேர் கோட்டம் 2 கோட்டங்களாக பிரிக்கப்பட்டு, விசாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு தெற்கு கடலோர ரயில்வே வரம்பிலும், ஒடிஸாவின் ராயகடாவைத் தலைமையிடமாகக் கொண்டு கிழக்கு கடலோர ரயில்வே வரம்பிலும் செயல்பட உள்ளது.
  • தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி பெங்களூரில் உள்ள விஐடியில் நடைபெற்றது.
  • விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, சுடுமண்ணாலான மனித உருவ கால் பகுதி, பளிங்குக் கல், விலங்கின் பல் ஆகியவை கண்டறியப்பட்டன.
  • தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் டென்னிஸ் பிரிவில் தமிழகத்தின் அபினவ் சஞ்சீவ், மனீஷ் சுரேஷ்குமார், நிக்கி பூனச்சா உள்ளிட்டோர் அடங்கிய அணி தங்கப் பதக்கம் வென்றது.

 

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these