இந்தியாவின் முதல் வெள்ளைப் புலி இனப்பெருக்க மையம்:
- மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தின் கோவிந்த்கர் பகுதியில் இந்தியாவின் முதல் வெள்ளைப் புலி இனப்பெருக்க மையத்தை நிறுவ உள்ளது.
- மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தின் கோவிந்த்கர் பகுதியில் இந்தியாவின் முதல் வெள்ளைப் புலி இனப்பெருக்க மையத்தை நிறுவ மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் (CZA) ஒப்புதல் அளித்துள்ளது.
- வெள்ளைப் புலி இனப்பெருக்க மையம், சத்னாவின் முகுந்த்பூரில் உள்ள மகாராஜா மார்தண்ட் சிங் ஜூடியோ வெள்ளைப் புலி சஃபாரி மற்றும் உயிரியல் பூங்காவின் திருத்தப்பட்ட முதன்மைத் திட்டத்தின் கீழ், இப்பகுதியில் நடந்து வரும் பாதுகாப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக அமையும்.
- நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான புலிகளைக் கொண்ட மாநிலமாக மத்தியப் பிரதேசம் ‘புலி மாநிலம்’ என்ற தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
- குனோ தேசிய பூங்காவிற்கு சிறுத்தைகளை அறிமுகப்படுத்தியதற்காக ‘சிறுத்தை மாநிலம்’ என்றும், அதிக எண்ணிக்கையிலான சிறுத்தைகளைக் கொண்ட மாநிலமாக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
- உலகின் முதல் வெள்ளைப் புலி சஃபாரி 2016 – ஆம் ஆண்டு சத்னா மாவட்டத்தில் உள்ள முகுந்த்பூரில் நிறுவப்பட்டது.
உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து ஆர்ஜென்டீனா விலகல்:
- அமெரிக்காவை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து ஆர்ஜென்டீனாவும் விலகுவதாக அறிவித்துள்ளது.
- “தொற்றுநோய் காலத்தில் சுகாதார மேலாண்மையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- உலக சுகாதார அமைப்புக்கு 8.75 மில்லியன் டாலர் நிதியை ஆர்ஜென்டீனா வழங்கி வந்தது.
- இது உலக சுகாதார நிறுவனத்துக்கு கிடைக்கும் நிதியில் 0.11 சதவிகிதமாகும்.
- ஆர்ஜென்டீனா அதிபர் ஜேவியர் மிலே.
- உலக சுகாதார அமைப்பு (WHO) என்பது, ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சிறப்பு நிறுவனமாகும்.
- உலகளாவிய சுகாதாரத்திற்கான பொறுப்பை இந்த அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.
- உலக சுகாதார அமைப்பின் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ளது.
- உலக சுகாதார அமைப்பு ஏப்ரல் 7, 1948 அன்று இந்த அமைப்பு நிறுவப்பட்டது.
வெளிநாட்டு அரசியல் நன்கொடைகளுக்கு கிரீன்லாந்து தடை:
- கிரீன்லாந்தைச் சோ்ந்த அரசியல் கட்சிகள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற தடை விதித்துள்ளது.
- டென்மார்க்குக்குச் சொந்தமான, தாது வளம் நிறைந்த கிரீன்லாந்துக்கு கடந்த 1979-ஆம் ஆண்டு சுயாட்சி வழங்கப்பட்டது.
- உலகிலேயே மிகப் பெரிய தீவான இதன் 80 சதவீத நிலப்பரப்பு பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது.
- அட்லாண்டிக் மற்றும் ஆா்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அந்தத் தீவு அமைந்துள்ளதால் அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு இந்தத் தீவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது.
- தற்போது சுயாட்சிப் பிரதேசமாக செயல்பட்டுவரும் கிரீன்லாந்து, பொதுவாக்கெடுப்பு மூலம் டென்மார்க்கிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான வாய்ப்பு கடந்த 2009-ஆம் ஆண்டே வழங்கப்பட்டுள்ளது.
- தற்போது கிரீன்லாந்தின் பிரதமர் மியூட் இகடே.
தகவல் துளிகள்:
- செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் (ஏஐ) “சாட்ஜிபிடி’ யை உருவாக்கியது ஓபன்ஏஐ நிறுவனம், இதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன்.
- குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்க இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளதாக “ஓபன்ஏஐ’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
- வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, உருண்டை வடிவிலான மெருகேற்றும் கல் கண்டறியப்பட்டது.
- விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
- ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து விலகிக் கொள்வதற்கான அரசாணையை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
- கிரீன்லாந்தைச் சோ்ந்த அரசியல் கட்சிகள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கு நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது.
- உத்தரகண்டில் நடைபெறும் 38 – ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான 500 மீட்டா் தனிநபா் டைம் டிரையலில் ஸ்ரீமதி வெள்ளிப் பதக்கம் வென்றார்.