ஐ.நா. பொது பட்ஜெட்டுக்கு இந்தியா ரூ.328 கோடி நிதி:
- ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) 2025-ஆம் ஆண்டுக்கான வழக்கமான நிதிநிலை அறிக்கைக்கு இந்தியா தனது பங்காக ரூ. 328 கோடியை (37.64 மில்லியன் டாலர்) செலுத்தியுள்ளது.
- ஐ.நா. சபை வரவு செலவு திட்டத்தின் கீழ் தனது முழு பங்கை உரிய நேரத்தில் செலுத்தியதன் மூலம், 35 நாடுகள் கெளரவ பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
- ஐ.நா. சபையில் உறுப்பினராக இருக்கும் நாடுகள், அதன் பட்ஜெட்டுக்கு ஒவ்வொரு மூன்றாம் ஆண்டின் நிதியாண்டு கால தொடக்கத்தில் பங்களிப்பு நிதியை செலுத்துவது கட்டாயம்.
- அந்த வகையில், அதன் பட்ஜெட்டுக்கு இந்திய உள்ளிட்ட 35 உறுப்பு நாடுகள் மட்டும் முழு பங்களிப்பை உரிய நேரத்தில் செலுத்தியுள்ளன.
- ஐ.நா பொதுச் சபை தலைவா் ஃபிளெமன் யாங்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம்:
- ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்பது நலிவடைந்த பிரிவினருக்கு மருத்துவ உதவிகள் மற்றும் வசதிகளுடன் உதவுவதற்காக மத்திய அரசின் முன்முயற்சியாகும். காகிதமில்லா திட்டம் அதிகபட்சம் 5 லட்சம் வரை பணமில்லா மருத்துவ காப்பீட்டை வழங்குகிறது.
- ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 30 ஆம் தேதி ஆயுஷ்மான் பாரத் திவாஸ் ஆக அனுசரிக்கப்படுகிறது.
- ஆயுஷ்மான் பாரத் அல்லது பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா என்பது விளிம்புநிலைப் பிரிவினருக்கு மருத்துவ உதவி வழங்குவதற்கான ஒரு அரசாங்க முயற்சியாகும்.
- 2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட இந்த முதன்மையான தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் இந்திய அரசாங்கத்தால் நிதியளிக்கப்படுகிறது.
- மூத்த குடிமக்கள் சுகாதார காப்பீட்டுத் திட்டம் (SCHIS) மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா (RSBY) ஆகியவை ஏழை மற்றும் கிராமப்புற ஆதரவற்ற குடும்பங்களுக்கு சேவை செய்கின்றன.
- கிட்டத்தட்ட 50 கோடி இந்தியர்களுக்கு காப்பீடு வழங்கும் இந்தத் திட்டம், பின்தங்கிய பிரிவினருக்கு இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதாரப் பாதுகாப்பை முற்றிலும் பணமில்லா சேவையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- PMJAY மின் அட்டை வைத்திருப்பவர்கள் எல்லைக்குள் எங்கும் பட்டியலிடப்பட்ட பொது அல்லது தனியார் சுகாதார மையத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகையைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்:
- 2022 முதல் 2024 வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றிய 1.55 கோடி தொழிலாளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.
- தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என்பது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (MGNREGA) என்று அழைக்கப்படுகிறது.
- இது, கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் திட்டமாகும்.
- கிராமப்புறங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, திறன்சாரா தொழிலாளர்களுக்கு சட்டபூர்வ உரிமைகளை வழங்குவது, பொது சொத்துக்களை உருவாக்குவது.
- இந்தத் திட்டம் 2005 மே 25-ம் தேதி முதல் அமலாக்கப்பட்டது.
தூய்மை இந்தியா திட்டம்:
- தூய்மை இந்தியா இயக்கம் அலுவல் முறையாக சுவச் பாரத் அபியான், Swachh Bharat அல்லது Swachh Bharat Abhiyan என்பது 2014 ஆம் ஆண்டு இந்திய அரசால் திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழிக்கவும் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தவும் நாடு தழுவிய பிரச்சாரமாகும்.
- இது 2009 இல் தொடங்கப்பட்ட நிர்மல் பாரத் அபியானின் மறுகட்டமைக்கப்பட்ட பதிப்பாகும்.
- இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இந்த பணியானது, கழிப்பறைகள் கட்டுவதன் மூலம் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளான 2019 அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் ” திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத ” (ODF) இந்தியாவை அடைவதை நோக்கமாகக் கொண்டது.
தகவல் துளிகள்:
- விருதுகள் திருப்பி அளிக்கப்படுவதை தவிா்க்க விருதாளா்களிடம் ஒப்புதலை பெற்ற பிறகே விருதுகளை வழங்க வேண்டும் என தேசிய அகாதெமிக்கு நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.
- எதிரி நாட்டு போா்க் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை கொள்முதல் செய்ய ரஷியாவுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.
- தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தெலங்கானா தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
- உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
- இதில் பாட்மின்டனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரா் சதீஷ் கருணாகரன் தங்கம் வென்றார்.
- கலப்பு இரட்டையர் பிரிவிலும் சதீஷ் கருணாகரன்-ஆத்யா வரியத் இணை தங்கம் வென்றது.
- மகளிர் இரட்டையா் பிரிவில் தமிழகத்தின் வர்ஷினி-அருள் பாலா இணை வெண்கலம் வென்றது.