சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு:
- இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 18 சதுப்பு நிலங்கள் ராம்சார் தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
- உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்புநிலங்களைக் காப்பதற்கான உடன்படிக்கை ஈரான் நாட்டின் ராம்சார் நகரில் 1971, பிப்ரவரி 2 -ஆம் நாள் போடப்பட்டது.
- அதுவே உலக சதுப்புநில நாளாக ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதன்படி ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 2 உலக சதுப்பு நில நாள் கொண்டாடப்படுகிறது.
- “நமது பொதுவான எதிர்காலத்திற்காக சதுப்புநிலங்களை காப்போம்’என்பது தான் இந்த ஆண்டுக்கான உலக சதுப்புநில நாள் முழக்கமாகும்.
- உலகின் மொத்த நீா்வளத்தில் 97.5 % கடலில் உப்புநீராக உள்ளது.
- மீதமுள்ள 2.5 % மட்டுமே நன்னீராகும், அதிலும் 0.79 % நிலத்தடி நீராக உள்ளது.
- ஆறுகள், ஏரிகள், குளங்கள் என மேற்பரப்பில் உள்ள ஒட்டுமொத்த நீா்வளத்தின் பங்கு 0.01% மட்டுமே உள்ளது.
- தமிழ்நாட்டில் தனிநபருக்குக் கிடைக்கும் நீரின் அளவு, வெறும் 590 கன மீட்டா் மட்டுமே.
- நீா் தேங்கும் நிலப்பகுதிகள் சதுப்புநிலங்கள் எனப்படுகின்றன.
- நீா் வளத்தையும் நிலவளத்தையும் மேம்படுத்துதல், மாசுபாட்டை குறைத்தல், உயிரி பன்மமய வளத்தைக் காத்தல், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல், பொருளாதாரத்தை மேம்படுத்துதல் என எண்ணற்ற பலன்களை சதுப்புநிலங்கள் அளிக்கின்றன.
- உலகில் குறைந்தது 150 கோடி ஹெக்டோ் பரப்பளவு சதுப்புநிலங்கள் இருக்கலாம் என ராம்சார் அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
- இஸ்ரோ சதுப்பு நில வரைபடத்தின்படி இந்தியாவில் உள்ள 2.25 ஹெக்டேருக்கு கூடுதலான பரப்பளவு கொண்ட சதுப்புநிலங்களின் எண்ணிக்கை 2,31,195 ஆகும்.
- உலகில் குறைந்தது 150 கோடி ஹெக்டோ் பரப்பளவு சதுப்புநிலங்கள் இருக்கலாம் என ராம்சார் அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
- இஸ்ரோ சதுப்பு நில வரைபடத்தின்படி இந்தியாவில் உள்ள 2.25 ஹெக்டேருக்கு கூடுதலான பரப்பளவு கொண்ட சதுப்புநிலங்களின் எண்ணிக்கை 2,31,195 ஆகும்.
- சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பது மத்திய அரசின் நோக்கமாக இருந்ததால், 2017-ஆம் ஆண்டில் சதுப்பு நிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் வெளியிடப்பட்டன.
- இந்த விதிகளை தமிழ்நாட்டில் செயலாக்க வேண்டும் என பசுமைத் தாயகம் உள்ளிட்ட அமைப்புகள் கொடுத்த அழுத்தத்தைத் தொடா்ந்து, 2018-ஆம் ஆண்டில் தமிழ்நாடு சதுப்பு நிலங்கள் ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்தது.
- இந்திய அரசின் சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் 2017 பிரிவு 4-இன் கீழ் நீா் நிலைகளை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது.
- நீா் நிலைகளில் தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சாலை விரிவாக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.
- அனைத்து விதமான கழிவு மேலாண்மை விதிகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. திடக்கழிவுகளை கொட்டுவது, கழிவு நீரைக் கலப்பது, கட்டுமானங்களை மேற்கொள்வது என அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.
காசி தமிழ்ச் சங்கமம்:
- காசி தமிழ் சங்கமம் (Kashi Tamil Sangamam) என்பது 2022 ஆம் ஆண்டு நடந்த ஒரு மாதகால நிகழ்வு ஆகும்.
- தமிழகத்திற்கும் வாரணாசி இடையிலான பழமையான தொடர்புகளைக் கொண்டாடுவதற்கும், அதை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கும் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வருடாந்திர மாத கால நிகழ்ச்சியாகும்.
- இது 19 நவம்பர் 2022 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.
- “ஏக பாரதம் ஸ்ரேஷ்ட பாரதம்” என்ற உணர்வை நிலைநிறுத்துவதற்கும், தேசிய கல்விக் கொள்கை 2020 இன் பொருத்தத்தை விரிவுபடுத்துவதற்கும் “விடுதலையின் அமிர்த மகோத்சவத்தின்” ஒரு பகுதியாக, தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டிற்கும் புனித நகரமான வாரணாசிக்கும் (காசி என்றும் அழைக்கப்படுகிறது) இடையிலான அறிவு மற்றும் நாகரிகத்தின் பழமையான தொடர்புகளை மீண்டும் கண்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் முன் ஒரு முன்மொழிவு பரிந்துரைக்கப்பட்டது.
- இந்தத் திட்டத்திற்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து சென்னை ஐஐடி நிதியுதவி அளித்தது.
குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் தொடர் தொடங்கியது:
- மத்திய பட்ஜெட்டை அமைச்சா் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார், இது அவா் தொடா்ந்து 8 – ஆவது முறையாக தாக்கல் செய்யும் பட்ஜெட் ஆகும்.
- பின்னா் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும்.
- பழங்குடியின சமூகத்தின் 5 கோடி மக்களுக்காக பழங்குடியினர் கிராம மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- பிரதான் மந்திரி அவாஸ் திட்டத்தின் கீழ் மேலும் 3 கோடி வீடுகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
- ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 அல்லது அதற்கு மேற்பட்டவயதுடைய 6 கோடி மூத்த குடிமக்களுக்கு சுகாதார காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் சுகாதார காப்பீடு வழங்கப்பட உள்ளது.
- இந்தியாவின் மெட்ரோ ரயில் இணைப்பு இப்போது 1,000 கிலோமீட்டர் மைல் கல்லை கடந்துவிட்டது,
- உலகின் மூன்றாவது பெரிய மெட்ரோ இணைப்பைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
- அனைத்து மக்களுக்கும் சுகாதார சேவைகளை உறுதி செய்வதற்காக, நாட்டில் 1.75 லட்சம் சுகாதார மையங்கள் (ஆரோக்கிய மந்திர்) நிறுவப்பட்டுள்ளன.
- பழங்குடியினர் வாழும் பகுதிகளில் 30 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பிப்ரவரி 1: இந்திய கடலோர காவல்படை தினம்.
- பிப்ரவரி 1 – ஆம் தேதி இந்திய கடலோர காவல்படை அதன் நிறுவன தினத்தை கொண்டாடுகிறது.
- இந்த ஆண்டு, இந்திய கடலோர காவல்படை தனது 47 – வது எழுச்சி தினத்தை கொண்டாடுகிறது.
தகவல் துளிகள்:
- இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், விண்வெளில் அதிக நேரம் நடந்த பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
- அமெரிக்காவின் போயிங் உருவாக்கியுள்ள ஸ்டார்லைனா் விண்கலம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோருடன் சா்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி அடைந்தது.
- 2025-26-ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.3 முதல் 6.8 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.
- 38 – ஆவது இந்திய சா்வதேச தோல் பொருள்கள் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது.
- சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவுச் செயலியான ‘டீப்சீக்’கை தங்களின் அறிதிறன் பேசிகளில் பயன்படுத்த அமெரிக்க நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது.
- தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான பளுதூக்குதலில் 73 கிலோ பிரிவில் தமிழக வீரா் நாராயண அஜித் 311 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார்.
- தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு அணி மொத்தமாக 4 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என 14 பதக்கங்களுடன் 6-ஆவது இடத்தில் உள்ளது.