31st January Daily Current Affairs – Tamil

ஜிபிஎஸ் நோய்:

  • மகாராஷ்டிர மாநிலம், புணேவில் சமீபத்தில் ஜிபிஎஸ் என அழைக்கப்படும் கிலான் பாரே சிண்ட்ரோம் நோய்த் தொற்று பரவி வருகின்றது.
  • மனித உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் தவறுதலாக உடலின் ஆராக்கியமான செல்களை தாக்குவதால் இந்த நோய் ஆட்டோ இம்யூன் என அழைக்கப்படுகிறது.
  • இந்த நோயின் ஒருவகை தான் ஜிபிஎஸ் ஆகும்.
  • இந்த நோயானது தசைகளை இயக்கும் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
  • Guillain-Barré syndrome (GBS) என்பது உங்கள் உடலின் பெரும்பகுதியை பாதிக்கக்கூடிய திடீர் உணர்வின்மை மற்றும் தசை பலவீனத்தை ஏற்படுத்தும் ஒரு அரிய நிலை.

‘ஆக்ஸியம் திட்டம் 4’:

  • அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி மையம் செல்வதற்காக இஸ்ரோவால் தேர்ந்தெடுக்கப்பட்ட குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவை அந்த திட்டத்தின் விமானியாக நாசா அறிவித்துள்ளது.
  • ‘ஆக்ஸியம் திட்டம் 4’ க்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 4 வீரர்களும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ககன்யான் திட்டத்தின் கீழ் இந்தாண்டு மனிதா்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
  • இந்த திட்டத்துக்காக 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு முன்னொட்டமாக, ககன்யான் திட்டத்தில் உள்ள ஒரு இந்திய விண்வெளி வீரரை சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்புவதற்காக நாசாவுடன் இஸ்ரோ ஒப்பந்தம் செய்திருந்தது.
  • வருகின்ற ஜூன் மாதத்துக்குள் முன்னாள் நாசா விண்வெளி வீரர் பெக்கி விட்சன் தலைமையில் நான்கு வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
  • இதன்மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வகத்தைப் பார்வையிட்ட முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற வரலாற்றை சுக்லா படைக்கவுள்ளார்.

பட்ஜெட் கூட்டத் தொடர்:

  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 – ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 4 – ம் தேதி முடிவடையும்.
  • மத்திய பட்ஜெட்டை எட்டாவது முறையாக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
  • நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், மக்களவையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார்.
  • பாராளுமன்றம் ஒரு வருடத்தில் மூன்று அமர்வுகளுக்கு கூடுகிறது. குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையையும் அவ்வப்போது கூட்டுகிறார்.
  • பாராளுமன்றத்தின் இரண்டு அமர்வுகளுக்கு இடையிலான இடைவெளி 6 மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும், அதாவது ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறை பாராளுமன்றம் கூடுகிறது.
  • வழக்கமாக பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
  • நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு, பட்ஜெட்டில் உள்ள பல்வேறு விதிகள் மற்றும் வரிவிதிப்பு தொடர்பான விஷயங்களை உறுப்பினர்கள் இங்கு விவாதிக்கின்றனர்.
  • பட்ஜெட் கூட்டத்தொடர் பொதுவாக இரண்டு காலகட்டங்களாக பிரிக்கப்பட்டு அவற்றுக்கிடையே ஒரு மாத இடைவெளி இருக்கும்.
  • இந்த அமர்வு ஒவ்வொரு ஆண்டும் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது.

ஜனவரி 31: சர்வதேச வரிக்குதிரை தினம்.

  • ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31 ஆம் தேதி, உலகம் முழுவதும் சர்வதேச வரிக்குதிரை தினம் கொண்டாடப்படுகிறது.

தகவல் துளிகள்:

  • தெற்கு ரயில்வேயின் சிறந்த ரயில்வே கோட்டமாக திருச்சி ரயில்வே கோட்டம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • ரயில்வே துறையில் சிறப்பாகப் பணிபுரிந்த நெல்லை ரயில் நிலைய முதுநிலை பொறியாளா் மந்திரமூா்த்திக்கு ‘விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கா்’எனும் தனிநபா் விருதும் வழங்கப்பட்டன.
  • ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில், சிறப்பு அஞ்சல் உறையை தமிழக தபால் துறை வெளியிட்டுள்ளது.
  • சிரியாவில் அகமது அல்-ஷரா நாட்டின் இடைக்கால அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • விழுப்புரத்தில் சமூக நீதி போராளிகள் மணிமண்டபத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  • இந்திரம்மா வீட்டுத் திட்டம் என்பது தெலுங்கானா மாநில அரசால் கூரை இல்லாத அனைத்து மாநில குடியிருப்பாளர்களுக்கும் மலிவு விலையில் வீடுகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது.
  • உத்தரகாண்ட் மாநிலத்தில் 38 – ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 28 – ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
  • தேசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 10 மீ ஏா் ரைஃபிள் பிரிவில் தமிழகத்தின் நா்மதா நிதின்குமார் 254.4 புள்ளிகளுடன் தங்கம் வென்றார்.
  • ஆடவா் நீச்சல் 200 மீ பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் தமிழக வீரா் எஸ். தனுஷ் தங்கம் வென்றார்.

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these