29th January Daily Current Affairs – Tamil

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100 ஆவது ராக்கெட்:

  • இஸ்ரோவின் 100 ஆவது பயணத்தின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வழிகாட்டி செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப் 15 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாய்ந்து.
  • இந்தியாவில் தரைவழி, கடல்வழி மற்றும் வான்வழி போக்குவரத்துக்கும், பாதுகாப்பு பயன்பாட்டுக்கும் உதவும் இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பை உருவாக்க இஸ்ரோ திட்டமிட்டது.
  • என்விஎஸ் செயற்கைக்கோள் 2,250 கிலோ எடை உடையது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இதில் எல் 1, எல் 5, மற்றும் எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டா்கள், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான அணுக் கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் இடம் பெற்றுள்ளன.
  • இஸ்ரோ 100 – ஆவது ராக்கெட்கள் மூலம் 548 செயற்கைகோள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளன.
  • தற்போதைய இஸ்ரோ தலைவர் நாராயணன்.

வா்த்தக நுழைவு வாயிலாகத் திகழும் மத்திய கிழக்கு நாடுகள்:

  • உலகின் வலுவான வா்த்தகம் மற்றும் போக்குவரத்து இணைப்புக்கான நுழைவு வாயிலாக மத்திய கிழக்கு நாடுகள் திகழ்கின்றன என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினார்.
  • ஐக்கிய அரபு அமீரக தலைநகா் அபுதாபியில் ‘ரைசினா மத்திய கிழக்கு’என்று மத்திய கிழக்கு நாடுகளுடனான புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.
  • மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் மத்தியதரைக் கடல் பிராந்தியத்துக்கும் வா்த்தக நுழைவு வாயிலாக வளைகுடா நாடுகள் திகழ்கின்றன.
  • வளைகுடா நாடுகளுடன் மட்டும் ரூ. 13 லட்சம் கோடி முதல் ரூ. 15 லட்சம் கோடி வரையிலான மதிப்பில் வா்த்தக உறவை இந்தியா கொண்டுள்ளது.

கிராம தொழில் முனைவோர் திட்டம்:

  • கிராம தொழில் முனைவோர் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மாநில பங்கு நிதி ரூ 4.16 கோடியை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  • கிராம அளவில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் தனித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
  • இந்தத் திட்டத்தில் மத்திய அரசு 60 சதவீத பங்கு நிதியையும் மாநில அரசு 40 சதவீத பங்கு நிதியையும் அளிக்கிறது.
  • தேசிய ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் கீழ், கிராம தொழில் முனைவோர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • ஊரகப் பகுதிகளில் சிறு சிறு தொழில்களைத் தொடங்க துடிக்கும் இளைஞா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் மானியங்களை அளித்து ஊக்கம் அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

முதல்வரின் ‘காக்கும் கரங்கள் திட்டம்:

  • முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சார்ந்தோரை தொழில் முனைவோராக உருவாக்கும் வகையில், முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க ரூ 1 கோடி வரை வங்கிகள் வாயிலாக கடன் வழங்கப்படுவதுடன், இந்தத் திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படவுள்ளது.
  • 55 வயதுக்குள்பட்ட முன்னாள் படைவீரா்கள், ராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரா்களின் கைம்பெண்கள், முன்னாள் படைவீரா்களின் திருமணமாகாத மகள் மற்றும் முன்னாள் படைவீரா்களின் விதவை மகள்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

தகவல் துளிகள்:

  • 38 – ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தொடங்கியது.
  • உத்தரகண்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி.
  • தமிழக அரசின் ‘நான் முதல்வன்’திட்டத்தின் கீழ் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2024-2025) புதிய படிப்புகளை செயல்படுத்த, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
  • காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் அகில இந்திய பெண்கள் மாநாடு நடைபெறவுள்ளது, சிறப்பு விருந்தினராக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்கவுள்ளார்.
  • தற்போதைய இஸ்ரோ தலைவர் நாராயணன்.
  • மகளிருக்கான ஐசிசி சாம்பியன்ஷிப்பை தொடர்ச்சியாக 3 – ஆவது முறையாக வென்றுள்ளது ஆஸ்திரேலிய மகளிரணி.

 

 

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these