தினசரி நடப்பு நிகழ்வுகள் JANUARY 18
‘ஸ்வமித்வ’ திட்டத்தின்கீழ் 65 லட்சம் சொத்து அட்டைகள்:
- கிராமிய கணக்கெடுப்பு மற்றும் கிராமப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மூலம் வரைபடங்கள் தயாரித்தல் (ஸ்வமித்வ) திட்டத்தின்கீழ் 65 லட்சம் சொத்து அட்டைகளை பிரதமா் மோடி வழங்குகிறார்.
- மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் ஸ்வமித்வா திட்டத்தின்கீழ் கிராமியப் பகுதிகளில் உள்ள நிலங்கள் ஆளில்லா விமானங்கள் மூலம் கணக்கீடு செய்யப்பட்டு, அதன் உரிமையாளா்களுக்கு சட்டபூா்வமாக சொத்து அட்டைகள் வழங்கப்படுகின்றன.
- இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் உள்ள 3.44 லட்சம் கிராமங்களில் ஆளில்லா விமானம் மூலம் நிலங்களை கணக்கீடு செய்து வரைபடம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
- தற்போதுவரை 3.17 லட்சம் கிராமங்களில் இந்த கணக்கீடு நிறைவு செய்யப்பட்டு 90 சதவீத இலக்கு எட்டப்பட்டது.
- 2026 – இல் இந்த இலக்கு முழுமையாக எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தில் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளன. சிக்கிம், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் திட்டத்தின் சோதனை கட்டத்தில் மட்டும் பங்கேற்றன.
- மேற்கு வங்கம், பிகார், நாகாலாந்து மற்றும் மேகாலயம் ஆகிய மாநிலங்கள் இணையவில்லை.
‘ஆயுஷ்மான பாரத்’:
- ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்பது நலிவடைந்த பிரிவினருக்கு மருத்துவ உதவிகள் மற்றும் வசதிகளுடன் உதவுவதற்காக மத்திய அரசின் முன்முயற்சியாகும்.
- காகிதமில்லா திட்டம் அதிகபட்சம் 5 லட்சம் வரை பணமில்லா மருத்துவ காப்பீட்டை வழங்குகிறது.
- ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 30 ஆம் தேதி ஆயுஷ்மான் பாரத் திவாஸாக அனுசரிக்கப்படுகிறது.
- ஆயுஷ்மான் பாரத், அல்லது பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்பது ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்கான ஒரு அரசாங்க முயற்சியாகும்.
- 2018 – இல் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இந்த முதன்மையான தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் GOI ஆல் நிதியளிக்கப்படுகிறது.
- மூத்த குடிமக்கள் உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் (SCHIS) மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வஸ்திய பீமா யோஜனா (RSBY) ஆகியவை ஏழை மற்றும் கிராமப்புற ஆதரவற்ற குடும்பங்களுக்கு சேவை செய்கின்றன.
- ஏறக்குறைய 50 கோடி இந்தியர்களுக்கு கவரேஜ் வழங்கும் திட்டம், பின்தங்கிய பிரிவினருக்கு இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதாரத்தை முற்றிலும் பணமில்லாமல் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- PMJAY, ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
- இது பணமில்லா மருத்துவ கவரேஜை வழங்கும் மிகப்பெரிய சுகாதார காகிதமற்ற திட்டங்களில் ஒன்றாகும்.
- இந்திய அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சியானது, பொது மருத்துவமனைகள் மற்றும் நெட்வொர்க் தனியார் மருத்துவமனைகளில் குடும்ப அளவு, பாலினம் அல்லது வயது தொடர்பான வரம்புகள் ஏதுமின்றி பின்தங்கிய குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குகிறது.
செஸ் வீரர் குகேஷுக்கு கேல் ரத்னா விருது:
- குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த டி.குகேஷுக்கு, இந்திய விளையாட்டுத் துறையில் உயரியதாக இருக்கும் ‘தியான்சந்த் கேல் ரத்னா விருதினை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
- தமிழக வீரர் குகேஷுடன், தமிழக பாரா பாட்மின்டன் வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீ சுமதி சிவன், மனிஷா ராமதாஸ் ஆகியோரும் அா்ஜுனா விருது பெற்றுள்ளனர்.
- மேலும், ஹாக்கி ஆண்கள் அணி தலைவர் ஹர்மன்ப்ரீத் கௌர், பாரா தடகள வீரர் பிரவீன் குமார், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் ஆகியோரும் கேல் ரத்னா விருதினை குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
- விளையாட்டுத் துறையில் இந்தியாவை உலக அளவில் பெருமைப்படுத்தியவா்கள், துறை சார்ந்து சிறப்பாகச் செயல்படுபவா்களுக்கு ஆண்டுதோறும் மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
தகவல் துளிகள்:
- நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 5.4 சதவீதமாக குறைந்தது, இது முந்தைய ஏழு காலாண்டுகளில் இல்லாத குறைவாகும்.
- நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாகவே இருக்கும் என்று மத்திய அரசு வெளியிட்டது.
- அனைத்து டெபாசிட் கணக்குகளிலும் ‘நாமினி’ பெயரை உறுதி செய்ய வேண்டும் என ஆா்பிஐ அறிவுறுத்தியுள்ளது.
- பாரத போக்குவரத்துக் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
- நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் இணையப் பயன்பாடு விகிதம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
- தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிறந்த மருத்துவமனைக்கான விருது வழங்கப்பட்டது.
- அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்திய பொருளாதாரம் 6.7 சதவீத வளா்ச்சியில் தொடரும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
- சீனாவின் மக்கள்தொகை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சரிவைக் கண்டுள்ளது.
- சீனாவில் தம்பதியா் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு கடந்த 1980-களில் தடை விதிக்கப்பட்டது.
- உலகின் மிகப் பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நாடாக சீனா இருந்து வந்தது, ஆனால், கடந்த 2023-இல் அந்த நாட்டின் மக்கள்தொகையான 142.57 கோடியை விஞ்சி இந்திய மக்கள்தொகை 142.86 கோடியாக அதிகரித்தைத் தொடா்ந்து, மக்கள்தொகையில் இந்தியா முதலிடத்தைப் பிடித்ததாக ஐ.நா. அறிவித்தது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் வெற்றி பெற்றனா்.