பணமோசடி வழக்கில் சீன நிறுவனங்களின் சொத்துகள் முடக்கம்:
- ஏராளமான முதலீட்டாளா்களை மோசடி செய்ததாக கூறப்படும் ‘ஹெச்பிஇசட் டோக்கன்’ செயலி தொடா்புடைய பணமோசடி வழக்கில், இந்தியா மற்றும் துபையில் உள்ள சில சீன-தொடா்புடைய போலி நிறுவனங்களின் புதிய சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை.
- அமலாக்க இயக்குநரகம்: (Directorate General of Economic Enforcement or Enforcement Directorate) என்பது இந்தியாவில் பணமோசடி தடுப்பு சட்டம், 2002 மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999 போன்ற பொருளாதாரச் சட்டங்களை கண்காணிக்கவும், நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இதன் பணியாகும்.
- அமலாக்கப் பிரிவு, இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் வருவாய்த் துறையின் கீழ் இயங்கும் புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அமைப்பு ஆகும்.
- அமலாக்க இயக்குனரகத்தில் இந்திய ரிசர்வ் வங்கி, செபி, வருமானவரி, சுங்கம் மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் ஆகியோர்களைக் கொண்டு இயங்குகிறது.
- இது இந்திய அரசால் 11 மே 1956 அன்று நிறுவப்பட்டது.
- வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் பொருட்டு இயற்றப்பட்ட அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999, பணமோசடி தடுப்பு சட்டம், 2002 மற்றும் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் ஆகியவைகளை நடைமுறைப்படுத்த அமலாக்க இயக்குநரகம் செயல்படுகிறது.
- அமலாக்கப் பிரிவு இயக்குநரகத்தின் முதன்மையான மூன்று பணிகள், வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை மேலாண்மைச் சட்டம் (FEMA), மற்றும் கணக்கில் வராத பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதை தடுக்கும் சட்டம், 2002 (PMLA) மற்றும் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை அமல்படுத்துவதும், நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிப்பதேயாகும்.
- தலைமை இயக்குநர் ஒருவர் தலைமையில், அமலாக்கப்பிரிவின் தலைமையிடம் புதுதில்லியிலும், இதன் பத்து மண்டல அலுவலகங்கள், மண்டல இயக்குநர்களின் தலைமையில் மும்பை, கொல்கத்தா, சண்டிகர், சென்னை, அகமதாபாத், பெங்களூரு, கொச்சி மற்றும் ஹைதராபாத் நகரங்களில் செயல்படுகிறது.
136 வந்தே பாரத் ரயில்கள் இயக்கம்:
- நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் 136 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
- வந்தே பாரத் ரயில்களில் பாதுகாப்பு அமைப்பான ‘கவச்’, ரயிலின் கதவுகள் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
- வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பது இந்திய இரயில்வேயால் இயக்கப்படும் ஒரு நடுத்தர தூர அதிவிரைவு விரைவு சேவையாகும்.
- 15 பிப்ரவரி 2019 அன்று, புது தில்லி மற்றும் வாரணாசி இடையேயான முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் புது தில்லி ரயில் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.
விண்வெளியில் விரைவில் இந்திய ஏஐ ஆய்வகம் தொடக்கம்:
- விண்வெளியில் ஹைதராபாத்தைச் சோ்ந்த ‘டேக் மீ 2 ஸ்பேஸ்’ என்ற புத்தாக்க நிறுவனம் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தை நிறுவவுள்ளது.
- இதற்காக அடுத்த மாதம் விண்வெளிக்கு இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட் அனுப்பப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.
- விண்வெளி ஆராய்ச்சியை எளிதாக அணுகவும் குறைந்த விலையில் மேற்கொள்ளும் விதமாகவும் சுற்றுப்பாதை உள்கட்டமைப்பு- தொழில்நுட்ப விளக்கமாதிரி என்ற ஏஐ ஆய்வகம் அமைக்கப்படவுள்ளது.
- இதுவே விண்வெளியில் இந்தியா அமைக்கும் முதல் ஏஐ ஆய்வகமாகும்.
- எம்ஓஐ-டிடி, இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-60 ராக்கெட் மூலம் டிசம்பா் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளது.
- மேக மூட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் செயற்கைக்கோள்கள் அனுப்பும் 40 சதவீத தரவுகளை அணுக முடியவில்லை.
- அதேசமயத்தில் பூமியில் உள்ள மையங்களுக்கு அனுப்பப்பட்டு அதன்பிறகே அந்த தரவுகளை பெறும் சூழல் உள்ளது.
- விண்வெளியில் நேரடியாகவே இந்த தரவுகளை அணுகி பயனாளா்களுக்கு சரியான தகவல்களை வழங்கவும் தரவுகள் பரிமாற்ற செலவு மற்றும் தாமதத்தை குறைக்கவும் இந்த ஆய்வகம் நிறுவப்படவுள்ளது.
‘ஆா்பிட்லேப்’:
- சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு மற்றும் காடுகள்அழித்தல் கண்காணிப்பு, கடல்சாா் பணிகள் மேற்பாா்வை, கரியமிலவாயு உமிழ்வு கண்டறிதல் உள்ளிட்ட புவி கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடா்பாக எம்ஓஐ-டிடி வெளியிடும் ஏஐ தகவல்களை ‘ஆா்பிட்லேப்’ என்ற வலைதளத்தில் பயனாளா்கள் பெறலாம்.
- இந்த ஆய்வகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் பணியில் முதல்கட்டமாக மலேசியாவில் உள்ள ஒரு முக்கிய பல்கலைக்கழகமும், இந்தியாவிலிருந்து 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா் குழுவினரும் இணைந்துள்ளன. வருங்காலத்தில் விண்வெளியில் தரவுகள் மையம் அமைப்பதற்கான முன்னோடியாக இந்த ஆய்வகம் திகழவுள்ளது.
- தற்போது புவி கண்காணிப்பு சாா்ந்த ஆய்வுகளே செய்யப்படவுள்ள நிலையில் வருங்காலத்தில் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு துறைகளுக்கு பலனளிக்கும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது.
- இந்த ஆய்வகத்தின் பரிசோதனைகள் மற்றும் மதிப்பீடுகளை விண்வெளியில் தனியாா் துறை பங்களிப்பை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இஸ்ரோவின் கிளை பிரிவான ‘இன்-ஸ்பேஸ்’ அமைப்பே மேற்கொண்டது.
நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து 3,500 கி.மீ. பாயும் ஏவுகணை சோதனை:
- நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து 3,500 கி.மீ. தொலைவு வரை பாய்ந்து இலக்கைத் தாக்கும் பலிஸ்டிக் ரக ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது.
- கே4 பிரிவைச் சோ்ந்த இந்த ஏவுகணையில் அணு ஆயுதங்களை செலுத்த முடியும்.
- இதன்மூலம் அணு ஆயுத ஏவுகணையில் நிலம், ஆகாயம், ஆழ்கடல் என மூன்று இடங்களில் இருந்து தாக்குதல் நடத்தும் திறனுள்ள சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.
- நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதில் இந்தியா முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
- விசாகப்பட்டினம் கடற்கரையில் ஐஎன்எஸ் அரிஹந்த் நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து இந்த ஏவுகணை சோதனை புதன்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
- நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து பலிஸ்டிக் ரக ஏவுகணையை இந்தியா பரிசோதிப்பது இதுவே முதல்முறையாகும். கடந்த சில ஆண்டுகளில் நீருக்கு அடியில் உள்ள தளங்களில் இருந்து இந்த வகை ஏவுகணைகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பிய செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-59:
- சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஐரோப்பிய விண்வெளி மையத்தின் ‘ப்ரோபா 3’ செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
- இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் கீழ் செயல்படும் ‘நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்’ நிறுவனம் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் வா்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- இதுவரை 430-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களை நியூ ஸ்பேஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
- பெரும்பாலான உலக நாடுகளின் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளுக்கு இஸ்ரோ பங்களித்து வரும் நிலையில், அண்மையில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.
- ‘ப்ரோபா-3’ எனப்படும் இஎஸ்ஏ நிறுவனத்தின் இரு செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் புவியிலிருந்து 60,500 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தி சூரியனின் புற வெளிக் கதிா்கள் ஆய்வு செய்யப்படவுள்ளன.
- இரு செயற்கைக்கோள்களும் 150 மீட்டா் தொலைவில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளியைச் சுற்றி ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு தரவுகளை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பவுள்ளன.
நவம்பர் 29: பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினம்
- பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 29 அன்று குறிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- ஒடிசாவில் டிஜிபி, ஐஜிபிக்கள் மாநாடு தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.
- உச்சநீதிமன்ற நீதிபதியாக தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகனை நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலிஜீயம் பரிந்துரைத்தது.
- விழிஞ்ஞம் சா்வதேச துறைமுகம் தொடா்பாக மாநில அரசுக்கும் அதானி-விழிஞ்ஞம் துறைமுக நிறுவனத்துக்கும் இடையே புதிய ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.