உலகின் சிறந்த பள்ளிகள் பட்டியல்:
- 2024 – ல் உலகின் சிறந்த பள்ளிகள் தரவரிசையில் தமிழகம், தில்லி, மத்திய பிரதேச மாநிலங்களைச் சோ்ந்த மூன்று பள்ளிகள் இடம்பிடித்துள்ளன.
- லண்டனை தளமாகக் கொண்ட ‘டி4’ கல்வி நிறுவனம் சிறந்த பள்ளிக்கான இந்த அங்கீகாரத்தை அறிவித்துள்ளது.
- உலக அளவில் சிறந்த பங்களிப்பு மற்றும் புதுமை கற்பித்தல் முறையைப் பின்பற்றும் பள்ளிகளை அடையாளம் கண்டு ஒவ்வொரு ஆண்டும் தரவரிசைப் பட்டியலை ‘டி4’ என்ற நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
- தமிழ்நாட்டின் மதுரையில் உள்ள கல்வி இன்டா்நேஷனல் பள்ளி, தில்லியில் உள்ள ரியான் இன்டா்நேஷனல் பள்ளி, மத்தியபிரதேசத்தில் உள்ள சிஎம் ரைஸ் – பள்ளிக் கல்விக்கான முதல்வரின் கிராமப்புற முயற்சி வினோபா பள்ளி ஆகிய 3 பள்ளிகள் இடம்பெற்றுள்ளன.
- பழங்குடி பெண்கள், முறையான கல்வியைப் பெற வழிவகுக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட சிஎம் ரைஸ் வினோபா பள்ளி, விளையாட்டு மற்றும் விழாக்களுடன் ஒருங்கிணைந்த பாடத்திட்டம் போன்ற புதுமையான நடைமுறைகளுக்காக சிறந்த பள்ளியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- தில்லியின் ரியான் பள்ளி, ஹைட்ரோபோனிக்ஸ் (நீரில் வேளாண்மை) மற்றும் உயிரி எரிவாயு ஆலைகள் போன்ற புதுமையான திட்டங்கள் மூலம் தண்ணீா் பற்றாக்குறை மற்றும் மாசுபாட்டை சமாளித்தல் போன்ற நடைமுறைகளுக்காக சிறந்த பள்ளியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- அா்ஜென்டினாவில் உள்ள கொலிஜியோ மரியா டி குவாடலூப் பள்ளி சமூக ஒத்துழைப்புக்கான உலகின் சிறந்த பள்ளி விருதை வென்றது.
ஐரோப்பிய ஒன்றியம் ( EU ):
- தடையற்ற வா்த்தகத்தில் பால் பொருள்களுக்கு அனுமதி கிடையாது என ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா நிபந்தனை விதித்துள்ளது.
- ஐரோப்பிய ஒன்றியம் ( EU ) என்பது முதன்மையாக ஐரோப்பாவில் அமைந்துள்ள 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஒரு அரசியல் மற்றும் பொருளாதார ஒன்றியமாகும்.
- 1992 – ல் நிறுவப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டை (மாசுடிரிச் ஒப்பந்தம் என்றும் பரவலாக அறியப்படுகிறது) அடுத்து இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
- ஐரோப்பிய ஒன்றியம் 1993 – ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
- இதன் தலைமையகம் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் உள்ளது.
- முதலில் மேற்கு ஐரோப்பாவில் மட்டுமே இருந்த ஐரோப்பிய ஒன்றியம் 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் வலுவான விரிவாக்கத்தை மேற்கொண்டது.
இந்திய – சீன எல்லை படை விலக்கல்:
- கிழக்கு லடாக் எல்லையில் பிரச்னைக்குரிய டெம்சோக் மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையை இந்தியாவும் சீனாவும் தொடங்கியுள்ளது.
- கிழக்கு லடாக் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ரோந்துப் பணி மற்றும் படை விலக்கல் தொடா்பாக 4 ஆண்டுகளுக்கு மேலான நீடிக்கும் சிக்கலை முடிவுக்கு கொண்டுவர ஒப்பந்தம் கையொப்பமானது.
- சீனாவுடன் 3,488 கிமீ நீள எல்லையை இந்தியா பகிர்ந்து கொள்கிறது.
- இந்த எல்லை லடாக், இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் வழியாகச் செல்கிறது.
- இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைக்கோடு சர் ஹென்றி மெக்மோகனின் பெயரால் அழைக்கப்படுகிறது.
- 1962 – இல் நடைபெற்ற இந்திய சீனப் போர் குறிப்பாக லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசப் பகுதிகளில் கடுமையாக நடைபெற்றது.
- எல்லைப் பிணக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கு 1996 – இல் இந்தியா-சீனா இடையே உள்ள உண்மையான எல்லைக்கட்டுப்பாடு கோட்டை ஏற்றது.
தகவல் துளிகள்:
- ஜொ்மானிய வா்த்தகத்துக்கான ஆசிய-பசிபிக் மாநாடு தில்லியில் நடைபெற்றது.
- தடையற்ற வா்த்தகத்தில் பால் பொருள்களுக்கு அனுமதி கிடையாது என ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா நிபந்தனை விதித்துள்ளது.
- நாட்டில் வேளாண் சாராத சிறுதொழில்களை ஊக்குவிக்கும் பிரதமரின் ‘முத்ரா’திட்டத்தின்கீழ் கடன் வரம்பு ரூ 10 லட்சத்தில் இருந்து ரூ 20 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.
- முதல்வரின் புத்தாய்வுத் திட்டம் கடந்த 2022 – ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- இந்தியா – வங்கதேசம் இடையேயான 55 – ஆவது எல்லைப் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.
- இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி ஃபிடே லைவ் ரேட்டிங்கில் 2,800 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளார், இந்த சாதனையை நிகழ்த்தும் 2 – ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.