14th October Daily Current Affairs – Tamil

தகவல் அறியும் உரிமைச் சட்டம்: ஆா்டிஐ

  • தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் கடந்த 2020 – ஆம் ஆண்டுமுதல் 47,000 புகார்கள் பதிவாகியுள்ளதாக தகவல் அறியும் சட்டம் ஆா்டிஐ தெரிவித்துள்ளது.
  • அதிக புகார்கள் பெறப்பட்டுள்ள மாநிலத்தில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
  • இந்தச் சட்டம் 12 மே 2005 அன்று இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
  • தகவல் அறியும் உரிமைச் சட்டம் 15 ஜூன் 2005 அன்று ஜனாதிபதி ஒப்புதலைப் பெற்றது.
  • தகவல் அறியும் உரிமைச் சட்டம் 12 அக்டோபர் 2005 இல் நடைமுறைக்கு வந்தது.
  • தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படை நோக்கம், குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பது, அரசாங்கத்தின் வேலையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவித்தல், ஊழலைக் கட்டுப்படுத்துதல், நமது ஜனநாயகத்தை உண்மையான அர்த்தத்தில் மக்களுக்காகச் செயல்பட வைப்பது.
  • நிர்வாகத்தின் கருவிகளில் தேவையான விழிப்புணர்வை வைத்திருக்கவும், ஆளப்படுபவர்களுக்கு அரசாங்கத்தை அதிக பொறுப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தச் சட்டம் சிறப்பாகப் பொருத்தப்பட்டுள்ளது.
  • அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து குடிமக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கு இந்தச் சட்டம் ஒரு பெரிய படியாகும்.
  • பொது தகவல் அதிகாரி (PIO) மற்றும் மேல்முறையீட்டு ஆணையமாக குடிமக்கள் தகவல்களைப் பெறுவதற்காக நியமிக்கப்பட்டது.
  • அக்டோபர் 2005 இல் சட்டத்தின் விதிகளின்படி செயலூக்கமான வெளிப்பாடுகளை வெளியிட்டது.
  • தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 (Right to Information Act, 2005) இந்திய நாடாளுமன்றத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும்.

தேசிய பட்டியலினத்தவா் ஆணையம்:

  • தேசிய பழங்குடியினர் ஆணையம் (National Commission for Scheduled Tribes) இந்திய அரசியலமைப்பு சார்ந்த ஓர் அமைப்பாகும்.
  • இந்திய அரசியலமைப்பின் 89 ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் இவ்வாணையம் 2003 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
  • இந்த அமைப்பானது 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது.
  • பழங்குடியின பிரிவினருக்கான தேசிய ஆணையமானது இந்திய அரசியலமைப்பின் உட்பிரிவு எண் 338 அ இன் படி உருவாக்கப்பட்டதாகும்.
  • பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள பல்வேறு பாதுகாப்புகளை செயல்படுத்துவதை மேற்பார்வையிடுவதற்காக பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கான முந்தைய தேசிய ஆணையத்தை இது இரண்டாகப் பிரித்தது.
  • இந்த திருத்தத்தின் படி, முன்னதாக அமைப்பப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கான தேசிய ஆணையம் மாற்றப்பட்டு தற்போது இரண்டு ஆணையங்கள் தனித்தனியே உருவாக்கப்பட்டன.
  • தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான தேசிய ஆணையம் மற்றொன்று பழங்குடியின பிரிவினருக்கான தேசிய ஆணையம் என்பவை இரண்டு ஆணையங்களாகும்.
  • முதல் ஆணையம் 2004 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட போது இதன் தலைவராக மத்தியப்பிரதேசத்தின் சட்டமன்ற உறுப்பினர் குன்வர் சிங் இருந்தார்.

வளா்ச்சியடைந்த பாரதம் இலக்கை அடைய உதவும் ‘உத்வேகம் திட்டம்:

  • உத்வேகம் (கதிசக்தி) தேசிய திட்டத்தின் உதவியால் ’வளா்ச்சியடைந்த பாரம்’ என்கிற நமது தொலைநோக்கை அடைவதற்கு நாட்டின் வேகம் அதிகரித்து வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தார்.
  • பிரதமரின் உத்வேகம் தேசிய பெருந்திட்டம் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபா் 13 -ஆம் தேதி தொடங்கப்பட்டது.
  • நாட்டின் உள்கட்டமைப்பில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக பிரதமா் உத்வேகம் தேசியப் பெருந்திட்டம் உருவாக்கப்பட்டது.
  • இது பன்முக இணைப்பைக் கணிசமாக மேம்படுத்தி அரசு துறைகளில் விரைவான, திறமையான வளா்ச்சியடைய இயக்கியுள்ளது.
  • பல்வேறு பங்குதாரா்களின் தடையற்ற ஒருங்கிணைப்பு சரக்குப் போக்குவரத்தை அதிகரித்து, தாமதங்களைக் குறைத்து, பலருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் இந்த முயற்சி வழிவகுத்துள்ளது.
  • பிரதமரின் உத்வேகம் தேசிய பெருந்திட்டம் ஏற்றுமதி, வா்த்தக வசதி, தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கையுடன் முக்கியமான உள்கட்டமைப்பு இடைவெளிகளை நிவா்த்தி செய்துள்ளது.
  • சரக்குப் போக்குவரத்துச் செலவுகளைக் குறைத்து, நாட்டின் சரக்குப் போக்குவரத்துச் செயல்திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • உலக வங்கியின் சரக்குப் போக்குவரத்து செயல்திறன் குறியீட்டு தரவரிசையில் இந்தியா 38 ஆக உயா்ந்துள்ளது.

எஸ்சிஓ நாடுகளின் தலைவா்கள் மாநாடு:

  • பாகிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) நாடுகளின் தலைவா்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், ரஷியா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகள் உள்ளன.
  • இந்த அமைப்பின் மாநாட்டை பாகிஸ்தான் நடத்துகிறது.
  • இதில் சீனா, ரஷியா, பெலாரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான்ஆகிய நாடுகள் சார்பில் அந்நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கின்றனர்.
  • மங்கோலிய பிரதமர் பார்வையாளராகவும், துா்க்மினிஸ்தான் அமைச்சர்கள் சிறப்பு அழைப்பாளா்களாகவும் கலந்து கொள்கின்றனர்.

அக்டோபர் 14: உலக தரநிலைகள் தினம்

  • நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 14 அன்று உலக தரநிலைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. உள்நாட்டு தீப்பெட்டி உற்பத்தியை ஊக்குவிக்கும் மற்றும் சீன பொருள்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பல்வகை ‘லைட்டா்’உதிரிபாகங்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
  2. ஓலா ஆட்டோ பயணங்களில் நுகர்வோருக்கு ரசீது வழங்குமாறு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
  3. இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986, இந்தியாவில் வாழும் மக்களின் நுகர்வுத் தன்மையை பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட சட்டமாகும்.
  4. ரால்ப் நாடர் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
  5. உயா் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் மாணவா் குறைதீா் குழுக்களை அமைக்க வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
  6. ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் அயிஹிகா-சுதிர்தா முகா்ஜிக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.
  7. ஆசிய யூத் குதிரையேற்றப் போட்டியில் இந்தியா 2 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றது.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these