உலக பட்டினிக் குறியீடு:
- உலகின் 127 நாடுகளுக்கு இடையேயான சா்வதேச பட்டினிக் குறியீட்டில் இந்தியா 105 – ஆவது இடத்தில் உள்ளது.
- இதன் மூலம் பட்டினி விவகாரத்தில் தீவிர பகுப்பாய்வுக்கு உள்படுத்தும் பரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது.
- கடந்த ஆண்டு வெளியான பட்டியலில் மிகவும் பின்தங்கிய 111 இடத்தில் ‘தீவிர அளவில்’இருந்த இந்தியா, தற்போது 105 வது இடத்தில் உள்ளது.
- உலக நாடுகளில் பசியின் அளவை அளவிடுவதற்கும் கண்காணிப்பதற்குமான கருவியாக ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை இறப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான சா்வதேச பட்டினி குறியீடு அறியப்படுகிறது.
- நிகழாண்டு சா்வதேச பட்டினி குறியீட்டின் 19 – ஆவது பதிப்பு அயா்லாந்து நாட்டைச் சோ்ந்த மனிதநேய அமைப்பான ‘கன்சா்ன் ஓல்டுவைட்’ மற்றும் ஜொ்மனி நிறுவனமான ‘வெல்ட் ஹங்கா்லைப்’ஆகிய அமைப்புகளால் வெளியிடப்பட்டது.
- தரவரிசையில் 27.3 புள்ளிகளுடன் இந்தியாவுக்கு 105 – ஆவது இடம் கிடைத்துள்ளது.
- இதன்மூலம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 42 நாடுகளை உள்ளடக்கிய ‘தீவிரமான பகுப்பாய்வு’செய்ய வேண்டிய பிரிவுக்குள் இந்தியாவும் நுழைந்துள்ளது.
- நமது அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம், இலங்கை ஆகியவை ‘நடுத்தர’பிரிவின்கீழ் பட்டியலிடப்பட்டுள்ளனன.
- இந்தியாவின் புள்ளிகள் நான்கு கூறுகளின் மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.
- நாட்டின் மக்கள்தொகையில் 13.7 சதவீதம் போ் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனா்.
- ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளில் 35.5 சதவீதம் போ் வளா்ச்சி குன்றியவா்களாகவும் இவா்களில் 18.7 சதவீதத்தினா் எடை குறைந்தவா்களாகவும் உள்ளனா்.
- மேலும் 2.9 சதவீத குழந்தைகள் ஐந்து வயது நிறைவடைவதற்கு முன்பே இறக்கின்றனா்.
- 5 – க்கும் குறைவான மதிப்பெண்களுடன் குறியீட்டில் முதலிடத்தை சீனா, ரஷியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 22 நாடுகள் பகிர்கின்றன.
- உலக அளவில், ஒவ்வொரு நாளும் சுமார் 73.3 கோடி பேருக்கு போதுமான அளவு உணவு கிடைக்காததால் பட்டினியை எதிர்கொள்கின்றனா்.
பிரதமரின் உத்வேகம் திட்டம்:
- பிரதமரின் உத்வேகம் கதிசக்தி திட்டத்தின் கீழ், ரூ15.39 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- நாட்டின் உள்கட்டமைப்பு துறைக்கான பிரதமர் கதிசக்தி எனும் பல்முனை இணைப்புகளுக்கான தேசிய செயல்திட்டத்தை, 13 அக்டோபர், 2021 – ல் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
- முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களின் பங்குதாரர்களுக்கான முழுமையான திட்டமிடலை அமைப்பு ரீதியானதாக ஆக்குவதன் மூலம் கடந்த கால பிரச்சினைகளை பிரதமர் கதிசக்தி தீர்க்கும்.
- தனித்தனியாக திட்டமிடுதல் மற்றும் வடிவமைத்தலுக்கு பதிலாக, பொதுவான பார்வையுடன் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
- பாரத்மாலா, சாகர்மாலா, உள்நாட்டு நீர்வழிகள், உலர் மற்றும் நில துறைமுகங்கள், உடான் போன்ற பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசாங்கங்களின் உள்கட்டமைப்பு திட்டங்களை இது உள்ளடக்கும்.
- இந்த திட்டம் பொருள் போக்குவரத்தின் செலவை குறைப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.
- இந்தியாவில் இதற்கான செலவு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13% ஆக உள்ளது.
- இது வளர்ந்த நாடுகளில் 8% ஆக மட்டுமே உள்ளது, இந்தச் செலவைக் குறைத்து, உற்பத்தி துறையில் போட்டியை ஏற்படுத்துவதுடன், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்வதும், நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கச் செய்வதும் அரசின் நோக்கமாகும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM):
- 2004 மக்களவைத் தேர்தலில்தான் வாக்குப்பதிவு இயந்திரம் முதல் முறையாகப் பயன்படுத்தப்பட்டது.
- அதற்கு முன்புவரை வாக்குச்சீட்டு நடைமுறைதான் கடைப்பிடிக்கப்பட்டது.
- 1982 – ல் கேரளத்தின் பரவூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல் முதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
- 1984 – ல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரப் பயன்பாட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
- 1989 – ல் ராஜிவ் காந்தி அரசு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 வரைவில் திருத்தம் செய்து, தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்த அனுமதி அளித்தது.
- ஐஐடி மும்பை தொழிற்சாலை வடிவமைப்புத் துறையினரால் உருவாக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தேர்தல்களில் பயன்பாட்டுக்கு வந்தது.
- 1998 – ல் பரிசோதனை முயற்சியாக ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி உட்பட 25 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
- 2001 – ல் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
- 2004 மக்களவைத் தேர்தலில்தான் நாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
- 2014 – ல் நடந்த அதிபர் தேர்தலுக்கு நமீபியா, இந்தியாவின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தங்கள் நாட்டின் தேர்தலுக்காகப் பயன்படுத்தியது.
- VVPAT (Voter Verifiable Paper Audit Trail) எனப்படும் ஒப்புகைச் சீட்டின் மூலம், வாக்காளர்கள் வாக்கைச் செலுத்தியவுடன் தாங்கள் வாக்களித்த வேட்பாளருக்கே தங்கள் வாக்கு பதிவாகியுள்ளதா என்பதைச் சரிபார்க்க முடியும்.
அக்டோபர் 13 – மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
- அக்டோபர் 13 – ஆம் தேதி மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு தினம், மார்பகப் புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சிகிச்சையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அக்டோபர் 13: பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான சர்வதேச தினம்
- இயற்கை பேரிடர் குறைப்புக்கான சர்வதேச தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 13 அன்று பேரிடர் குறைப்பு அபாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அனுசரிக்கப்படுகிறது.
- 1989 – ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் பேரிடர் அபாயக் குறைப்புக்கான சர்வதேச தினம் தொடங்கப்பட்டது.
தகவல் துளிகள்:
- குஜராத்தைச் சோ்ந்த ஜாம்நகா் அரச குடும்பத்தின் அடுத்த வாரிசாக முன்னாள் கிரிக்கெட் வீரா் அஜய் ஜடேஜாவை ஜாம்நகா் மகாராஜா ஷத்ருசல்யாசிங் ஜடேஜா அறிவித்தார்.
- தாய்லாந்து நாட்டின் பிரதமர் – பேடொங்டான் ஷினவத்ரா.
- இந்திய ராணுவ தலைமைத் தளபதி – உபேந்திர திவேதி.
- வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை முறையானது (VVPAT) 2013 – ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
- கைலாஷ் சத்யார்த்தி 2014 – ஆம் ஆண்டில், “குழந்தைகள் மற்றும் இளைஞர்களை ஒடுக்குவதற்கு எதிராகவும், அனைத்து குழந்தைகளின் கல்வி உரிமைக்காகவும் போராடியதற்காக” பாகிஸ்தானிய பெண் மலாலா யூசுப்சாய் உடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.