6th October Daily Current Affairs – Tamil

 

‘மலபார்’கடற்படை பயிற்சி:  2024

  • 4 நாடுகள் பங்குபெறும் ‘மலபார்’கடற்படை பயிற்சி ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் அக்டோபா் 8 – ஆம் தேதி தொடங்குகிறது.
  • கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த பயிற்சியில் இந்தியா உள்பட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகள் பங்கேற்கின்றன.
  • இந்தியா – அமெரிக்கா இடையே கடந்த 1992 – ஆம் ஆண்டு மலபார் பயிற்சி தொடங்கப்பட்டது.
  • பிறகு ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்தப் பயிற்சி இந்திய பெருங்கடல் மற்றும் இந்தோ-பசிபிக் பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக நடத்தப்படுகிறது.

பொக்ரானில் வான் பாதுகாப்பு ஏவுகணை சோதனை:

  • ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் களப்பகுதியில் 4 – ஆம் தலைமுறை தொழில் நுட்பத்தில் மிகக் குறுகிய தூர ஏவுகணை சோதனையை மூன்று அளவுருகளில் வெற்றிகரமாக பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) முடித்துள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
  • தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பின் (விஷோர்ட்ஸ்) சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நடத்தியுள்ளது.
  • விஷோர்ட்ஸ் என்கிற இந்த ஏவுகணை மனிதா்களே எடுத்துச் செல்லக் கூடிய வான் பாதுக்காப்பு அமைப்பாகும்.
  • இதை இமாரத் ஆராய்ச்சி மையத்துடன் (ஆா்சிஐ) டிஆா்டிஓ ஆயவகங்களுடன் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
  • ராணுவத்தின் முப்படைகளும் தொடக்கத்திலிருந்தே இந்த திட்டத்தில் தொடா்பில் இருந்தது.

முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனை:

  • சுற்றுச்சூழலை பாதிக்காத சுத்தமான ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தில் தயாராகவுள்ள ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் டிசம்பரில் நடைபெற உள்ளது.
  • ஜெர்மனி, பிரான்ஸ், சுவிடன் மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக, ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தில் இயங்கும் ரயில்களை இயக்கும் ஐந்தாவது நாடாக இந்தியா மாறுகிறது.
  • தற்போதுள்ள டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் ரயில்களில் ஹைட்ரஜன் எரிபொருள் கலத்தை மீண்டும் பொருத்துவதற்கான ஒரு முன்னோடித் திட்டமாக இதனைக் கொண்டு வந்துள்ளது.
  • ஹைட்ரஜன் எரிபொருள் கொண்டு இயங்கும் இந்த ரயிலை வடக்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் ஹரியாணாவில் உள்ள ஜிந்த் – சோனிபட் வழித்தடத்தில் இயக்க முடிவு செய்துள்ளது.

KAZIND – 2024 கூட்டு ராணுவப் பயிற்சி:

  • இந்தியா-கஜகஸ்தான் கூட்டு ராணுவப் பயிற்சியின் 8 – வது பதிப்பு KAZIND – 2024, உத்தரகாண்டில் தொடங்கி செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 13, 2024 வரை நடைபெறுகிறது.
  • இந்தியாவுக்கும் கஜகஸ்தானுக்கும் இடையிலான பயிற்சி 2016 – இல் ‘பிரபால் டோஸ்டிக்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது.
  • கூட்டுப் பயிற்சி KAZIND, 2016 – ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
  • 120 பணியாளர்களைக் கொண்ட இந்திய ஆயுதப் படைகள், இந்திய ராணுவத்தின் குமாவோன் படைப்பிரிவின் பட்டாலியன் மற்றும் பிற ஆயுதங்கள் மற்றும் சேவைகள் மற்றும் இந்திய விமானப்படையைச் சேர்ந்த பணியாளர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன.

அக்டோபர் 6: உலக பெருமூளை வாதம் தினம்

  • உலக பெருமூளை வாதம் தினம் அக்டோபர் 6 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்டிருந்த சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருது திரும்பப் பெறப்பட்டது.
  2. அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களிடையே தலைமைப் பண்பை வளா்க்கும் வகையில் மாணவா் குழு அமைப்பு ‘மகிழ் முற்றம்’என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
  3. 15 – ஆவது முறையாக இரானி கோப்பையை வென்றது மும்பை, மும்பை அணி 27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இரானி கோப்பையை வென்றுள்ளது.
  4. இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரான்ஸ் நிறுத்தியதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these