29th September Daily Current Affairs – Tamil

சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள்:

  • 2025-26 நிதியாண்டுக்கான வளா்ச்சித் திட்டங்களை தயாரிக்கும் நோக்கில் அக்டோபா் 2 காந்தி ஜெந்தியன்று சிறப்பு கிராம சபைக் கூட்டங்களை நடத்த மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
  • நாடு முழுவதும் உள்ள55 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
  • கிராம பஞ்சாயத்துகளை மேம்படுத்தும் திட்டங்கள் மற்றும் அனைவரையும் பங்குகொள்ள செய்யும் பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தின் ‘மக்கள் திட்டங்களுக்கான பிரசாரத்தின்கீழ்’ 20,000 கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
  • ‘உன்னத பாரத அபியான் திட்டம், ‘மாதிரி கிராம பஞ்சாயத்துகளை உருவாக்கும் திட்டம்’ உள்ளிட்டவையின்கீழ் பணியாற்றும் மாணவா்களை ஒருங்கிணைத்து 2025-26 நிதியாண்டுக்கான கிராம வளா்ச்சித் திட்டங்களை தயாரிக்கும் பணியில் தில்லி ஐஐடி ஈடுபட்டுள்ளது.
  • ‘தாயின் பெயரில் மரம்’ நடும் முன்னெடுப்பின்கீழ் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் 75 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.
  • அப்போது ‘தூய்மை, ‘போதையில்லா இந்தியா’போன்ற கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு உறுதிமொழி ஏற்கப்படவுள்ளது.
  • மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சா் ராஜ் ராஜிவ் ரஞ்சன் சிங்.

உன்னத் பாரத் அபியான் திட்டம்:

  • உன்னத் பாரத் அபியான் கிராமப்புற வளர்ச்சி செயல்முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் பார்வையால் ஈர்க்கப்பட்டு, அறிவு நிறுவனங்களை மேம்படுத்தி, உள்ளடக்கிய இந்தியாவின் கட்டமைப்பை உருவாக்கவும், நாட்டின் கல்வி மற்றும் ஆராய்ச்சி திட்டங்களில் ஒரு முன்னுதாரண மாற்றத்தை ஏற்படுத்தவும் உதவுகிறது.
  • UBA இன் முக்கிய நோக்கமானது சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதாகும், இது கிராமங்களில் உள்ள மக்கள் எளிதில் அணுகக்கூடியது மற்றும் அவர்கள் ஒரு கெளரவமான வாழ்வாதாரத்தை வழிநடத்த உதவுவது மற்றும் அவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளை வழங்குவதாகும்.
  • உயர்கல்வி நிறுவனங்களுக்குள் மேம்பாட்டு நிகழ்ச்சி நிரலை வகுத்து, தேசியத் தேவைகளை, குறிப்பாக கிராமப்புற மக்களிடையே நிறைவேற்ற பயிற்சி அளித்தல்.
  • சமூக நலன்களுடன் உயர்கல்வியின் அடிப்படையை வடிவமைக்க களப்பணி மற்றும் பங்குதாரர்களின் தொடர்புகளின் அவசியத்தை வலியுறுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேலும் தொழில்முறை வாய்ப்புகளை உருவாக்க, ஆராய்ச்சியின் அடிப்படையில் புதிய யோசனைகள் மற்றும் வெளியீடுகளைக் கொண்டு வருவதை நோக்கமாக கொண்டது.
  • உயர்கல்வி நிறுவனங்களின் உதவியுடன், கிராமப்புற மக்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்குத் தேவையான தொழில்முறை வளங்களைப் பெற முடியும்.
  • கிராமப்புற இந்தியாவிற்கு அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை துறையில் பிரகாசமான வாய்ப்புகளை கொண்டு வர உதவுகிறது.
  • நாட்டின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு இடையே கூட்டு விதியின் உணர்வை வளர்ப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இயற்கை மரண கருணைக் கொலை: (பேஸிவ் எத்னேஸியா)

  • இயற்கையாக மரணம் (பேஸிவ் எத்னேஸியா) அடையும் வகையில், நோயாளியை கருணைக் கொலை செய்வதற்கான புதிய வரைவு வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவா், அந்தப் பாதிப்பில் இருந்து மீளமுடியாத அல்லது குணப்படுத்த முடியாத நிலையை அடைந்து, மரணம் என்பது அவருக்கு தவிர்க்க முடியாததாகிவிட்டால், இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவா்களின் நலன் கருதி, அவா்களோ அல்லது அவா்களின் உறவினா்களோ விடுக்கும் கோரிக்கையை ஏற்று மருத்துவா்களின் நேரடி தலையீட்டுடன், பாதிக்கப்பட்டவா்களுக்கு விஷ ஊசி போன்றவற்றை செலுத்தி திட்டமிட்டு செய்யும் கருணைக் கொலை இந்தியாவில் சட்டவிரோதமாகும்.
  • குழாய் மூலம் வழங்கப்படும் உணவு, மருந்துகள் உள்ளிட்டவற்றை நிறுத்தி, அவா்கள் இயற்கையாக மரணம் அடைய வழிவகுப்பது மற்றொரு வகை கருணை கொலையாகும்.

பிம்ஸ்டெக்:

  • அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க சென்ற அமைச்சா் ஜெய்சங்கா், இந்தியா உள்பட 7 நாடுகள் அங்கம் வகிக்கும் பிம்ஸ்டெக் அமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.
  • வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு (Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Cooperation; BIMSTEC), தெற்கு ஆசியாவிலும், தென் கிழக்கு ஆசியாவிலும் அமைந்துள்ள ஏழு நாடுகள் அடங்கிய ஒரு பன்னாட்டு அமைப்பாகும்.
  • இதன் உறுப்பு நாடுகள் வங்காள தேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேப்பாளம், பூட்டான் ஆகும்.
  • இவைகள் அனைத்து நாடுகளும் வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள நாடுகள் ஆகும்.
  • 1997 – ஆம் ஆண்டு சூன் 6 அன்று பாங்காக் நகரில் BIST – EC (வங்காள தேசம், இந்தியா, இலங்கை, தாய்லாந்து பொருளாதாரக் கூட்டுறவு) என்ற துணை மண்டல அமைப்பு உருவாக்கப்பட்டது.
  • 1997 டிசம்பா் 22 அன்று மியன்மார் நாடும் இதன் முழு உறுப்பினரானது, இதனால் இவ்வமைப்பு BIMST – EC எனப் பெயர் மாற்றமடைந்தது.

செப்டம்பர் 29: உலக இருதய தினம்

  • உலக இருதய தினம் இருதய நோய்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக செப்டம்பர் 29 அன்று நடைபெறும் சர்வதேச பிரச்சாரமாகும்.
  • இது உலக இருதய மன்றத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டது.

தகவல் துளிகள்:

  1. நேபாளத்திற்கு ரூ4 கோடி மதிப்பிலான சமூக வளா்ச்சித் திட்டங்களுக்கு இந்தியா நிதியுதவி செய்வதாக உறுதியளித்துள்ளது.
  2. மத்திய அரசின் சுற்றுலாத் துறையால் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக, கீழடி தோ்வு செய்யப்பட்டுள்ளது.
  3. ஹரியாணாவில் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் `மிஷன் ஒலிம்பிக் 2036` மாநாடு நடைபெற்றது.
  4. பெல்ஜியம் நாட்டின் புரூசல்ஸ் நகரில், நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில், கரீபிய தீவு நாடான கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் தங்கப் பதக்கத்தை வென்றார்.
  5. ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரை மீட்க டிராகன் விண்கலத்தை நாசா விண்ணில் ஏவுகிறது.

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these