க்வாட் கூட்டமைப்பின் 4 – ஆவது உச்சி மாநாடு:
- இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் “க்வாடரிலேடரல் செக்யூரிட்டி டயலாக்’ எனப்படும் “க்வாட்’ மாநாடு, அமெரிக்காவின் டெலாவா் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் நடைபெற்றது.
- அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளும் 2007 -இல் ஏற்படுத்திக் கொண்ட ஒரு கூட்டணிதான் “க்வாட்’ ஆகும்.
- இந்தோ – பசுபிக் பெருங்கடல் உள்ளடக்கிய பகுதிகளில் க்வாட் உறுப்பு நாடுகள் சுதந்திரமாக செயல்படுவதற்காக அமைக்கப்பட்டது.
தூய்மை எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் இந்தியா-ஜொ்மனி:
- இந்தியா-ஜொ்மனி ஒத்துழைப்பு ‘பசுமை மற்றும் நிலையான வளா்ச்சிக்கான கூட்டுறவு’ என்ற வியூகத்தின் அடிப்படையில் வழிநடத்தப்படுகிறது.
- 2022 – இல் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் ஒலாஃப் ஷோல்ஸ் இடையேயான பேச்சுவார்த்தையைத் தொடா்ந்து இது நிறுவப்பட்டது.
- இந்தியா-ஜொ்மனி இணைந்து உலக அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீடு செய்வதற்கான தளத்தை தொடங்கி உள்ளது.
- இந்தப் புதிய முயற்சி குஜராத்தின் காந்தி நகரில் கடந்த செப்டம்பா் 16 – ஆம் தேதி தொடங்கப்பட்டது.
- ஜொ்மனி நிதியுதவியுடன், மும்பை, சூரத், அகமதாபாத் போன்ற பெருநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நகா்ப்புற மேம்பாடு, வேளாண் சூழலியல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.
- ஜொ்மனி பிரதமா் ஒலாஃப் ஷோல்ஸ்.
அந்நிய செலாவணி கையிருப்பு:
- அந்நிய செலாவணி கையிருப்பு என்பது ஒரு நாட்டின் மத்திய வங்கியால் பராமரிக்கப்படும், முதன்மையாக வெளிநாட்டு நாணயங்களில் உள்ள சொத்துக்களின் தொகுப்பாகும்.
- இந்த இருப்புக்கள் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து, தேசிய நாணயத்தை உயர்த்தி, சர்வதேசக் கடன்களைத் தீர்ப்பதற்கு வசதியாக, நிதிக் குஷனாகச் செயல்படுகின்றன.
- அந்நியச் செலாவணி என்பது ஒரு நாடு தனது பணத்தின் மதிப்பை மற்றொரு நாட்டின் மாற்று விகிதத்துடன் இணைப்பதன் மூலம் உறுதிப்படுத்துவதற்கான ஒரு வழியாகும்.
- அந்நிய செலாவணி வர்த்தகம் என்பது வர்த்தகத்தில் இருந்து லாபம் ஈட்டுவதற்காக ஒரு நாணயத்தை மற்றொரு நாணயத்திற்கு மாற்றுவதாகும்.
- அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் ( FERA ) என்பது 1973 ஆம் ஆண்டு இந்தியாவில் இயற்றப்பட்ட சட்டமாகும்.
- இந்த மசோதா பணம் செலுத்துதல் மற்றும் அந்நிய செலாவணியை ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. ஃபெரா ஜனவரி 1, 1974 முதல் நடைமுறைக்கு வந்தது.
செப்டம்பர் 22: உலக காண்டாமிருக தினம்
- உலக காண்டாமிருக தினமானது 2010 – ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தினால் (WWF – World Wide Fund for Nature) முதன்முறையாக அறிவிக்கப்பட்டது.
தகவல் துளிகள்:
- இந்திய விமானப் படையின் புதிய தலைமைத் தளபதியாக அமா் ப்ரீத் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- சா்வதேச கடற்கரை தூய்மை தினத்தின் (செப்டம்பர் 21) ஒரு பகுதியாக மும்பையில் உள்ள ஜுஹு கடற்கரையில் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் பிரசாரம் நடைபெற்றது.
- ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்வதோடு எரிசக்தி மற்றும் தண்ணீரை சேமிப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்துவதால், கழிவு மறுசுழற்சி புத்தாக்க நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சா் பூபேந்தா் யாதவ் தெரிவித்துள்ளார்.
- ‘ருஃபுஸ்’என்று பெயரிடப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு உரையாடல் செயலியை முன்னணி இணையவழி வா்த்தக நிறுவனமான அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.