21st September Daily Current Affairs – Tamil

 

நேரடி வரி பிரச்னைகள் தீா்வு திட்டம் 2.0’ :

  • நேரடி வரி பிரச்னைகள் தீா்வு திட்டம்0’ அக்டோபா் 1 – ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • 2024 – 25 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ள ரூ 35 லட்சம் கோடி மதிப்பிலான7 கோடி நேரடி வரி பிரச்னைகளுக்கு தீா்வு காண வழிவகுக்கும் என தெரிவித்துள்ளது.
  • உச்ச நீதிமன்றம், உயா் நீதிமன்றம், வருமான வரி தீா்ப்பாயங்கள் உள்ளிட்டவையில் 2024, ஜூலை 22- அன்றிலிருந்து நிலுவையில் உள்ள நேரடி வரி சார்ந்த வழக்குகளுக்கு தீா்வு காண இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • கடந்த 2020 – ஆம் ஆண்டு நேரடி வரி பிரச்னைகள் தீா்வு திட்டம்0 அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1991 – நேரடி மற்றும் மறைமுக வரி விதிகளை சீர்திருத்த டாக்டர் ராஜா செல்லையாவின் கீழ் வரி சீர்திருத்தக் குழு அமைக்கப்பட்டது.

லோக்பால் அமைப்பு:

  • லோக்பால் என்பது லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தாச் சட்டம், 2013 இன் 3வது பிரிவின் கீழ் நிறுவப்பட்ட ஒரு சுதந்திரமான சட்ட அமைப்பு ஆகும்.
  • லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013′ நமது நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது, இச்சட்டம்01.2014 முதல் நடைமுறைக்கு வந்தது.
  • லோக்பால் மசோதா, பிரதமர் , மற்ற அமைச்சர்கள் , எம்.பி. க்கள் மற்றும் மத்திய அரசின் குரூப் ஏ, பி, சி மற்றும் டி அதிகாரிகள் மீது ஊழல் புகார்களை குறைதீர்ப்பாளரிடம் தாக்கல் செய்ய வழிவகை செய்கிறது.
  • 1971 – ஆம் ஆண்டு லோக் ஆயுக்தா மற்றும் உபா-லோகாயுக்தாச் சட்டம் மூலம் லோக் ஆயுக்தா நிறுவனத்தை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் மகாராஷ்டிரா ஆகும்.
  • மாநில முதல்வர் , சட்டப் பேரவைத் தலைவர் , எதிர்க்கட்சித் தலைவர் , சட்டப் பேரவைத் தலைவர் மற்றும் சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட குழுவின் ஆலோசனைக்குப் பிறகு மாநில ஆளுநரால் மாநிலத்தின் லோக் ஆயுக்தா நியமிக்கப்படுகிறார்.
  • தமிழ்நாடு சட்டமன்றம் தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம், 2018 ஐ நிறைவேற்றியுள்ளது.

செப்டம்பர் 21: சர்வதேச அமைதி தினம் (UN)

  • சர்வதேச அமைதி தினம் (UN) உலகம் முழுவதும் செப்டம்பர் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது, முதல் முறையாக இது செப்டம்பர் 1982 இல் அனுசரிக்கப்பட்டது.

செப்டம்பர் 21: உலக அல்சைமர் தினம்

  • மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த செப்டம்பர் 21 – ஆம் தேதி உலக அல்சைமர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

செப்டம்பர் 21: சர்வதேச ரெட் பாண்டா தினம்

  • இது செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது, இந்த ஆண்டு செப்டம்பர் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. தில்லியின் புதிய முதல்வராக புதிய முதல்வராக கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்துவந்த அதிஷி தேர்வு செய்யப்பட்டார்.
  2. ’ஸ்பேஸ் எக்ஸ்போ 2024’- கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நடைபெற்றது.
  3. காவிரி ஆறு தென்னிந்தியாவின் கங்கை என்று அழைக்கப்படுகிறது, யமுனை என்பது கங்கை நதியின் முக்கிய மற்றும் மிக நீளமான துணை நதியாகும்.
  4. திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் தனிப்படை போலீஸார் மேற்கொண்ட அதிரடி சோதனையின் பெயர் -‘ஆபரேஷன் அகழி’.

 

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these