4 – ஆவது உலகளாவிய புதுப்பிக்க எரிசக்தி முதலீட்டாளா்கள் மாநாடு:
- குஜராத் மாநிலம், காந்திநகரில் 4 – ஆவது உலகளாவிய புதுப்பிக்க எரிசக்தி முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெற்றது.
- சூரியசக்தி, காற்றாலை, அணுசக்தி, நீா்மின்சக்தி ஆகிய புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பலத்தில் தனது எதிர்காலத்தை கட்டமைக்க இந்தியா தீா்மானித்துள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தார்.
- புதுப்பிக்கத்தக்க வளங்களில் சூரிய சக்தி, நீர் மின்சாரம், புவிவெப்ப சக்தி, காற்றாலை சக்தி மற்றும் உயிரி சக்தி ஆகியவை அடங்கும்.
- பசுமை ஆற்றல் என்பது சூரிய ஒளி, காற்று அல்லது நீர் போன்ற இயற்கை வளங்களிலிருந்து உருவாக்கப்படும் எந்த வகை ஆற்றல் ஆகும்.
- குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத்.
- குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்.
நாடாளுமன்ற நிலைக் குழுக்கள்:
- மத்திய அமைச்சகங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்களை துறைசார்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆராயும்.
- அத்துடன் முக்கிய விவகாரங்கள் தொடா்பாக கொள்கைகள் வகுக்கவும், நாடாளுமன்றத்தில் மசோதாக்களை கொண்டு வரவும் மத்திய அரசுக்கு அந்தக் குழுக்கள் பரிந்துரைக்கும்.
- பெரும்பாலான நிலைக் குழுக்கள் மக்களவைச் செயலகத்தின் கீழும், சில நிலைக் குழுக்கள் மாநிலங்களவைச் செயலகத்தின் கீழும் செயல்படுகின்றன.
- நாடாளுமன்றத்தில் 24 நிலைக் குழுக்கள் உள்ளன. அனைத்து நிலைக்குழுக்களும் 31 உறுப்பினர்களை உடையது.
- மொத்தமுள்ள 24 நிலைக்குழுக்களில் 8 நிலைக்குழுக்கள் மாநிலங்களவையின் கீழும், 16 நிலைக்குழுக்கள் மக்களவையின் கீழும் செயல்படுகின்றன.
- பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு மக்களவையின் கீழ் செயல்படுகின்றது.
செப்டம்பர் 17: உலக நோயாளி பாதுகாப்பு தினம்
- உலக நோயாளி பாதுகாப்பு தினம் செப்டம்பர் 17 அன்று அனுசரிக்கப்படுகிறது. ‘நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த உலகளாவிய நடவடிக்கை’ என்ற6 தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, மே 2019 இல் 72 – வது உலக சுகாதார சபையால் இது நிறுவப்பட்டது.
சர்வதேச சிவப்புப் பனிக்கரடி தினம்:
- ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை சர்வதேச சிவப்புப் பனிக்கரடி தினம் அனுசரிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- எல்ஐசி நிறுவனத்தின் காப்பீட்டு சேவைகளை மேம்படுத்தும் வகையில் எண்ம இயங்குதளம் அமைக்க இன்ஃபோசிஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படவுள்ளது.
- குவாடலராஜா ஓபன் டென்னிஸ் போட்டியில் போலந்து வீராங்கனை மகதலேனா ஃபெச் சாம்பியன் பட்டம் வென்றார்.
- 95 – ஆவது அகில இந்திய எம்சிசி -முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது.
- சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் முதல் பெண் நடுவராக சலீமா இம்டியாஸ் தேர்வாகியுள்ளார்.