கரியமில வாயு உமிழ்வில்லாத சரக்கு போக்குவரத்து கொள்கை ஆலோசனை ஆவணம்:
- கரியமில வாயு உமிழ்வு இல்லாத பாரத சரக்குப் போக்குவரத்து கொள்கைக்கான 30 ஆலோசனைகள் அடங்கிய ஆவணத்தை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகா் அஜய் குமார் சூத் தில்லியில் வெளியிட்டார்.
- கரியமில வாயு உமிழ்வில்லாத சரக்கு போக்குவரத்து கொள்கை ஆலோசனை ஆவணம் -சென்னை ஐஐடி உதவியுடன் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
- பாரத் ZED கொள்கை ஆலோசனைக்கான ஆவணம் சென்னை ஐஐடியில் உள்ள கரியமில வாயு உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்து(டிரக்குகள்) வாகனங்களுக்கான சிறப்பு திறன் மையத்தின் உருவாக்கம், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகா் அலுவலகத்தால் அமைக்கப்பட்ட கொள்கை ஆலோசனைக் குழுவால் வழிநடத்தப்பட்டது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு:
- மக்கள்தொகை கணக்கெடுப்பு 10 – ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்.
- 2011 – ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவரை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
- மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021-ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கரோனா நோய்த்தொற்று காரணமாக தாமதமானது.
- கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளா்ச்சியின் காரணமாக தரவுகளைச் சேகரிக்க, கைப்பேசி செயலிகள் பயன்படுத்தப்படும் முதல் டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பாக இது இருக்கும்.
- மக்கள்தொகை கணக்கெடுப்பை செப்டம்பா் மாதம் முதல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
- இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872-ல் துவங்கப்பட்டு, 1881 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுக்கு ஒருமுறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1951 இல் செய்யப்பட்டது.
- 15 – வது மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 – ல் நடைபெற்றது.
- தற்போது நடைபெற இருப்பது இந்தியாவின் 16 – வது மக்கள் தொகை கணக்கெடுப்பும் சுதந்திர இந்தியாவின் 8-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும்.
- 1872 – ஆம் ஆண்டில், இந்தியாவில் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு மயோ பிரபுவின் ஆட்சியின் கீழ் செய்யப்பட்டது.
- இந்தியாவில் முதல் அதிகாரப்பூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்பு 1881 ஆம் ஆண்டு ரிப்பன் பிரபுவின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
- 1951 – ஆம் ஆண்டு மக்கள் தொகை பெருக்கத்தின் ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது.
- உலக மக்கள்தொகை தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 அன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்திய – ஆப்பிரிக்க வா்த்தக மாநாடு:
- இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் இந்திய-ஆப்பிரிக்க வா்த்தக மாநாட்டின் தொடக்க விழா தில்லியில் நடைபெற்றது.
- கடந்த ஆண்டு ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இந்தியா இருந்தபோது, அந்த அமைப்பில் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினராக சோ்க்கப்பட்டது.
- இந்தியாவுக்கு சிவிங்கிப் புலிகளை வழங்கியதன் மூலம் நாட்டின் பல்லுயிர் பெருக்கத்துக்கு ஆப்பிரிக்கா உதவியுள்ளது.
- இந்திய தொழில் கூட்டமைப்பு ( CII ) என்பது ஒரு அரசு சாரா வர்த்தக சங்கம் மற்றும் 1895 இல் நிறுவப்பட்ட இந்தியாவின் புது டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட குழுவாகும்.
சிக்கிம் அலுவல் மொழியாக ‘நேபாளி’ சோ்ப்பு:
- வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் அலுவல் மொழியாக ‘நேபாளி’ மொழி சோ்க்கப்பட்டுள்ளது.
- முன்னதாக ஆங்கிலம் மட்டுமே மாநிலத்தின் அலுவல் மொழியாக இருந்த நிலையில் இப்போது ‘நேபாளி’ மொழியும் இணைக்கப்பட்டுள்ளது.
- நேபாளி மொழி 1992-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக உள்ளது.
- நேபாளம், பூடான், இந்தியா, மியான்மரில் இந்த மொழி பேசப்படுகிறது.
- இது பெரும்பாலும் சம்ஸ்கிருதம் சார்ந்து இயங்கும் மொழியாகும், தேவநாகரி எழுத்துமுறையைக் கொண்டது.
- சிக்கிம் அலுவல் மொழிச் சட்டம் 1977-இன்படி மாநிலத்தின் அலுவல் மொழியாக நேபாளி மொழி அங்கீகரிக்கப்படுகிறது.
- சிக்கிம் மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் ஆவார்.
‘மிஷன் ரூமி – 2024’ திட்டம்:
- தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் வடிவமைத்த மறுபயன்பாட்டுக்கான ராக்கெட் மூலம் 3 செயற்கைக்கோள்கள் ஆகஸ்ட் 24 – ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையிலிருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளன.
- ‘மிஷன் ரூமி – 2024’ என்ற இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே முதன் முறையாக செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்திய பிறகு ராக்கெட்டானது மீண்டும் பூமிக்கு திருப்பிக் கொண்டுவரப்பட உள்ளது.
- ஸ்பேஸ் ஜோன் இந்தியா மற்றும் மார்ட்டின் குழுமங்கள் சார்பில் இந்த விண்வெளி ஆய்வுத் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
- ராக்கெட்டில் நவீன தொழில்நுட்பத்திலான திரவ ஆக்சிஜன் மற்றும் திட எரிபொருள் உந்து சக்தி பயன்படுத்தப்பட உள்ளது.
- புற ஊதா கதிர்வீச்சு, காற்றின் தரம், வளிமண்டல மாற்றங்களைக் கண்காணிக்கவும், அவை தொடா்பான தரவுகளை சேகரிக்கவும் 3 கியூப் செயற்கைக்கோள்களை ‘ரூமி 1’ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த உள்ளது.
- திட்டமிட்ட பாதையில் அவற்றை நிலைநிறுத்திய பிறகு ‘ரூமி 1’ ராக்கெட் பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு வந்து சேரும்.
- இந்தச் செயல் திட்டமானது சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது.
மெட்ராஸ் நிறுவன தினம்: ஆகஸ்ட் 22
- மெட்ராஸ், கிழக்கிந்திய கம்பெனியால் ஆகஸ்ட் 22 இல் நிறுவப்பட்டது.
- கிழக்கிந்திய நிறுவனம் 1639 இல் உள்ளூர் நாயக்கர் ஆட்சியாளர்களிடமிருந்து துண்டு நிலமாக மெட்ராஸ் வாங்கப்பட்டது.
தகவல் துளிகள்:
- குளோபல் ஃபைனான்ஸ் இதழின் 2024-ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியாளா் அறிக்கையில் ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் ஏ+ தரநிலையில் இடம்பெற்றுள்ளார், தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக அந்த தரநிலையில் சோ்க்கப்பட்டுள்ளார்.
- மத்திய உள்துறைச் செயலா் அஜய் குமார் பல்லாவின் பதவிக் காலம் நிறைவடைவதையொட்டி, புதிய உள்துறைச் செயலராக கோவிந்த் மோகன் பொறுப்பேற்கவுள்ளார்.
- அமெரிக்காவிடம் இருந்து எம்க்யூ-9பி ரக ட்ரோன்களை ஆளில்லா சிறிய ரக விமானங்கள் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது, இது ஆயுதங்களை எடுத்துச் சென்று தாக்குதல் நடத்தும் திறனுள்ள ட்ரோன்கள் ஆகும்.
- திண்டுக்கல் மாவட்டம், பழநியில் ஆகஸ்ட் 24, 25 – ஆம் தேதிகளில் ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ நடைபெறுகிறது.
- சென்னையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- ஜோர்டானில் நடைபெற்ற 17 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரோனக் தாஹியா வெண்கலப் பதக்கம் வென்றார்.