19th August Daily Current Affairs – Tamil

 

உணவுப் பொருள்களில் நுண்ணிய நெகிழித் துகள்கள்:

  • இந்திய உணவில் நுண்ணிய நெகிழித் துகள்கள் மாசுபாட்டை சரி செய்வதற்கான திட்டத்தை இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தொடங்கியது.
  • சா்க்கரை, உப்பு போன்ற பொதுவான உணவுப் பொருள்களில் நுண்ணிய நெகிழித் துகள்கள் இருப்பதை உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (எஃப்ஏஓ) சமீபத்திய அறிக்கை உறுதி செய்கிறது.
  • இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உணவில் நுண்ணிய நெகிழித் துகள்கள் மாசுபாடு குறித்த அதிகரித்து வரும் கவலையை சமாளிக்க ஒரு புத்தாக்கத் திட்டம் ஆகஸ்ட் 18- ஆம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது நாட்டின் உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறையாளராக, இந்திய நுகா்வோருக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இத்திட்டத்தை அளிக்கிறது.
  • உலகளாவிய ஆய்வுகள் பல்வேறு உணவுகளில் நுண்ணிய நெகிழித் துகள்கள் மாசுபாடு இருப்பதை எடுத்துக்காட்டினாலும், இந்தியாவுக்கென குறிப்பிட்ட நம்பகமான தரவை இதன் மூலம் உருவாக்கப்படும்.

ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தல்:

  • ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் பேரவைத் தோ்தல் மூன்று கட்டங்களாக நடத்தப்படவுள்ளது.
  • முதல் கட்ட வாக்குப்பதிவு அடுத்த மாதம் 18 – ஆம் தேதி நடைபெறுகிறது.
  • ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து அல்லது சுயாட்சியை இந்திய அரசாங்கம் ஆகஸ்ட் 5, 2019 அன்று ரத்து செய்தது.
  • இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 370, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெற வழிவகை செய்கிறது.
  • 1947ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது ஜம்மு காஷ்மீர் தனிச்சையாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என அம்மாநிலத்தின் கடைசி மகாராஜாவாக இருந்த ராஜா ஹரி சிங் விரும்பினார்.
  • 2019 – ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது, ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்தை நீக்கி, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் முத்திரை, விளக்கு:

  • வெம்பக்கோட்டை அருகே அகழாய்வில் சுடுமண் முத்திரை, விளக்கு, கல் பந்து, கல்லால் ஆன சில்வட்டு ஆகியவை கண்டறியப்பட்டன.
  • விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது.
  • இங்கு கண்ணாடி மணிகள், கல் மணிகள், சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப் பகுதி, நாயக்கா் கால செம்புக் காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 450-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டன.
  • சுடுமண்ணாலான முத்திரை, விளக்கு, கல் பந்து, கல்லால் ஆன சில்லு வட்டு ஆகியவை கண்டறியப்பட்டன.

உலக புகைப்பட தினம்: ஆகஸ்ட் 19

  • உலக புகைப்பட தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

தகவல் துளிகள்:

  1. கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி மத்திய அரசு சார்பில் அவரின் உருவம் பொறித்த ரூ 100 நாணயம் ராஜ்நாத் சிங் – ஆல் வெளியிடப்படவுள்ளது.
  2. இந்திய கடலோர காவல் படையின் 25 ஆவது தலைமை இயக்குநரான ராகேஷ் பால் காலமானார்.
  3. மீனவா்களை மீட்பது உள்பட கடலோர காவல் படையின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் புதிய கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
  4. திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அருகே கற்திட்டை அமைப்புடன் கூடிய மூன்று சதிக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  5. மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் கடந்த 15-ஆம் தேதி தொடங்கிய சா்வதேச காற்றாடித் திருவிழா நிறைவு பெற்றது.
  6. தமிழக அரசின் 50 – ஆவது தலைமைச் செயலாளராக நா.முருகானந்தம் நியமிக்கப்பட உள்ளார்.

 

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these