15th August Daily Current Affairs – Tamil

 

தமிழக நஞ்சராயன், கழுவேலி பறவைகள் சரணாலயங்கள் ராம்சர் தளங்களில் சேர்ப்பு:

  • தமிழகத்தின் நஞ்சராயன், கழுவேலி பறவைகள் சரணாலங்கள் உள்ளிட்ட நாட்டின் 3 சதுப்பு நிலங்கள் புதிதாக ராம்சா் தளங்களில் சோ்க்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாட்டுத் துறை அமைச்சா் பூபேந்திர யாதவ் அறிவித்தார்.
  • இதன் மூலம் நாட்டில் 13,58,068 ஹெக்டோ் பரப்பளவைக் கொண்ட ராம்சா் தளங்கள் எண்ணிக்கை 85-ஆக அதிகரித்துள்ளது.
  • சதுப்பு நிலக்காடுகள் அழிவை தடுக்கவும் அதை பாதுகாத்து மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த ‘ராம்சா்’ என்கிற சா்வதேச அமைப்பு செயல்படுகிறது.
  • ஈரான் நாட்டின் ராம்சா் நகரில் 1971- ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவின்படி அந்நகரில் பெயரில் இந்த அமைப்பு செயல்படுகிறது.
  • உலகளாவிய உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரங்களை நிலை நிறுத்த சதுப்பு நிலங்களின் சா்வதேச வலையமைப்பு உருவாக்கப்பட்டது.
  • இந்தியாவில் இதுவரை 82 சதுப்பு நிலங்கள் ராம்சா் தளங்களாக அறிவிக்கப்பட்டிருந்தது.
  • தற்போது இது 85 -ஆக அதிகரித்துள்ளது, குறிப்பாக 2013 வரை 26 இடங்கள் மட்டுமே ராம்சா் பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
  • ஆனால் 2014-ஆம் ஆண்டிற்கு பின்னா் கடந்த 10 ஆண்டுகளாக 59 இடங்கள் சோ்க்கப்பட்டுள்ளன.
  • தமிழகத்தில் உள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயம், கழுவேலி பறவைகள் சரணாலயம், மத்தியப் பிரதேசத்தில் உள்ள தவா நீா்த்தேக்கம் ஆகிய மூன்று புதிய தளங்கள் நிகழாண்டில் ராம்சா் தளங்களாக சோ்க்கப்பட்டுள்ளன.
  • தற்போது நாட்டிலே ​​தமிழகத்தில் தான் அதிகபட்சமாக 18 ராம்சா் தளங்கள் உள்ளன.
  • அடுத்த நிலையில் உத்தர பிரதேசத்தில் 10 தளங்கள் உள்ளன.

நஞ்சராயன் பறவைகள் சரணாலயம்:

  • திருப்பூா் – ஊத்துக்குளி பிரதான சாலையில், அமைந்துள்ள நஞ்சராயன் ஏரி, 125.865 ஹெக்டோ் பரப்பளவில் உள்ளது.
  • 1498- ஆம் ஆண்டு கட்டப்பட்டு இப்பகுதியை ஆண்ட நஞ்சராயன் என்ற மன்னரால் சீரமைக்கப்பட்டு அவரது பெயரிடப்பட்டது.
  • இந்த ஏரி வளமான விலங்கின பன்முகத்தன்மை காரணமாக கடந்த 2022- ஆம் ஆண்டு தமிழகத்தின் 17- ஆவது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கழுவேலி பறவைகள் சரணாலயம்:

  • புதுச்சேரிக்கு வடக்கே விழுப்புரம் மாவட்டத்தில் வானூா் வட்டத்தில் கோரமண்டலம் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு உவா் ஏரியாகும்.
  • இது 5,151.6 ஹெக்டோ் பரப்பளவில் ஆழமற்ற ஏரியாக கழுவேலி பறவைகள் சரணாலயம் உள்ளது.
  • 2021 – ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் 16 – ஆவது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
  • வங்கக் கடலில் உப்புகல்லி சிற்றோடை – எடையந்திட்டு முகத்துவாரம் ஆகியவற்றால் இந்த ஏரி இணைக்கப்பட்டுள்ளது.
  • உவா், நன்னீா், கடல் நீா் என மூன்று விதமான நீா் அம்சங்களின் அடிப்படையில் இந்த ஏரி இருக்கிறது.
  • நாட்டின் தீபகற்பத்தில் பல்லுயிர் நிறைந்த மிகப்பெரிய சதுப்பு நிலங்களில் ஒன்று கழுவேலி.
  • மத்திய ஆசிய பறக்கும் பாதையில் அமைந்துள்ள கழுவேலி பறவைகள் சரணாலயத்தில் புலம் பெயரும் பறவை இனங்களுக்கு ஒரு முக்கியமான நிறுத்த இடமாக உள்ளது.

தவா நீா்த்தேக்கம்:

  • மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இட்டார்சி நகருக்கு அருகே தவா , டென்வா ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் உள்ளது தவா நீா்த்தேக்கம்.
  • தவா ஏரி நீா் பரப்பு 20,050 ஹெக்டேராகவும் நீா்ப்பிடிப்புப் பகுதி 5,98,290 ஹெக்டேராகவும் உள்ளது.
  • பல அரிய மற்றும் ஆபத்தான தாவர இனங்கள், ஊா்வன மற்றும் பூச்சிகள் இங்கு காணப்படுகின்றன.
  • இப்பகுதி சுற்றுச்சூழல், தொல்லியல், வரலாற்று மற்றும் வனவியல் கண்ணோட்டத்தில் பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது.

குயிலியின் வரலாற்று மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு:

  • தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட மங்கை குயிலியின் ஆங்கில குறுங்காவிய மூலத்தின் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, பிரஞ்ச் மொழிபெயர்ப்பை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தில்லியில் வெளியிட்டார்.
  • நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முதல் பெண் போராளியான ராணி வேலு நாச்சியாரின் மகளிர் படைத் தளபதியாக இருந்த குயிலி என்கிற வீர மங்கையின் வரலாற்றுக் கதை “தி பாலட் ஆஃப் த வாரியர் கேர்ல் குயிலி’ என்கிற தலைப்பில் கே.ரவி ஆங்கிலக் கவிதை வடிவில் எழுதியிருந்தார்.
  • ஆங்கில குறுங்காவியத்தை தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் பிரெஞ்ச் மொழிகளில் முறையே இலந்தை ராமஸ்வாமி, என். லட்சுமி ஐயர், டோடா சேசு பாபு, கே.புகழேந்தி உள்ளிட்டோர் மொழிபெயர்த்திருந்தனர்.

ஆகஸ்ட் 15: இந்திய சுதந்திர தினம்

  • 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரமடைந்ததை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய சுதந்திர தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தியா தனது 78 – வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.

தகவல் துளிகள்:

  1. செங்கோட்டையில் 11-ஆவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.
  2. ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் படைப் பிரிவைச் சேர்ந்த கர்னல் மன்பிரீத் சிங், மேஜர் ராமகோபால் நாயுடு, ரவிக்குமார், ஹிமாயுன் முஸ்ஸாமில் பட் ஆகிய நால்வருக்கு கீர்த்தி சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  3. ஆற்றில் மிதக்கும் நெகிழிகளை ஈா்க்கும் சாதனம் உருவாக்கிய காரைக்காலில் உள்ள என்ஐடி புதுச்சேரி சிவில் என்ஜினியரிங் குழுவுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.
  4. மத்திய உள் துறை செயலாளராக கோவிந்த் மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  5. அமலாக்கத் துறையின் புதிய இயக்குநராக ராகுல் நவீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  6. இந்திய ஹாக்கியின் சீனப் பெருஞ்சுவா் என்று அழைக்கப்படும் ஸ்ரீஜேஷ், சமீபத்தில் ஓய்வுபெற்ற நிலையில், அவரை கௌரவிக்கும் விதமாக அவரின் ஜொ்ஸி எண் ‘16’-ஐ ஹாக்கி இந்தியா அமைப்பு விடுவித்தது.

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these