பொருளாதார ஆய்வறிக்கை:
- பட்ஜெட்டுக்கு முன்பாக நாட்டின் பொருளாதார நிலை குறித்த பொருளாதார ஆய்வறிக்கை ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
- அந்த வகையில் 2023 – 24 ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.
- அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் உருவெடுக்கவுள்ளது.
- 2024 – 25 ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 8 சதவீத வளா்ச்சியை எட்டும் என கடந்த ஏப்ரல் மாதம் சா்வதேச செலாவணி நிதியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
- மேலும், ஜி20 நாடுகளில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது.
- தலைமைப் பொருளாதார ஆலோசகா் அனந்த நாகேஸ்வரன்.
பிரதமரின் வீட்டு வசதி திட்டம்:
- பிரதமரின் வீட்டு வசதி திட்ட (நகா்ப்புறம்) பயனாளிகளில் 15 சதவீதம் போ் சிறுபான்மையினா் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் 25 ஜூன் 2015 அன்று தொடங்கப்பட்டது.
- இத்திட்டத்தின் கீழ் வீடுகள் இல்லாதவர்கள் வீடு கட்டவோ அல்லது வாங்கவோ பலன் பெறுவார்கள்.
- ஏழைகளுக்கு தரமான வீட்டு வசதியை மேம்படுத்துவதுதே இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் சாராம்சமாகும்.
- அரசின் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் வரும் மத்திய அரசின் மிக முக்கிய திட்டமாகும்.
- கிராமப்புற பகுதிகளில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கைத்தரத்தையே அடியோடு மாற்றி, அவர்களுக்கு உறுதியான வீடுகளை கட்டி தருவதாக, மத்திய அரசு உத்தரவாதம் தந்து, இந்த திட்டத்தினை துவங்கியது.
- இத்திட்டத்தின் கீழ், வீடு கட்ட பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
பிரம்மபுத்திரா போர்க்கப்பல்:
- இந்திய கடற்படைக்குச் சொந்தமான பிரம்மபுத்திரா கப்பலில், ஜூலை 21 மறுசீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது தீ விபத்து நேரிட்டது.
- ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா என்பது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதன்மையான போர்க்கப்பல்.
- ஏப்ரல் 2000-ஆம் ஆண்டு் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.
- இக்கப்பல், 5,300 டன் எடை கொண்டது, 125 மீட்டர் நீளமும், 14.4 மீட்டர் அகலமும் உடையது, கடலில் 27 நாட்டிக்கல் வேகத்தில் செல்லக் கூடியது.
பந்தயக் கார்களுக்கான எரிபொருள்: இந்தியன் ஆயில் அறிமுகம்
- பந்தயக் கார்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட எரிபொருளை இந்தியாவின் முன்னணி பெட்ரோலியப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான இந்தியன் ஆயில் அறிமுகப்படுத்தியுள்ளது.
- பந்தயக் கார்களுக்கான சிறப்பு எரிபொருளை சென்னையிலுள்ள மெட்ராஸ் மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
- ஸ்டார்ம்-எஸ்க் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எரிபொருள் அதிக ஓக்டேனுடன் பந்தயக் கார்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.
- இந்தியாவில் வாகன பந்தயத் துறையில் புரட்சி செய்யும் நோக்கில் எம்எம்எஸ்சி-யுடன் இந்தியன் ஆயில் ஒப்பந்தம் மேற்கொண்டது.
வீடு கட்ட இணையவழியில் உடனடி அனுமதி: சுய சான்றிதழ் திட்டம்
- தமிழகத்தில் 3,500 சதுர அடி பரப்பில் கட்டப்படும் குடியிருப்புக் கட்டுமானத்துக்கு சுய சான்றிதழ் திட்டத்தின்படி இணைய வழியில் உடனடியாக அனுமதி அளிக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- அதன்படி, 3,500 சதுர அடி கட்டடப் பரப்புக்குள் தரைத்தளம், முதல் தளம் கொண்ட ஏழு மீட்டா் உயரத்துக்கு உள்பட்ட குடியிருப்புக் கட்டடத்துக்கு சுய சான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டட அனுமதியை எளிதாகவும், உடனடியாகவும் பெற முடியும்.
- சுயசான்றிதழ் திட்டம் என்பது, பொதுமக்கள் கட்டட அனுமதிக்காக அலுவலகங்களுக்குச் சென்று வரும் நேரத்தை முழுமையாகத் தவிா்த்து, அதிகபட்ச வெளிப்படைத்தன்மையுடனும், நடைமுறையில் உள்ள கட்டட விதிகளை எளிமைப்படுத்தியும் கொண்டுவரப்பட்டுள்ளது.
துலுனி திருவிழா: நாகாலாந்து
- துலுனி திருவிழாவானது நாகாலாந்தின் சுமி நாகா பழங்குடியின மக்களால் கொண்டாடப்படும் மிக முக்கியத் திருவிழாவாகும்.
- துலுனி என்பது சுமி பழங்குடியின மக்கள் அருந்தும் மதுபானத்தின் பெயராகும்.
- துலுனி என்பது சுமி பழங்குடியின மக்களின் அறுவடைத் திருவிழா ஆகும்.
ஜூலை 23: தேசிய ஒலிபரப்பு தினம்
- 1927 ஆம் ஆண்டு பம்பாய் ஸ்டேஷனில் இருந்து ஒளிபரப்பப்பட்ட நாட்டின் முதல் வானொலி ஒலிபரப்பின் நினைவாக, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 23 அன்று தேசிய ஒலிபரப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
தகவல் துளிகள்:
- படித்து முடித்து 51% இந்தியர்கள் மட்டுமே வலைவாய்ப்பைப் பெறுவதாக பொருளாதார ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
- இந்திய மொழிகளின் வளா்ச்சிக்காக மத்திய அரசின் உயா் கல்வித் துறை செலவிடும் தொகை, சமஸ்கிருதத்திற்கு முன்பிருந்ததைவிட தற்போது இரண்டரை மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.16 கோடியில் கட்டப்பட்ட 5,643 குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சதம் சடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தபத்து படைத்துள்ளார்.
- மிக இளம் வயதில் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 5 வீக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை இளம் பந்துவீச்சாளர் சோயப் பஷீர் படைத்தார்.