மு.கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் நினைவு நாணயம்:
- திமுகவின் முன்னாள் தலைவரும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் ரூ.100 நினைவு நாணயத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
- தமிழகத்தில் 5 முறை முதல்வராகவும் 13 முறை சட்டப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினராகவும் இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
- இந்த நாணயத்தின் ஒரு பக்கம் சிங்கத்தின் தலையுடன் கூடிய அசோக தூண், “சத்யமேவ ஜெயதே’, “பாரத்’ ஆகிய வார்த்தைகள் தேவநாகரி எழுத்திலும் “இந்தியா’ என ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும்.
- மறுபக்கம் நாணயத்தின் மையத்தில் “கலைஞர் எம். கருணாநிதி’ உருவப்படமும், கீழே அவர் பயன்படுத்திய “தமிழ் வெல்லும்’ என்ற வாசகமும் இடம் பெறுகிறது.
- கலைஞர் எம்.கருணாநிதி பிறந்த நூற்றாண்டு’ (1924-2024) என தேவநாகரி எழுத்திலும், ஆங்கிலத்திலும் இடம்பெறும்.
- சுமார் 35 கிராம் எடை கொண்ட இந்த ரூ.100 நாணயத்தில் 50 சதவீதம் வெள்ளியும், 40 சதவீதம் தாமிரமும், நிக்கல் மற்றும் துத்தநாகம் முறையே தலா 5 சதவீதமும் கலந்திருக்கும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
- இதன் விலை ரூ.2,500 என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
குஜராத்: ‘சண்டிபுரா’ வைரஸ்
- குஜராத்தின் சபா்கந்தா, ஆரவல்லி, மஹிசாகா், ராஜ்கோட் உள்ளிட்ட மாவட்டங்களில் ‘சண்டிபுரா’ வைரஸ் பரவி வருகிறது.
- கொசு உள்ளிட்ட சில பூச்சிகளின் மூலம் பரவும் இந்த வைரஸ், ஃபுளூ போன்ற அறிகுறிகளுடன் கடுமையான மூளையழற்சியை ஏற்படுத்துவதாகும்.
- சண்டிபுரா வைரஸ் காய்ச்சல், உடல்வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் கடுமையான மூளையழற்சி போன்ற அறிகுறிகளுடன் காய்ச்சலை ஏற்படுத்துகிறது.
- நோய்க்கிருமி ராப்டோவிரிடே குடும்பத்தின் வெசிகுலோவைரஸ் இனத்தைச் சேர்ந்தது. இது கொசுக்கள், உண்ணிகள் மற்றும் மணல் ஈக்கள் உள்ளிட்ட நோய்க்கிருமிகளால் பரவுகிறது.
- மகாராஷ்டிர மாநிலம், புணேயில் தேசிய வைராலஜி நிறுவனம் உள்ளது.
வெம்பக்கோட்டை அகழாய்வில் முழு வடிவ சங்கு:
- வெம்பக்கோட்டை மூன்றாம் கட்ட அகழாய்வில் சங்கு வளையல் தயாரிக்க பயன்படுத்திய முழு வடிவ சங்கு கண்டறியப்பட்டது.
- விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுகாடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது.
- கண்ணாடி மணிகள், கல்மணிகள், பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப் பகுதி, கி.பி.16 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் கால காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பொருள்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டன.
- இங்கு சங்கு வளையல் தயாரிப்பு தொழில்கூடம் இருந்ததை 2-ஆம் கட்ட அகழாய்வில் உறுதி செய்யப்பட்டது.
‘பி.எம்.ஸ்ரீ’ திட்டம்:
- மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ் உள்ள ’பி.எம். ஸ்ரீ’ திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளிகளும் கொண்டு வரப்பட்டு அதன் உள்கட்டமைப்பு உள்ளிட்ட கல்விச் செயல்பாடுகள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
- இந்தத் திட்டத்தின் பலனை பெறுவதற்கு மத்திய கல்வி அமைச்சகத்துடன், அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
- பி.எம்.ஸ்ரீ’ திட்டத்தில் இணையாததால் தமிழகத்துக்கு ரூ.2,000 கோடி மத்திய நிதி நிறுத்திவைத்துள்ளது.
- ‘பி.எம்.ஸ்ரீ’(பிரதான் மந்திரி ஸ்கூல்ஸ் ஃபார் ரைசிங் இந்தியா) திட்டம், நாடு முழுவதும் உள்ள சுமார் 14,500 பள்ளிகளின் தரம் உயர்த்துதல் மற்றும் மேம்பாட்டிற்கான மத்திய அரசின் நிதியுதவி திட்டமாகும்.
- மத்திய அரசு, மாநில அரசு,உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் பள்ளிகளில் இருந்து பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும்.
- செப்டம்பர் 5, 2022 ஆசிரியர் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி PM – SHRI என்ற புதிய முயற்சியை அறிவித்தார்.
- இந்த திட்டத்தின் நோக்கம் தரமான கற்பித்தல், கற்றல் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியை வழங்குவதாகும்.
ஜூலை 17: சர்வதேச நீதிக்கான உலக தினம்
- ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17 அன்று சர்வதேச நீதிக்கான உலக தினம் அனுசரிக்கப்படுகிறது. இது சர்வதேச குற்றவியல் நீதி தினம் அல்லது சர்வதேச நீதி தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
- சர்வதேச நீதிக்கான உலக தினம் 2024 – ன் கருப்பொருள்: “தடைகளை சமாளித்தல் மற்றும் சமூக நீதிக்கான வாய்ப்புகளை கட்டவிழ்த்தல்” ஆகும்.
ஜூலை 18: சர்வதேச நெல்சன் மண்டேலா தினம்
- ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18 அன்று சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் அனுசரிக்கப்படுகிறது.
- நெல்சன் மண்டேலா தினம் முதன்முறையாக 2010 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.
தகவல் துளிகள்:
- புதுச்சேரியில் தேசிய நெல் திருவிழா மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது.
- அக்னிபத் திட்டத்தில் பணியாற்றி விட்டு திரும்பும் வீரா்களுக்கு மாநில காவல் துறையில் 10% இடஒதுக்கீடு சலுகைகள் ஹரியாணா மாநில அரசு அறிவித்துள்ளது.
- கர்நாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் 100 சதவிகிதம் கன்னட மக்களுக்கு கட்டாய இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அம்மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- சர்வதேச தரவுகளின்படி, உலகின் மிகப் பெரிய ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் சீனா ஆகும்.
- சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் 20-ஆவது ஆண்டு நிறைவு விழா ஜூலை 20 இல் நடைபெறுகிறது, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த 2004- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- தமிழ் நாட்டில் கரூரில், ரூ1 கோடியில் கைத்தறி நெசவுப் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
- தென்மண்டல காவல் துறை தலைவராக பிரேம் ஆனந்த் சின்கா பொறுப்பேற்றார்.