காப்பீட்டு சட்டத் திருத்த மசோதா:
- பட்ஜெட் கூட்டத் தொடரில் காப்பீட்டு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- இதன் மூலம் 2047-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் காப்பீடு அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- பட்ஜெட் கூட்டத் தொடா் ஜூலை 22-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
- காப்பீட்டு சட்டம் 1938 – இல் சில முக்கியத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
- ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு என பல்வேறு காப்பீடுகளை ஒரே நிறுவனம் மேற்கொள்ளலாம் என சட்டம் திருத்தப்பட இருக்கிறது.
- இப்போதைய நிலையில் ஆயுள் காப்பீட்டில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பிற காப்பீடுகளை விற்பனை செய்ய முடியாது.
- நாட்டில் உள்ள அனைவருக்கும் 2047-ஆம் ஆண்டுக்குள் காப்பீடு கிடைக்க வேண்டும் என்ற அரசின் இலக்கை எட்ட முடியும்.
- தற்போது இந்தியாவில் 25 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும், 32 பிற பொதுக் காப்பீட்டு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.
முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் – உச்சநீதிமன்ற தீா்ப்பு:
- குற்றவியல் நடைமுறைச் சட்ட (சிஆா்பிசி) பிரிவு 125-இன்கீழ், முஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் (பராமரிப்புத் தொகை) கோரலாம் என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீா்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.
- அனைத்து மதத்தைச் சோ்ந்த திருமணமான பெண்களுக்கும் இந்த சட்டப் பிரிவு பொருந்தும் என்று தீா்ப்பில் குறிப்பிடப்பட்டது.
ஷா பானு வழக்கு:
- விவாகரத்துக்குப் பின்பு மனைவிக்கு முஸ்லிம் கணவா் ஜீவானம்சம் வழங்க வேண்டும் என கடந்த 1985-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது
- இந்தத் தீா்ப்புக்கு வடிவம் கொடுக்கும் வகையில் அப்போதைய பிரதமா் ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில், இஸ்லாமிய பெண்கள் (விவாகரத்தைப் பாதுகாக்கும் உரிமை) சட்டம் 1986-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
- இந்தச் சட்டத்தை கடந்த 2001-ஆம் ஆண்டு தில்லி உயா்நீதிமன்றம் உறுதிசெய்தது.
- இது, இஸ்லாமிய பெண்கள் திருமணம் மற்றும் விவாகரத்தில் சம உரிமை பெறவும் வழிவகை செய்தது.
பிரதமரின் ‘மரம் நடும்’ முன்னெடுப்பு:
- உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 140 கோடி மரக்கன்றுகள் நடும் ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ முன்னெடுப்பை பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஜூன் 5-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
- பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்த ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ முன்னெடுப்பு பருவநிலை மாற்றத்தின் சவால்களுக்கு தக்க பதிலடியாக அமைந்துள்ளது.
- மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஒரே நாளில் 11 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்:
- தமிழகத்தில் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 15 இல் தொடங்கி வைக்கவுள்ளார்.
- முதல்வரின் காலை உணவு திட்டம், முதல் கட்டமாக 9.2022 இல் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தொடங்கி வைக்கப்பட்டது.
- முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில், முதல்வர் மு.க.ஸ்டாலினால் 30,992 அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, தொடங்கி வைக்கப்பட்டது.
- காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 இல் திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார்.
- இந்தத் திட்டத்தின் மூலம் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 23 லட்சம் மாணவர்கள் பயனடையவுள்ளனர்.
கல்வி வளர்ச்சி நாள்: ஜூலை 15
- தமிழகமானது காமராசரின் பிறந்த தினமான ஜூலை 15 ஐ ‘கல்வி தினம்’ அல்லது ‘கல்வி வளர்ச்சி தினமாக’ அனுசரிக்கிறது.
- 2006 – ஆம் ஆண்டு முதல் இத்தினம் கல்வி வளர்ச்சி தினமாக அனுசரிக்கப் படுகிறது.
உலக இளைஞர் திறன்கள் தினம்: ஜூலை 15
- உலக இளைஞர் திறன்கள் தினம் 2024 ஜூலை 15 இல் அனுசரிக்கப்படுகிறது.
- இந்த ஆண்டு நிகழ்வின் கருப்பொருள்: “அமைதி மற்றும் வளர்ச்சிக்கான இளைஞர் திறன்கள்” என்பதாகும்.
தகவல் துளிகள்:
- பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் வலைதள கணக்கை 10 கோடி பேர் பின்தொடர்கிறார்கள், இதன்மூலம் அதிக நபர்களால் பின்தொடரப்படும் அரசியல் தலைவர் என்ற சாதனையை படைத்தார்.
- காங்கிரஸின் மக்களவைக் குழு துணைத் தலைவராக கௌரவ் கோகோய் தோ்வு செய்யப்பட்டுள்ளார்.
- திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கற்காலக் கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி.சா்மா ஓலியை, நேபாள அதிபா் ராம் சந்திர பவுடலால் நியமித்தார்.
- நடப்பாண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
- இந்திய மகளிர் ‘ஏ’ அணிக்கு மின்னு மணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.