Site icon Gurukulam IAS

TNPSC – Current Affairs ,MAY 27

இன்றைய நடப்பு நிகழ்வுகள் மே 27, 2024

 

மரபியல் வளங்கள் பாதுகாப்பு: உலக அறிவுசார் சொத்து அமைப்பு ஒப்பந்தம்

ஸ்விட்சா்லாந்து தலைநகா் ஜெனீவாவில் உள்ள உலக அறிவுசார் சொத்து அமைப்பின் தலைமையகத்தில் 192 நாடுகள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது.

மரபியல் வளங்கள் மற்றும் பாரம்பரிய அறிவாற்றலை பாதுகாக்க உலக அறிவுசார் சொத்து அமைப்பு புதிய ஒப்பந்தத்தை செய்துள்ளது.

இந்த மாநாட்டில் மரபியல் வளங்களை அடிப்படையாகக் கொண்டோ அல்லது அதனுடன் தொடா்புள்ள பாரம்பரிய அறிவாற்றலை அடிப்படையாகக் கொண்டோ ஒரு கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தால், அந்த மரபியல் வளங்கள் எந்த நாட்டைச் சோ்ந்தது அல்லது அவை எங்கிருந்து கிடைத்தன என்பது குறித்து காப்புரிமை விண்ணப்பதாரா்கள் கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும் என்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

தற்போது 35 நாடுகளில் மட்டுமே இதுபோன்ற நடைமுறைகள் உள்ளன.

மாநாட்டில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதில் இந்தியா முக்கிய பங்காற்றியது.

150 – க்கும் மேற்பட்ட நாடுகளின் ஒருமித்த கருத்துடன் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

செய்யாறு அருகே 16-ஆம் நூற்றாண்டு சதிகல் கண்டெடுப்பு:

செய்யாற்றை அடுத்த மாமண்டூா் அருகேயுள்ள பூநெய்த்தாங்கல் கிராமத்தில் 16 -ஆம் நூற்றாண்டு சதிகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சதிகல் எனும் உடன்கட்டை ஏறும் பழக்கம் கி.பி.15-ஆம் நூற்றாண்டுக்கும் 16-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தென்னிந்தியாவில் மூவேந்தா்கள், பல்லவா்கள், விஜயநகர மற்றும் நாயக்கா் ஆட்சி காலங்களில் இருந்து உள்ளதாக அறியப்படுகிறது.

இறந்து விட்ட கணவரோடு தீயில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட மனைவிக்கு கற்கள் நடப்படுவது மரபாக இருந்து வந்துள்ளது.

உத்பவ் திட்டம்:

ப்ராஜெக்ட் உத்பவ் என்பது, இந்திய ராணுவத்தின் பாரம்பரியத்தை கண்டுபிடிப்பதற்காகவும், பண்டைய இந்திய ஸ்டேட் கிராஃப்ட், போர்க்ராஃப்ட், இராஜதந்திரம் மற்றும் மூலோபாய சிந்தனைகளை மீட்டெடுக்கும் முயற்சியாகும்.

இது பூர்வீக இராணுவ அமைப்புகள், வரலாற்று நூல்கள், பிராந்திய நூல்கள் மற்றும் ராஜ்ஜியங்கள், கருப்பொருள் ஆய்வுகள் மற்றும் சிக்கலான கௌடில்ய ஆய்வுகள் உட்பட பரந்த அளவிலான கவனம் செலுத்துகிறது.

திட்ட உத்பவ் வரலாற்று மற்றும் சமகாலத்தை இணைக்க முயல்கிறது.

இந்தத் திட்டம் வரலாற்றுக் கதைகளை மீண்டும் கண்டுபிடிப்பதற்கு அப்பாற்பட்டது, இது இந்தியாவின் பன்முக தத்துவ மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு உள்நாட்டு சொற்களஞ்சியத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்திய இராணுவம் பல நூற்றாண்டுகள் பழமையான கொள்கைகளிலிருந்து பெற அனுமதிக்கும் வகையில், பண்டைய ஞானத்தை நவீன இராணுவக் கல்வியில் ஒருங்கிணைப்பதே இறுதி நோக்கமாகும்.

வானவில் மன்றம் திட்டம்: 

வெறும் ஏட்டுப் படிப்பை ஏழைக்குத் தருவதில் பலன் இல்லை என்பதை உணர்த்தவே இந்தத் திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது. 

அரசுப் பள்ளி மாணவர்கள் அறிவியலை அனுபவப்பூர்வமாக கற்க வேண்டும் என்பதே இதன் நோக்கம், இனி அரசுப் பள்ளிகளில் அறிவியலும் கணிதமும் அடுத்த தயாராகி வருகிறது.

திருச்சியில் வானவில் மன்றத்தை அக்டோபர் 28, 2022 இல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இது மாநிலம் முழுவதும் VI முதல் VIII வரையிலான வகுப்பு மாணவர்களை கற்றலில் இருந்து செயல்பாடு அடிப்படையிலான உள்ளடக்கத்தை ஒருங்கிணைப்பதற்கு மாற்ற முயற்சிக்கிறது.

வானவில் மன்றத்தின் செயல்பாடுகள் மாநிலம் முழுவதும் தொகுதி வாரியாக 13,200 பள்ளிகளில் சுமார் 20 லட்சம் மாணவர்களை உள்ளடக்கிய STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) உதவியாளர்களால் செயல்படுத்தப்படும்.

தகவல் துளிகள்:

ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே.

கேன்ஸ் திரைப்பட விழாவில் “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” படத்திற்காக கிராண்ட் பிரிக்ஸ் (Grand Prix) விருது வென்ற முதல் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இயக்குநர் பாயல் கபாடியா.

சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

ஜெனிவா ஓபன் ஏடிபி 250 டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் நார்வேயின் கேஸ்பா் ரூட்.

ஆசிய சீனியா் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியா் என்ற சாதனையை படைத்துள்ளார் தீபா கா்மாகா்.

பிரெஞ்சு கோப்பை கால்பந்து போட்டிநடப்பு சாம்பியன் பாரீஸ் செயின்ட் ஜொ்மன் அணி, லியான் அணியை வீழ்த்தி பட்டத்தை வென்றது. 

 

Exit mobile version